சிவன், பைரவருக்கு ‘சம்புகாஷ்டமி’ சிறப்பு வழிபாடு

 சிவன், பைரவருக்கு ‘சம்புகாஷ்டமி’ சிறப்பு வழிபாடு

இன்று ஞாயிற்றுக்கிழமை (18-9-2022) தேய்பிறை அஷ்டமி தினமாகும். இன்று கால பைரவருக்கும், சிவபெருமானுக்கும் உகந்த நாளாகும். ஒவ் வொரு மாதமும் அஷ்டமிகளில் விரதம் இருந்து சிவபெருமானை பூஜை செய்து வழிபட்டு வந்தால் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். இந்த நாட்களில் காலையில் சிவபெருமானையும், மாலையில் சூரிய அஸ்த மனத்தில் கால பைரவரையும் தரிசனம் செய்து வழிபட்டால் மிகச் சிறந்த நன்மைகள் ஏற்படும். ஒவ்வொரு மாதத்திலும் வரும் அஷ்டமிக்கு ஒவ் வொரு பெயர் உண்டு.

அஷ்டமி திதிகளில் சுப காரியங்கள் (திருமணம், கிரகப்பிரவேசம், சொத்து வாங்குதல் உள்ளிட்டவை) மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால், இந்த திதிகளில் தெய்வீகக் காரியங் களுக்கு (தீட்சை பெறுவது, மந்திரங்கள் ஜெபிப்பது, ஹோமங்கள் உள்ளிட் டவை) உகந்தவை.

அந்த வகையில் இன்று தேய்பிறை அஷ்டமிக்கு சம்புகாஷ்டமி என்று பெயர். ‘சம்பு’ என்றால் சிவபெருமானைக் குறிக்கும். நாவல் மரங்களையும் குறிக்கும். நாவல் மரங்கள் நிறைந்த திருவானைக்கோயிலில் உள்ள ஈசனுக்கு சம்புகேஸ்வரர் என்று பெயர். இன்பத்தைத் தருபவன் என்றும் பொருள் இருக்கிறது. சம்பு என்பதற்கு சூரியன் என்ற ஒரு பொருளும் உண்டு. இந்த அஷ்டமி சம்புவின் தினமான ஞாயிற்றுக்கிழமை வருவது சிறப்பு. ஒவ்வொரு அஷ்டமிக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. இன்று அஷ்டமி விரதம் இருந்தால் ஆயுள் தோஷத்தை நீக்கும்.

அஷ்டமி திதியில் ஸ்ரீபைரவருக்கு பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தி னால் தீர்க்க முடியாத தொல்லைகள் அனைத்தும் அகலும்.

பைரவரை வணங்கினால், இழந்த செல்வங்களை மீண்டும் பெறலாம். தொழிலில் வளர்ச்சி காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும், செல்வ செழிப்போடு வாழலாம்.

சிருஷ்டிப் பிரபாவத்தை விஸ்தாரமாகச் சொல்லி முடித்த சூதர் என்ற முனிவர், சிவபெருமானுக்குப் பிடித்தமான அஷ்டமி விரதத்தைப் பற்றி விவரிக்கலானார். ஒவ்வொரு மாதமும் அஷ்டமிகளில் உபவாசமிருந்து சிவபெருமானைப் பூஜிப்பவன் அவரைத் திருப்திப்படுத்தியவனாகி, சகல சௌபாக்கியங்களையும் அடைகிறான்.

தேய்பிறை அஷ்டமியில் பைரவரை ஏன் வணங்க வேண்டும் என்றால் அஷ்ட லட்சுமிகளும் அஷ்டமி அன்றுதான் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியைப் பெற்று மக்களுக்குச் செல்வங்களை வழங்கி வருகின்றனர் என்பதாக ஐதீகம். எனவே, தேய்பிறை அஷ்டமி நாளில், பைரவரை வணங்கினால், அஷ்டலட்சுமியரின் அருளும் கிடைக்கும்.

தேய்பிறை அஷ்டமி நாளில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், செல்வ கடாட்சம் கிடைக்கப் பெறலாம். நம் பாவங்கள் விலகி, புண்ணியங் கள் பெருகும்.

நீண்டநாளாக வர வேண்டிய பணம் வந்து சேரும். தர வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலை உருவாகிவிடும். எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும் தீர்ந்துவிடும். வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் தீரும். பைரவ பெருமான், ராகு-கேது எனப்படும் பாம்புகளை பூனூலாகத் தரித்தும், சந்திரனை சிரசில் வைத்தும், சூலம், மழு, பாசம், தண்டம் ஏந்தி காட்சி தருபவராகிறார். காலமே உருவான பைரவரின் திருவுருவத்தில் பன்னிரெண்டு ராசிகளும் அடக்கம். அதனால் சனியின் தாக்கம் தீரும்.

வழிபாட்டு முறை

செவ்வாடை சாற்றி, சிவப்பு அரளிப்பூ மாலை போட்டு, வெல்லம் கலந்த பாயசம், உளுந்து வடை, பால், தேன், பழம் வைத்து, வெள்ளைப் பூசணிக் காயில் நெய்விட்டு தீபம் ஏற்றி விபூதி அபிஷேகம் செய்து வழிபட சகல யோக பாக்யங்கள் கூடிவரும்.

தேங்காய் மூடி விளக்கு

ஒரு முழு தேங்காயை உடைத்து அதில் குடுமி இருக்கும் பக்கம் பிய்த்தால் அதில் மூன்று கண் போன்ற அமைப்பு இருக்கும்.

அந்தக் கண் பக்கம் இருக்கும் மூடியில் ஐந்துவிதமான எண்ணெய் அதாவது, இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண் ணெய், பசு நெய் சேர்த்து திரி போட்டு

விளக்கேற்ற சனி தோஷங்கள், ஏழரைச்சனி, அஷ்டம சனி தாக்கங்கள் நீங்கும்.

போட்டி, பொறாமை, வயிற்றெரிச்சல் மூலம் வரக்கூடிய தோஷம் கழியும். காத்து, கருப்பு, கெட்ட சேஷ்டைகள், துர் ஆவிகள் அண்டாது என்பது ஐதீகம்.

வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும். தொழில் செய்பவர் களுக்கு வருமானம் அதிகரிக்கும்.  வீட்டில் தரித்திரம் விலகும். சுபிட்சம் குடிகொள்ளும்.

இன்று (18-9-2022) மஹாளய வியதீபாதம்

நட்சத்திரங்கள் 27. யோகங்களும் 27. இந்த இருபத்தேழு யோகங்களில், வியதீபாதம் என்கின்ற யோகமும் உண்டு. ஒவ்வொரு மாதத்திலும் இந்த வியதீபாதம் என்றைக்கு வருகிறதோ, அன்றைக்கு முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். சாதாரண தர்ப்பணத்தைவிட இந்த நாளில் செய்கின்ற தர்ப்பணம் பத்து மடங்கு அதிகப்  பலனைத் தரும். மஹாளய பட்சத்தில் இந்த யோகம் என்றைக்கு வருகிறதோ, அன்றைக்கு அவசியம் முன்னோர்களை நினைத்து நீத்தார் கடன் செய்ய வேண்டும். அந்த நாள் இன்று.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...