பொருளாதாரக் குற்றங்கள் நாட்டு வளர்ச்சிக்குத் தடை -உயர் நீதிமன்றம்
“பொருளாதார குற்றங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு நவீன அச்சுறுத்தலாக உள்ளது” என்று கூறியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
ஐ.டி.பி.ஐ. வங்கியில் ₹600 கோடிக்கு மேல் மோசடி செய்ததாகப் பல வழக்குகளை எதிர்கொண்டுள்ளதால், தொழிலதிபர் ‘ஏர்செல்’ சி.சிவசங்கரன், தொழில் பயணமாக செஷல்ஸ் மற்றும் பாரிஸ் செல்ல அனுமதி மறுத்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
தொழிலதிபர் ‘ஏர்செல்’ சி.சிவசங்கரன் ஐ.டி.பி.ஐ. வங்கியில் ₹600 கோடிக்கு மேல் மோசடி செய்ததாகக் கூறுகிறது சி.பி.ஐ. மற்றும் அமலாக்க இயக்குநரகம் மற்றும் தீவிர மோசடி விசாரணை அலுவலகம்.
நீதியரசர் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, சிவசங்கரன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் தீவிரம், குற்றப் பரிவர்த்தனைகளில் பெருமளவிலான பொதுப் பணம் ஈடுபடுத்தப்பட்டமை மற்றும் இந்தியாவிற்கும் சீஷெல்ஸ் நாட்டுக்கும் இடையில் ஒப்பந்தம் இல்லாமை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு தொழிலதிபரின் கோரிக்கையை நிராகரித்தார்.
மேலும் மனுதாரர் சிவசங்கரன், வங்கியின் முன்னாள் ஊழியர்களுடன் கூட்டு சேர்ந்து மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் சீஷெல்ஸ் குடியுரிமையைப் பெற்றிருந்தார், தன்னை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர் அதிகாரி என்று கூறி வெளிநாடு செல்ல நாடினார்.
எனவே, வெளிநாடு செல்ல அனுமதி கோரிய தற்போதைய மனுவின் பின்னணியில் உள்ள நோக்கம், குறிப்பாக அவருக்கு எதிரான விசாரணை ஒரு முக்கியமான கட்டத்தில் இருந்தபோது, இந்தியாவை விட்டு விலகி இருக்க வேண்டும் என்பதே நோக்கம். அவர் இந்தியாவில் தனக்கு பாரம்பரிய தொடர்பு இருப்பதாக கூறியிருந்தாலும், சென்னையில் உள்ள ஒரு ஹோட்டல் அறையை மட்டுமே அவர் தனது குடியிருப்பு முகவரியாக வழங்கியிருப்பதாக நீதிபதி கூறினார்.
இந்த வழக்கின் உண்மைகள் குறித்து நீதிபதி கூறியதாவது, 2017ஆம் ஆண்டு தலைமை விஜிலென்ஸ் கமிஷன், பின்லாந்தைச் சேர்ந்த வின் விண்ட் ஓய் நிறுவனத்திற்கு ஐ.டி.பி.ஐ. வங்கிக் கடன் வழங்கியது குறித்து விசாரணை நடத்துமாறு சி.பி.ஐ.யிடம் கோரினார்.
அந்த நிறுவனத்துக்கு கடந்த 2010-ம் ஆண்டு வழிகாட்டுதல்களை மீறி ₹322.40 கோடியை வங்கி அனுமதித்தது விசாரணையில் தெரியவந்தது. செயல்படாத சொத்தாக அறிவிக்கப்பட்டபோதிலும், 2014ல் ஒரு குழும நிறுவனத்திற்கு மேலும் ₹530 கோடி கடனாக வழங்கப்பட்டிருக்கிறது.
மனுதாரருக்கும் மற்றவர்களுக்கும் இடையேயான சதியால் வங்கிக்கு ₹600 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்ததால், மனுதாரருக்கு எதிராக அமலாக்க இயக்குநரகம் மற்றும் தீவிர மோசடி விசாரணை அலுவலகம் தனித்தனியாக விசாரணையைத் தொடங்கி, ‘லுக் அவுட் நோட்டீஸ்’ வெளியிடப்பட்டது. (லுக் அவுட் நோட்டீஸ் என்றால் குற்ற வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நபர், சொந்த நாட்டைவிட்டு வேறு நாடுகளுக்குப் பயணம் செல்வதை அல்லது வெளிநாட்டிலிருந்து உள்நாட்டிற்கு வருவதைத் தடுக்கும் நோக்கத்துடன், இந்தியக் காவல் துறை உள்ளிட்ட சில துறைகளால் விடுக்கப்படும் சுற்றறிக்கையானது ‘கவன ஈர்ப்பு சுற்றறிக்கை’ (Look Out Circular – LOC) எனப்படுகிறது) உயர் நீதிமன்றம் 2019இல் லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்ய மறுத்துவிட்டது. மனுதாரர் தொடங்கிய முதல் சுற்று வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் இந்த உத்தரவு உறுதி செய்யப்பட்டது.
இப்போது, அவர் தனது லுக் அவுட் நோட்டீஸ் இருப்பதைக் குறைக்கும் வகையில், மாற்றியமைக்கப்பட்ட கோரிக்கையுடன் இரண்டாவது சுற்று வழக்கைத் தொடங்கினார்.
இந்த வாதத்தால் ஈர்க்கப்படாத நீதிபதி சந்திரா, மனுதாரர் தற்போது நீதிமன்றத்தை அணுகி லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்ய கோரி இருப்பதாகவும், அத்தகைய நிவாரணம் வழங்குவதற்கு அவர் விரும்பவில்லை என்றும் தீர்ப்பு எழுதினார் நீதிபதி.