மயில் முட்டைகள் | காஞ்சனா ஜெயதிலகர் – மின்மினி மாத இதழ் – பிப் – 23
“எனக்குச் சின்னவனை நினைச்சாலும் கதி கலங்குது…. முன்னேர் போற வழியிலேதானே பின்னதும் போகும்..?”
அன்றைய அலங்காரத்தில் சேர்ந்திருந்த மல்லிகையின் மணம் அவனை இளக்க, அவளையும் அவளையும் வைக்கும் வகையில் அவன் கை அவளைச் சுற்றியது. இத்தனை வருட அனுபவ விவேகத்துடன் இதமாய் வருடியது.
நெகிழ ஆனால் திலகாவின் பொருமல் நிற்கவில்லை.
“இப்போ பசங்களின் ஹேர்கட் எனக்குச் சகிக்கலை ராஜ்…
கடுக்கன், டாட்டூஸ்னு இன்னும் சில கொடுமைங்களை திவா இதுவரை செய்யலை…
இனி காலேஜ் போக, அதெல்லாம் வேற சேருமோ..?’