தோனி தயாரிப்பில் ஹரீஷ் கல்யாண் நடிக்கும் ‘எல்ஜிஎம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிரபல கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைவருமாகிய MS டோனி தயாரிக்கும் முதல் திரை படம் LGM எல்ஜிஎம் எனப்படும் ‘லெட்ஸ் கெட் மேரிட்’ . இப்படத்தின் ஆடியோ ட்ரைலர் நிகழ்வு சென்னையில் நடந்துள்ளது. இந்த நிகழ்வில் தோனி தனது மனைவி ஷாக்ஷியுடன் கலந்து கொண்டார்.

கிரிக்கெட்டைத் தாண்டி பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார் தோனி. அப்படி அவர் திரைத் துறையிலும் படங்களை தயாரிக்க முன்வந்துள்ளார். தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம், தமிழில் ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘எல்ஜிஎம்’ எனப்படும் ‘லெட்ஸ் கெட் மேரிட்’ என்ற படத்தை தயாரித்துள்ளது.
