நடராஜன் கிரிக்கெட் மைதானம் திறப்பு விழா…

நடராஜன் கிரிக்கெட் மைதானம் திறப்பு விழா… தினேஷ் கார்த்திக், நடிகர் யோகி பாபு ஆகியோர் பங்கேற்பு

தனது கிரிக்கெட் அகாடமி மூலம் திறமையுள்ள, கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுள்ள கிராமபுற இளைஞர்களை அதிகம் உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைத்துள்ளார் கிரிக்கெட் வீரர் நடராஜன்.

தனது சொந்த ஊரான சின்னப்பம்படியில், கிரிக்கெட் வீரர் நடராஜன் உருவாக்கிய கிரிக்கெட் ஸ்டேடியத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. 

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்தவர், கிரிக்கெட் வீரர் டி.நடராஜன். இவர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் சிறப்பாக விளையாடி கவனம் ஈர்த்தவர்.

கடந்த 2020ஆம் ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய கிரிக்கெட் அணியில் வலை பயிற்சி பந்துவீச்சாளராக இடம்பெற்றார் நடராஜன். அப்போது அந்த தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் காரணமாக விலகியதைத் தொடர்ந்து, அதே தொடரில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணியில் இடம்பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

குறிப்பாக நடராஜனின் பந்து வீச்சில் யார்க்கர்கள் பெரிதும் பேசப்பட்டன. நடராஜனின் அசத்தல் ஆட்டம், இந்திய அளவில் மட்டுமல்ல சர்வதேச அளவிலும் பல்வேறு நட்சத்திர வீரர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில் தனது கிரிக்கெட் அகாடமி மூலம் திறமையுள்ள, கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுள்ள கிராமபுற இளைஞர்களை அதிகம் உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் நடராஜன்.

இதற்காக நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமத்தில் சொந்தமாக கிரிக்கெட் மைதானம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

கிரிக்கெட் விரர் நடராஜன் கட்டியுள்ள கிரிக்கெட் மைதானத்தை தினேஷ் கார்த்திக் திறந்துவைத்தார்

நடராஜன் உருவாக்கியுள்ள இந்த மைதானத்தில், நான்கு செண்டர் பிட்ச்சுகள், இரண்டு பயிற்சி தடங்கள், ஜிம், கேண்டீன் மற்றும் 100 பார்வையாளர்கள் அமரக்க்கூடிய வகையில் ஒரு மினி கேலரி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

சின்னப்பபம்பட்டி கிராமத்தில் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த நடராஜன் கிரிக்கெட் மைதானம் முழுமையாக தயாராகிவிட்ட நிலையில் இன்று காலை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக், நடிகர் யோகிபாபு, சென்னை சூப்பர் கிங்ஸ் சிஇஒ விஸ்வநாதன், தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் தலைவர் அசோக் சிகாமணி, செயலாளர் பழனி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்

One thought on “நடராஜன் கிரிக்கெட் மைதானம் திறப்பு விழா…

  1. இவர் என்னதான் சிறப்பாக கிரிக்கெட் விளையாடினாலும் இவர் பிராமனர் இல்லாதவர் என்பதால் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை மேல் இடத்தில செலக்சன் கமிட்டி இவர் பெயரை கன்சிடர் கூட பண்ணல. அதனால் நடராசன் மேல ஒரு இரக்கம் வருது இவரு தலைகீழ நின்னாலும் இந்தியா டீம்ல இடம் கிடைக்காது போட முடியாது. ஆனால் இவர் துவண்டு விடாமல் தான் புறக்கணிக்கப்படுகிறோமென்ற உணர்வு இல்லாமல் விளையாட்டு மீது உள்ள ஈடுபாட்டினால இளைஞர்கள் அதிக அளவில் கிரிக்கெட் விளையாட வர வேண்டும் என்பதற்காக சொந்த செலவுல இந்த ஸ்டேடியம் கட்டியுள்ளார் அவருடைய முயற்சிகள் திருவினையாகும். வாழ்த்துக்கள் நடராஜன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!