திருப்பதி போறவங்களுக்கு இனி ஜாலிதான்.. அடியோடு குறைந்த கூட்டம்…

 திருப்பதி போறவங்களுக்கு இனி ஜாலிதான்.. அடியோடு குறைந்த கூட்டம்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் தரிசன நேரமும் குறைந்துள்ளது. டோக்கன் இல்லாத பக்தர்கள் 12 மணிநேரத்தில் ஸ்ரீவாரி தரிசனம் செய்வதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் தரிசன நேரமும் குறைந்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான்

திருப்பதி ஏழுமலையான்

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு கோவில் கட்டப்பட்டுள்ள நிலையில் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

குறிப்பாக கடந்த சில மாதங்களாக கோடை விடுமுறை தொடங்கியது முதல் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குழந்தைகள், பெரியவர்கள் முதியவர்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் கடுமையான வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாமல் பல மணி நேரம் கால் கடுக்க வரிசையில் சாமி தரிசனம் செய்து வந்தனர்.

சில நேரம் பக்தர்களின் காத்திருப்பு நேரம் 2 நாட்களை கூட தாண்டியது. இதனால் பக்தர்களின் வசதிக்காக வேண்டி வார இறுதி நாட்களில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதேபோல் சுப்ரபாத சேவை மற்றும் பாவாடை சேவைகளிலும் தேவஸ்தான நிர்வாகம் மாற்றம் செய்தது. இதன்மூலம் சாமி தரிசனத்திற்கான நேரமும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது.

வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸில் 30க்கும் மேற்பட்ட கம்பார்ட்மெண்டுகள் பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. 4 முதல் 5 கிலோ மீட்டர் தூரம் வரை பக்தர்கள் வரிசையில் நின்றனர். இந்நிலையில் சுமார் 3 மாதங்களுக்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் குறைந்துள்ளது.
 மாடர்ன் லுக்கில் மிரட்டும் அஜித்தின் ரீல் மகள்… அனிகா சுரேந்திரனின் அசத்தல் க்ளிக்ஸ்!

12 மணி நேரத்தில்

12 மணி நேரத்தில்

டோக்கன் இல்லாத பக்தர்கள் 12 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்வதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD)அறிக்கைகள் தெரிவிக்கின்றன. செவ்வாய்க்கிழமை, வைகுந்தம் கியூ காம்பளக்ஸில் சுமார் 20 கம்பார்ட்மெண்டுகளில் மட்டுமே பக்தர்கள் இருந்தனர். முன்பெல்லாம் குறைந்தது 24 மணி நேரமாவது காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் தற்போது காத்திருப்பு நேரம் குறைந்திருப்பது தேவஸ்தான அதிகாரிகளை நிம்மதி அடைய செய்துள்ளது. முன்னதாக, செப்டம்பர் மாதத்திற்கான மின்னணு டிஐபி பதிவு மூலம் ஸ்ரீவாரி ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை வெளியிடுவதாக TTD அறிவித்தது. இதற்கான முன்பதிவு ஜூன் 19 ஆம் தேதி காலை 10 மணி தொடங்கிய நிலையில் ஜூன் 21 ஆம் தேதியான இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்தது.

நாளை முதல் டோக்கன்

நாளை முதல் டோக்கன்

மேலும் கல்யாணம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோத்ஸவம், சஹஸ்ர தீப அலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு ஜூன் 22 ஆம் தேதியான நாளை காலை 10 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கப்பிரதட்சிணம் டோக்கன்களை ஜூன் 23 ஆம் தேதி காலை 10 மணி முதல் முன்பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...