‘ரெடிமேட் இட்லி’ விற்பனை அறிமுகம்
துபாய் நகரில் செயல்பட்டு வரும் அன்னம் பேஸ்ட்ரி மற்றும் ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அன்னம் இடியப்பம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாகத் தற்போது புதிதாக ‘ரெடிமேட்’ இட்லி விற்பனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ரெடிமேட் இட்லியைப் பொதுமக்கள் வாங்கி சாப்பிட்டுவிட்டு தங்களது பணிகளுக்கு விரைவாகச் செல்ல முடியும். இது குறித்து அந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பைசல் முஹம்மது கூறியதாவது :
“எங்களது அன்னம் நிறுவனத்தின் மூலம் ஏற்கனவே இடியப்பம் உள்ளிட்ட பொருட்களுக்குப் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதற்காக வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட விற்பனையாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதிகரித்து வரும் இயந்திர யுகத்தில் நூடுல்ஸ் உள்ளிட்ட பொருட்களைப் பெரும்பாலோர் சாப்பிடுகின்றனர். இதனைத் தவிர்க்கும் வகையில் தமிழகத்தின் பாரம்பரிய இட்லி அனைவருக்கும் கிடைக்கும் வகையில் ‘ரெடிமேட்’ இட்லி விற்பனையை துபாயில் அறிமுகம் செய்துள்ளோம்.
இந்த இட்லியானது மிருதுவானதாகவும், சுவையானதாகவும் இருக்கும். குறிப்பாக எந்தவிதமான ரசாயனக் கலப்பும் இதில் கிடையாது. பொதுமக்கள் இதனை வாங்கி விரைவாகச் சாப்பிட்டுவிட்டு தங்களது பணிகளுக்குத் திரும்ப முடியும். இந்த மெஷின் மூலம் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் இட்லிகள் வரை தயாரிக்கும் வசதி உள்ளது. எனவே திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட விசேஷங்களுக்கும் இந்த இட்லியை வாங்கிப் பயன்படுத்த முடியும்.
இதனை வாங்கிச் செல்பவர்கள் வீட்டில் சாதாரண வெப்பநிலையில் இரண்டு நாட்கள் வரையிலும், பிரிட்ஜில் வைத்தால் இரண்டு வாரங்கள் வரையிலும் வைத்து சூடு செய்து சாப்பிடலாம். பொதுமக்கள் இந்த ரெடிமேட் இட்லியை வாங்கிச் சாப்பிட்டுப் பயனடையக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
தமிழகத்தில் ரெடிமேடாக ஈரமாவே கிடைக்கும்போது இட்லிக்கும் மெஷின் தேவையான என்ன?