ஆன்லைன் சூதாட்டம்… தொடரும் தற்கொலைகள்! அலட்சியம் ஏன்?

 ஆன்லைன் சூதாட்டம்… தொடரும் தற்கொலைகள்! அலட்சியம் ஏன்?

20 சவரன் நகையை விற்று ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பவானி

கடந்த ஓராண்டுக்கு முன்பு ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பவானிக்கு ஆர்வம் ஏற்பட்டது. எப்போதும் அதைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிகமாக ஈடுபட்டார். எளிய முறையில் பெரிய அளவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் கட்டி விளையாடுவதை பவானி பழக்கமாக்கி கொண்டார். இதனால் பல்வேறு வழிகளிலும் பணத்தை தயார் செய்து பவானி ரம்மி விளையாட்டில் மூழ்கினார். பவானிக்கு 2 தங்கைகள் உள்ளனர். முதல் தங்கை பாரதி எண்ணூ ரிலும், 2-வது தங்கை கவிதா பெரியபாளையத்திலும் திருமணமாகி தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்கள். இருவரிடமும் தலா ரூ.1½ லட்சம் பணத்தை பவானி கடனாக வாங்கியுள்ளார். இந்த ரூ.3 லட்சம் பணத்தையும் தனது வங்கி கணக்கில் செலுத்தி ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு மொத்தமாகப் பணத்தை இழந்துள்ளார்.  அதுமட்டுமல்லாது தனது 20 பவுன் நகை களையும் விற்று வங்கி கணக்கில் செலுத்தியும் பவானி ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு மொத்த பணத்தை இழந்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த பவானி மிகுந்த மன உளைச் சலிலேயே இருந்து வந்திருக்கிறார். இந்த நிலையில் நேற்று இரவு பவானி கணவர் மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். இரவு 8.30 மணி அளவில் குளித்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டு சென்ற பவானி, தூக்கில் தொங்கினார்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த 22 பேர் இதுவரை தற் கொலை செய்துகொண்டு வரும் நிலையில் பட்டதாரியான பவானி 2 குழந்தை களின் தாய்  தற்கொலை செய்திருப்பது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வரும் பாமக, அதற்கு தடை கேட்டு போராட்டத்தை அறிவித்துள்ளது. அது தொடர்பாக, பா.ம.க. தலைவர் அன்புமணி விடுத்துள்ள அறிக்கையில்…

‛‛ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக தமிழ்நாடு மாற்றப் பட்டு வரும் நிலையில்,  அதைத் தடுக்க தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமான நட வடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவில்லை என்பது மிகவும் வேதனையளிக் கிறது. ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்வதில் தமிழக அரசால்  செய்யப் படும் ஒவ்வொரு நாள் தாமதமும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இழைக் கப்படும் துரோகம் ஆகும்.

இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் கடந்த 2021-ஆம் ஆண்டில் ஈட்டிய வருமானம்  ரூ. 10,100 கோடி. நடப்பாண்டில் இது ரூ.15,400 கோடியாக அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டில் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வருவாய் ரூ.38,500 கோடியாக உயரக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஒட்டுமொத்த ஆன்லைன் சூதாட்ட வருமானத்தில் குறைந்தது 20 விழுக்காடு தமிழ்நாட்டிலிருந்து பெறப்படுகிறது. அப்படியானால், நடப்பாண்டில் தமிழ்நாட்டிலிருந்து ரூ.3,080 கோடி ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களால் பறிக்கப்படும்; அடுத்த இரு ஆண்டுகளில் இது ரூ.7,700 கோடியாக அதிகரிக்கும். இந்தியாவில் ஆன்லைன் சூதாட்டத்தால் மிக அதிகப் பணத்தை இழக்கும் மாநிலம் தமிழ்நாடாகத்தான் இருக்கும் என்பது புள்ளிவிவரங்கள் மூலம் உறுதிப்படுத்தப் பட்ட உண்மை.

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களால் பறிக்கப்படுவது தமிழ்நாட்டு மக்களின் பணம்  மட்டுமல்ல, லட்சக்கணக்கான குடும்பங்களில் நிம்மதி மற்றும் வாழ்வாதாரமும் தான்.

