“பக்தி வந்தால் புத்தி போச்சு” -பெரியார்

 “பக்தி வந்தால் புத்தி போச்சு” -பெரியார்

“ரமணர்தான் இறந்த பிறகு உயிர்த்தெழுந்தார். இயேசு அல்ல..” என இளையராஜா பேசியதற்கு பதிலாக, “ரமணர் உயிர்த்தெழுந்தார் என்பதுதான் டுபாக்கூர்” என்கிறார் ஜேம்ஸ் வசந்தன். ( James Vasanthan)

மேலும், “இளையராஜா ஒரு முட்டாள்; பண்பற்றவர்; கேவலமானவர்; ஈனபுத்தி உள்ளவர்; மட்டமானவர்; அசிங்கமாக பேசுபவர்” என்று காட்டமாக கூறியதோடு, ‘முதிர்ச்சி உள்ளவன் இப்படி பேசுவானா? பண்புள்ளவன் எவனாவது இப்படி பேசுவானா?’ என்று “ன்’ போட்டும் ஏசியிருக்கிறார், ஜேம்ஸ் வசந்தன்.

தவிர, “இப்படி நான் சொல்வதால் என்னவிதமான எதிர்க்கருத்துகள் வரும் என்பதை அறிந்தே சொல்கிறேன்!” என்கிறார்

இரண்டு கதைகளுமே உண்மையல்ல என்பதுதான், அறிவியலை நம்புவோர் கருத்து.

தவிர இளையராஜா இசை அமைத்த பாடல்களில் பலவற்றை ரசித்தாலும், அவரது அநாகரீக பேச்சு – செயல்களை நாம் கண்டித்து இருக்கிறோம்… நாகரீகமான வார்த்தைகளில். ‘திமிர் பிடித்த இளையராஜாவை ஜேம்ஸ் வசந்தன் ஏசட்டும்’ என நாம் நினைக்கவில்லை.

தனது விமர்சனங்களை நாகரீகமாக முன்வைக்கும் ஜேம்ஸ்.. தமிழார்வம் – இசையார்வம் கொண்ட ஜேம்ஸ்.. இப்படி தரம் தாழ்ந்து பேசிவிட்டாரே என்பதுதான் நமது வருத்தம்.

‘பக்தி வந்தால் புத்தி போச்சு’ என்று பெரியார் சொல்வது எத்தனை சரி! ( எந்த மத பக்தியாக இருந்தாலும்!)

போகட்டும்.. ‘எதிரிகளிடத்தும் அன்பு செய்’ என்று கிறிஸ்துவம் சொல்லி இருக்கிறதாமே!

ஜேம்ஸ் வசந்தனுக்கு தெரியாதா என்ன?

  • டி.வி.சோமு முகநூல் பக்கத்திலிருந்து…

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...