‘Friday hero’

 ‘Friday hero’

சுப்ரமணிய ஐயர் ஜெய்சங்கர்

பிறந்த தினம் இன்று

(12-07-1938)

கும்பகோணத்துக்காரர்

தகப்பனார் பெயர்

சுப்ரமணிய ஐயர்

தாயார் பெயர்

யோகாம்பாள் அம்மாள்

இவரது தகப்பனார்

திருநெல்வேலி கோர்ட்டில்

நீதிபதியாக இருந்தார்

அப்போது

ஜெய்சங்கர்

திருநெல்வேலியில் பிறந்தார்

நாடக நடிகர்

திரைப்பட நடிகர்

என்று பல திறமைகள் கொண்டவர்

ரசிகர்கள் இவரை

“மக்கள் கலைஞர்”

“தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்”

என்ற அடைமொழிகள் கொண்டு அழைத்தனர்

×××

மைலாப்பூர் பி.எஸ். ஹைஸ்கூலில்

உயர் நிலைப் பள்ளிக்கூடத்தில்

படித்தார்

சென்னை நியூ காலேஜில்

டிகிரி படித்தார்

சட்டம் படிக்கத் துவங்கினார்

ஆனால் நடிப்பின்மீது இருந்த ஆர்வத்தால்

அதை கைவிட்டார்

திரை உலகில் பெரிய

‘ஹீரோ’வாக வலம் வந்தாலும் படிப்பை முடிக்கவில்லையே என்ற வருத்தம் அவருக்கு இருந்தது

×××

“சோ” ராமசாமியின்

விவேகா பைஃன் ஆர்ட்ஸ் குழுவில் இணைந்து நடிக்கத் தொடங்கினார். பிறகு

“கூத்தபிரான்” கல்கி பைஃன் ஆர்ட்ஸ் குழுவில் இணைந்து

“கல்கியின்” அமர தாரா நாடகத்தில் நடித்தார்

×××

1965ல் ஜோசப் தளியத் தயாரித்த இரவும் பகலும்

என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்

அது ஒரு காலம்

“வெள்ளிக்கிழமை” வந்தால்

கண்டிப்பாக ஜெய்சங்கர் படம் வெளியாகும் என்ற நம்பிக்கை இருந்தது

அதனால் இவர் ‘Friday hero’

(வெள்ளிக்கிழமை நாயகர்) எனவும் அழைக்கப்பட்டார்

×××

தொடர்ந்து இருநூறுக்கும்

மேற்பட்ட படங்களில் நடித்தவர் ஜெய்சங்கர்

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்ற ஜாம்பவான்கள் நடித்த அதே காலத்தில் இவரும் தன் இயல்பான நடிப்பால்

நிறைய ரசிகர்களை வைத்திருந்தார்

இவரது சமகால நடிகர்கள் முத்துராமன், சிவகுமார்,

ராஜன், ரவிச்சந்திரன் போன்றவர்கள்

நூற்றுக்கும் மேற்பட்ட

திரைப்படங்களில் நடித்த பிறகு ரஜினிகாந்த் நடித்த

முரட்டுக்காளை படத்தில்

வில்லனாக நடித்து

பாராட்டுக்களைப் பெற்றார்

அதன் பிறகு பல படங்களிலும்

வில்லனாகவும்

குணச்சித்திர நடிகராகவும் நடித்தார்

பல திரைப்படங்களில் துப்பறிபவராகவும்,

காவலராகவும்

வேடம் ஏற்று நடித்ததால் இவரை “தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட்” என்று ரசிகர்கள் அழைத்தனர்

×××

Wait until dark என்று ஒரு ஆங்கிலப் படம்

இதனைத் தழுவியெடுத்த படம் “இதயம் பார்க்கிறது”

இது இவரது நூறாவது படம்

கண் பார்வையிழந்தவர் வேடத்தில் நடித்து இருப்பார்

அப்போது தனது குழந்தைகளில் ஒருவரை கண் டாக்டராக படிக்க வைக்க வேண்டும்

என்று ஆசைப்பட்டு

தன் மூத்த மகனை

கண் டாக்டருக்கு படிக்க வைத்தார்

×××

14-01-1965 பொங்கல் பண்டிகை தினத்தில்

இவரது முதல் படம்

இரவும் பகலும்

திரையிடப்பட்டது

அதே தினத்தில்

எம்ஜிஆர் நடித்த

எங்க வீட்டுப் பிள்ளை

சிவாஜி நடித்த

பழநி படங்கள் திரைக்கு வந்தன.

