முதல் இந்திய சுயமரியாதைப் போராளி
ஒடிசா மாநிலம் கட்டாக்கில், 1897 ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் நாள், வங்காள இந்துக் குடும்பத்தில் பிறந்தார் சுபாஷ் சந்திரபோஸ். சுமார் 27 தலைமுறைகளாக, வங்க மன்னர்களின் படைத் தலைவர்களாகவும், நிதி மற்றும் போர் அமைச்சர் களாகவும் பணியாற்றிவந்த பெருமை மிக்கது இவரது குடும்பம். இவரது தாயார் பிரபாவதிதேவி. 8 ஆண் பிள்ளைகளையும், 6 பெண் பிள்ளைகளையும் கொண்ட இக்குடும்பத்தில், ஒன்பதாவது குழந்தையாக சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார்.
கட்டாக்கிலுள்ள பாப்டிஸ்ட் மிசன் ஆரம்பப் பள்ளியில் இணைந்த சுபாஷ், ஏழு ஆண்டுகள் அங்கு கல்வி பயின்றார். பின்னர், தன் உயர் கல்வியை கொல்கத்தா ரேவன்ஷா கல்லூரியில் தொடங்கிய சந்திர போஸ், 1913 தேர்வில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சிறந்த மாணவராகத் தேறினார்.
லண்டன் சென்று படித்து சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்ற நிலையிலும் அந்தப் பணியைத் தூக்கியெறிந்துவிட்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டவர் சுபாஷ் சந்திர போஸ். பார்வைக் குறைபாடு என்று ராணுவத்தில் சேர்த்துக்கொள்ள அனுமதி மறுக்கப்பட்ட அந்த இளைஞர் பின்பு ஒரு ராணுவத் தையே தலைமையேற்று நடத்தினார். காந்தியின் அகிம்சைப் போராட்ட முறைக்கு மாறான ஒரு வழிமுறையை சுபாஷ் சந்திரபோஸ் தேர்வு செய்தார்.
இரண்டாம் உலகப் போர் நடைபெற்றபோது, வெளிநாடுகளில் போர்க் கைதி களாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.
நேதாஜி தமிழகத்தின் மனம்கவர்ந்தவர். சிங்கப்பூரில் இவர் இந்திய தேசிய ராணுவத்துக்குத் தலைமையேற்றபோது ராணுவத்துக்காகத் தங்களது நகை களைக் கழற்றிக் கொடுத்தவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்ப் பெண்கள். ராணுவத்தில் ஜான்சி ராணி பெயரிலான பெண்கள் படைப் பிரிவுக்குத் தலைமை யேற்றவர் தமிழகத்தைச் சேர்ந்த கேப்டன் லட்சுமி.
1939ம் ஆண்டு காங்கிரஸிலிருந்து வெளியேறிய நேதாஜி அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியைத் தோற்றுவித்தார். நேராக சென்னை வந்த அவர் மெரீனா கடற்கரையில் நடந்த கூட்டத்தில் பேசினார். 1939ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி நடந்த அந்தக் கூட்டத்தில்தான் தமிழகக் கிளையை அவர் தொடங்கினார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரைத் தலைவராக அறிவித்தார்.
முத்துராமலிங்கரைப் புகழ்ந்து பேசிய நேதாஜி, தென்னகத்து போஸ் தேவர் என் றும் புகழாரம் சூட்டினார். தேவரின் தலைமையில் தமிழகத்தில் பார்வர்ட் பிளாக் கட்சி பொலிவு பெற்றுத் திகழ்ந்தது.
நேதாஜி தோற்றுவித்த இந்திய தேசிய ராணுவத்தில் முதலில் போய்ச் சேர்ந்து அவரது கரத்தை வலுப்படுத்தியவர்கள் தமிழர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் 1945 ஆகத்து 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாகவும் அல்லது உருசியாவிற்குச் சென்று 1970களில் இறந்துவிட்டதாக வும் அல்லது ஒரு துறவியின் வடிவில் வடஇந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன. 1945 ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது, போஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியது.
இந்திய அரசால் நியமிக்கப்பட்டு இதைப் பற்றி விசாரித்த முகர்ஜி கமிஷன், நேதாஜி அவ்விமான விபத்தில் இறக்கவில்லை எனத் தெரிவித்துவிட்டது. நோதாஜி இறப்பு கண்டுபிடிக்கமுடியாமல் போனாலும் இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகஸ்ட் 18, 1945.
அடிமை இந்தியாவில் வெள்ளையனுக்கு எதிராகப் பேச பயந்த காலத்தில் அவ னுக்கு எதிராக கப்பல் கட்டி மிளர வைத்தவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம் பரனார். அதற்கும் ஒருபடி மேலே சென்று அடிமை இந்தியாவுக்கு எதிராக பிரிட் டிஷ் அரசுக்கு தனிப்படையை அமைத்து நெருக்கடி கொடுத்தவர் இந்திய முதல் சுயமரியாதைப் போராளி சுபாஷ் சந்திரபோஸ். அவர் நினைவைப் போற்றுவோம்.