ஆன்லைன் சூதாட்டங்கள் இந்தியாவில் 2014-ஆம் ஆண்டில் அறிமுகம் ஆயின. அதற்குப் பிறகு 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை 60-க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டனர். அதன்பின் ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் இயற்றப்பட்டதால் 10 மாதங்கள்  தற்கொலைகள் எதுவும் நிகழவில்லை. ஆனால், ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு, கடந்த 10 மாதங்களில் மட்டும் 22 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.

ஆன்லைன் சூதாட்டத்தின் தீமைகள் அனைத்தையும் தமிழக அரசு ஒப்புக்கொண் டிருக்கிறது. இந்தத் தீமையிலிருந்து தமிழ்நாட்டு மக்களைக் காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு கூறுகிறது. ஆனால், உயர் நீதிமன்றத்தின் அறிவுரைப்படி, திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை இயற்று வது தான் அதற்கான தீர்வு என்பதை ஏற்றுக்கொள்ள தமிழக அரசு மறுக்கிறது.

தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம்  செல்லாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திற்குத் தமிழக அரசு சென்றிருப்பதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. உச்ச நீதிமன்றத்தைப் பொறுத்தவரை 1867-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட பொது சூதாட்டச் சட்டத்தின்படி (The Public Gambling Act  1867) ஆன்லைன் சூதாட்டங் களைத் திறன் சார்ந்த விளையாட்டாகவே பார்க்கிறது. அதனால்தான் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து மராட்டியம், இராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்கள் இயற்றிய சட்டம் செல்லாது என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டிலும் இதே தீர்ப்பு தான் வருவதற்கு வாய்ப்புள்ளது.

அதுமட்டுமின்றி, ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை எதிர்த்து கடந்த நவம்பர் மாதம் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று வரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. ஆன்லைன் சூதாட்டங்கள் திறன் சார்ந்தவை அல்ல; அவை வாய்ப்பு மற்றும் அதிர்ஷ்டம் சார்ந்தவை என்பதை நிரூபிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டால்தான் அதை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொள்ளும். அத்தகைய சட்டத்தை உருவாக்கி அவசர சட்டமாகப் பிறப்பிக்க வேண்டும் என்றுதான் பா.ம.க. வலியுறுத்தி வருகிறது.

ஆனால், இது தொடர்பாக தமிழக அரசிடமிருந்து உறுதியான பதில் வராத நிலை யில், ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்து அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க வலியுறுத்தி, அறப்போராட்டம் நடத்த பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்திருக் கிறது. சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்திற்கு அருகில் வரும் 10-ஆம் தேதி  வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு இந்தப் போராட்டம் நடைபெறும்.இந்தப் போராட்டத்திற்கு நான் தலைமையேற்கவுள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகள், துணை அமைப்புகள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் இந்த போராட்டத் தில் கலந்து கொள்கின்றனர். ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும் என்று விரும்புவோரும், பொது நலனில் அக்கறை கொண்டோரும் இந்தப் போராட் டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.”

மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ள மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம், “ஆன்லைன் கேமிங் என்பது உலகம் முழுவ தும் வேகமாக விரிவடைந்து வரக்கூடிய சூழலில், இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த விவரங்களை மத்திய அரசும் அறிந்து வைத்திருக்கிறது.

அரசியல் சாசனத்தின் 7-வது அட்டவணையின் படி சூதாட்டங்களை தடுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனைப் பின்பற்றி சில மாநிலங்கள் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்திருக்கிறது. மத்திய அரசும், தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இதனை நெறிப்படுத்தும் பணி களில் ஈடுபட்டு வருகின்றது” எனக் கூறியுள்ளது.

மானைக் கொன்ற சல்மான் கான் வழக்கை வேகமாக விசாரித்த நீதிமன்றம் ஆன்லைன் சூதாட்ட வழக்கை அவசர வழக்காக எடுத்து தீர்ப்பு கூறினால் என்ன என்று கேட்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...