” தண்டட்டி ” இசை வெளியீட்டு விழா …!

 ” தண்டட்டி ” இசை வெளியீட்டு விழா …!

இயக்குனர் ராம்சங்கைய்யா இயக்கி நடிகர் பசுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள “தண்டட்டி ” திரைப்படம் வரும் ஜூன் 23ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை தி.நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தண்டட்டி’ . ஏ.வெங்கடேஷ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கியுள்ளார்.

கலை இயக்குனர் வீரமணி பேசும்போது, “தண்டட்டி இன்னும் எவ்வளவு நாள் இருக்குமோ தெரியாது. நாங்கள் பல வருடங்களாக பார்த்து பழகிய பொருள். அதற்கு திரை வடிவம் கொடுத்துள்ளார் இயக்குநர் ராம் சங்கையா. அவரது வாழ்க்கை தான் இந்த படம். இந்த படத்தில் ஒரு வீடு தான் அதிக காட்சிகலில் இடம்பெற்றுள்ளது. அதற்காக இயக்குனர் ஒரு பொருத்தமான வீட்டை தேர்வு செய்து வைத்திருந்தார். ஆனால் படப்பிடிப்புக்கு செல்லும்போது அங்கே புதிய வீடு கட்டி விட்டனர். ஆனால் இயக்குனர் விரும்பிய அதே மாதிரி வீடு செட் அமைத்துக் கொடுத்தோம். செட் என யாருமே அதை நம்பவில்லை. அதில் எனக்கு சந்தோசம்” என்றார்.

பாடலாசிரியர் ஏகாதசி பேசும்போது, “18 வருடமாக பாடலாசிரியராக இருக்கிறேன். நான் சினிமாவில் பாடலாசிரியராக நுழைவதற்கு நடிகர் பசுபதி தான் காரணம். அது அவருக்கே கூட தெரியுமா இல்லை மறந்து இருப்பாரா என்று தெரியவில்லை. விருமாண்டி படப்பிடிப்பு சமயத்தில் நான் எழுதிய பாடலை என் நண்பன் பாடி காண்பித்தபோது அதைக்கேட்டு ஆச்சரியப்பட்ட பசுபதி, அவர் புதிதாக ஹீரோவாக நடிக்கும் படத்தில் இந்த பாடலை பயன்படுத்திக்கொள்ள விரும்பினார். ஆனால் சில சூழ்நிலையால் அந்த படத்தில் அவர் நடிக்க முடியாமல் போனது. இந்த படத்தில் நகைச்சுவை, எதார்த்தம், மண்வாசனை என எல்லா அம்சங்களும் நிறைந்துள்ளது. இயக்குநர் சங்கையா சொன்ன ஒரு காதல் என்னை நடுங்க வைத்து விட்டது. இதில் மூன்று பாடல் எழுதிக் கொடுத்துள்ளேன். பட்டினத்தார் பாடலும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

இசையமைப்பாளர் K.S.சுந்தரமூர்த்தி பேசும்போது, “இயக்குநர் ராம் சங்கையாவுடன் 2019ல் இருந்து பயணித்து வருகிறேன். இந்த படத்தின் கதை சொல்லும்போது அந்த கிராமத்து மொழியில் அழகாக சொல்லுவார். தண்டட்டி பாடலுக்காக டியூன் எதுவும் போடவில்லை. பாடலாசிரியர் ஏகாதசி எழுதிய சந்தத்திற்கு இரண்டு விதமாக வெர்சனில் அந்த பாடலை உருவாக்கினோம். அது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. காக்கி பையன் பாடலுக்கு நிறைய பேரை பாட வைத்து அதில் அந்த கிராமத்து மண்ணுக்கு ஏற்ற பாடகர் மீனாட்சி ராஜா என்பவரை தேர்வு செய்து பாட வைத்தோம்” என்று கூறினார்.