இந்தப் போட்டியில்

இவரது படம் வசூலைத்தந்தது

×××

அறிமுகமான முதல் ஆண்டிலேயே

இரவும் பகலும், பஞ்சவர்ணக்கிளி, நீ

குழந்தையும் தெய்வமும் என்று நான்கு படங்களில் நடித்தார் ஜெய்சங்கர்

இந்த நான்கு படங்களுமே ஹிட்

×××

பல சாதாரணமான

திரைத்துறை தொழிலாளர்களை

படத் தயாரிப்பாளராக்கியவர்

ஜெய்சங்கர்

இவரை வைத்துப்படம் எடுத்த ஒரு தயாரிப்பாளர்

படத்தை வெளியிடுவதற்கு பணமின்றி சிரமப்பட்டார்

அந்த தயாரிப்பாளரை வீட்டுக்கு அழைத்து வந்து பீரோவில் இருந்து தேவையான பணத்தை எடுத்துக்கொடுத்து நீங்க படத்தை வெளியிடுங்கள்

அடுத்த படத்துக்கும் பூஜை செய்யுங்கள். நான் கால்ஷீட் கொடுக்கிறேன் என்று கூறினார்

×××

இவரது வீட்டில் பீரோவைத் திறந்தால் “திரும்பி வந்த” காசோலைகள் குவிந்திருக்கும்

அவைகளின் இன்றைய மதிப்பு பல கோடி ரூபாய்.

யாரையும் “ஹாய்” என்று அழைத்து சகஜமாகப் பேசுவார்

×××

முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாளின் போது அவர்களை கருணை இல்லத்திற்கு அழைத்து சென்று தன்னுடைய சொந்த செலவில் விருந்து ஏற்பாடு செய்வார்.

தான் இப்படி செய்தால் மற்றவர்களும் இதேபோல் செய்ய முன் வருவார்கள் என்று கூறுவார்

×××

ஜெய்சங்கர் தொடர்ச்சியாக வெற்றிப் படங்களை

கொடுத்துக்கொண்டு இருந்தபோது

சிலர் நீங்கள் ஏன் சம்பளத்தை உயர்த்தி வாங்கக்கூடாது

என்று கேட்டனர்

ஒரு அலுவலகத்தில் வேலை செய்தால் எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்களோ

அதை விட தயாரிப்பாளர் அதிகமாகவே கொடுக்கிறார்கள் என்று கூறுவார்

×××

ஒரு சமயம் தமிழ்நாட்டில் பலத்த புயல் மழையால் வெள்ளம் வந்தது

அப்போது எம்ஜிஆர்

முதல்-அமைச்சராக இருந்தார் அவரை ராமாபுரம் தோட்டத்தில் சந்தித்து பத்தாயிரம் ரூபாய்

நன்கொடை வழங்கினார்

×××

அனைத்து நடிகர்

நடிகைகளுடனும் நட்புரிமையோடு பழகுவார்

எம்.ஜி.ஆர்.,

சிவாஜியோடு

அவருக்கு நெருக்கமான உறவு இருந்தது

×××

(03-06-2000) அன்று

“குவைத்தில்” நடந்த

கலை நிகழ்ச்சியில் பங்கேற்றார்

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது

அங்கிருந்து சென்னைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்தார்கள்

பலனின்றி அவர் காலமாகிவிட்டார்

ஜெய் என்றால் பண்பாளர்

– சீதா நாராயணன்

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...