“ஜூலை 28 ரிலீஸ் DD ரிட்டர்ன்ஸ் “

 “ஜூலை 28 ரிலீஸ் DD ரிட்டர்ன்ஸ் “

விஜய் டிவியின் லொள்ளு சபா மூலம் பிரபலமான நடிகர் சந்தானம் நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி டாப் காமெடியனாக கலக்கிக் கொண்டிருந்தார். அறை எண் 305ல் கடவுள், கண்ணா லட்டு தின்ன ஆசையா, இனிமே இப்படித்தான் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய சந்தானம் தொடர்ந்து ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார்.  ஆனால், அவர் நடிக்கும் படங்கள் எல்லாமே தொடர்ந்து தோல்வியை தழுவி வரும் நிலையில், கடைசியாக சந்தானம் நடிப்பில் வெளியான பாரீஸ் ஜெயராஜ் திரைப்படம் காமெடியாகவும் சந்தோஷ் நாராயணன் இசையில் கானா பாடல்களிலும் கலக்கி ரசிகர்களை ஓரளவுக்கு என்டர்டெயின் செய்தது. அவர் நடித்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த தில்லுக்கு துட்டு மற்றும் தில்லுக்கு துட்டு 2 படங்களை இயக்குநர் ராம்பாலா இயக்கிய நிலையில், தில்லுக்கு துட்டு 3ம் பாகமான டிடி ரிட்டர்ன்ஸ் படத்தை இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கி உள்ளார்.

நடிகர் சந்தானம், சுரபி, மொட்டை ராஜேந்தர், ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த ஹாரர் காமெடி படத்தின் அட்டகாசமான டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருகிறது. கஜினி படத்தில் வில்லனாக நடித்த பிரதீப் ராவத் இந்த படத்தில் ஃபிரெஞ்சு பேய் வில்லனாக நடித்து மிரட்டி உள்ளார். நடிகர் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படங்கள் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. ஒரு சில படங்கள் காமெடி காட்சிகளுக்காக சுமாரான வெற்றியை பெற்றுள்ளன. கமர்ஷியல் வெற்றியை தில்லுக்கு துட்டு படம் கொடுத்துள்ள நிலையில், அதன் 3ம் பாகத்தை டார்கெட் செய்து நடித்து இந்த மாத இறுதியில் வெளியிட முடிவு செய்துள்ளார்.

யோகி பாபு மண்டேலா படத்தில் நடித்து நல்ல நடிகர் என்கிற பெயரை பெற்று விட்டார். நடிகர் சூரிக்கு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படம் சிறந்த நடிகராகவே மாற்றியுள்ளது. சமீபத்தில், மாரி செல்வராஜ் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படம் வடிவேலுவின் ஒட்டுமொத்த நடிப்புத் திறமையையும் வெளி கொண்டு வந்தது. ஆனால், அது போல சந்தானத்துக்கு இன்னமும் ஒரு சிறந்த படம் கிடைக்கவில்லை. ஆனால், தனக்கு தெரிந்த காமெடி ரூட்டை விடாமல் பிடித்து ரசிகர்களை மகிழ்விக்கும் வேலையை பார்த்து வரும் சந்தானம் அடுத்ததாக டிடி ரிட்டர்ன்ஸ் படத்தை ரிலீஸ் செய்ய ரெடியாகி உள்ளார்.

இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், சுரபி, மொட்டை ராஜேந்தர், ரெட்டின் கிங்ஸ்லி, மசூம் சங்கர், முனீஷ்காந்த், தீனா, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள காமெடி பேய் படமான டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. பேய் வீட்டில் நடக்கும் எஸ்கேப் ரூம் கேமில் கலந்து கொண்டால் நிறைய பணம் கிடைக்கும் என காதலியுடன் அங்கே சென்று பேய்களுக்கு மத்தியில் சிக்கிக் கொள்ளும் சந்தானம் எப்படி வெளியே வருகிறார் என்பது தான் படத்தின் கதை.
https://www.youtube.com/watch?v=7MnPeSmDoiE

டிரெய்லர் கடைசியில், வரும் அந்த சமந்தாவின் புஷ்பா படத்தில் இடம்பெற்ற “ஊ அன்டாவா” போர்ஷன் ரசிகர்களை குபீரென சிரிக்க வைப்பது கன்ஃபார்ம்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...