நடிகை அம்மு அபிராமி பேசும்போது, “இந்த கதையை இயக்குநர் சொன்னாலும் நான் தான் இந்த படத்தில் நடிப்பேன் வேறு யாரையும் தேர்வு செய்யக் கூடாது என சொல்லி விட்டேன். இந்த படத்தில் கிராமத்தில் இவ்வளவு அப்பத்தாக்களுடன் நடித்தது மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. பசுபதி சாரின் மிகப்பெரிய ரசிகை நான். அவருடன் சேர்ந்து நடித்தது மகிழ்ச்சி” என்று கூறினார்

நடிகர் விவேக் பிரசன்னா பேசும்போது, “தங்கமான மனிதர்கள் சேர்ந்து தங்கத்தை பற்றி சொல்லி இருக்கும் படம் இது. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தில் இது எனக்கு இரண்டாவது படம். பசுபதியும் ரோகினியும் இந்த படத்தில் நடிக்கிறார்கள் என்றதுமே உடனே இந்த படத்தின் நடிக்க சம்மதித்து விட்டேன். இதுவரை நான் பண்ணாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஒரு மோசமான குடிகாரன் கதாபாத்திரம் எனக்கு.. இதற்காக தாடி வளர்க்க வேண்டும் என என்னிடம் கூறினார் இயக்குநர் ராம் சங்கையா. ஆனால் நான் அப்போது கிளீன் ஷேவ் செய்திருந்தேன். ஆனாலும் இயக்குநரிடம் குடிகாரன் என்றால் தாடி வைத்து தான் இருக்க வேண்டுமா, எங்கள் ஊரில் கிளீன் ஷேவ் செய்த ஒரு நபர் தினசரி காலையிலேயே குடிக்க வந்து விடுவார் என்று கூறி அவரை கன்வின்ஸ் செய்து இந்த கதாபாத்திரத்தை அவரிடம் இருந்து பிடுங்கி நடித்தேன்” என்று கூறியுள்ளார்.

ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி பேசும்போது, “படத்தின் டைட்டிலில் இருக்கும் பலம் படத்திலும் இருக்கும். ஒரே கட்ட படப்பிடிப்பாக நடத்தி முடிக்க வேண்டி இருந்ததால ஒரு ஷாட் கூட வீணாக்காமல் படம் ஆக்கினோம். இயக்குநர் ராம் சங்கையா இது போன்று இன்னும் நிறைய கதைகளை வைத்துள்ளார்” என்று கூறினார்.

கதையின் நாயகனாக முதன்மை கேரக்டரில் பசுபதி மற்றும் முக்கிய வேடங்களில் ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, செம்மலர் அன்னம், பூவிதா, முகேஷ் உள்ளிட்ட பல நடித்துள்ளனர். குறிப்பாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த தண்டட்டி அணிந்த மூதாட்டிகள் பலரும் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.

இந்தப்படத்திற்கு K.S. சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தின் படத்தொகுப்பை சிவா நந்தீஸ்வரன் மேற்கொண்டுள்ளார். கலையை வீரமணி கவனித்துள்ளார்.

இந்த நிகழ்வில் அனைவரையும் வரவேற்று பேசிய தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் பேசும்போது, “இது உண்மையிலேயே சந்தோஷமான ஒரு விழா. இயக்குநர் ராம் சங்கையா கதை சொன்ன உடனே இந்த படம் பண்ண வேண்டும் என முடிவெடுத்து விட்டேன். மண்வாசனை கலந்த கதை. அதில் உள்ள உண்மைத்தன்மையுடன் அவர் பார்த்து வளர்ந்த நிகழ்வுகளை கொஞ்சம் கற்பனையில் சேர்த்து புனைவு கதையாக உருவாக்கி உள்ளார். ரோகிணி வயதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேனியில் ஒரே கட்ட படப்பிடிப்பாக இதை நடத்தி முடித்துள்ளோம்.

இயக்குநர் ராம் சங்கையா பேசும்போது, ” பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கு முழு காரணமாக இருந்தவர் இணை தயாரிப்பாளர் ஏ.வெங்கடேஷ் தான். இந்த கதையை கேட்டதுமே தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் உடனே ஓகே செய்தார். நான் நேசிக்கும் நடிகர்களில் பசுபதியும் ஒருவர். இந்த படத்திற்கு நான் மம்முட்டி அல்லது பசுபதி என வைத்திருந்தேன். மம்முட்டியை பிடிக்க முடியவில்லை. அவர் நடித்த படங்களில் மிகச்சிறந்ததாக இந்த தண்டட்டி இருக்கும் .

கட்டு​ரைஆக்கம்

மினி

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...