அமெரிக்காவில் நடக்கும் துப்பாக்கிக் கலாசாரத்துக்கு காரணம் என்ன?

 அமெரிக்காவில் நடக்கும் துப்பாக்கிக் கலாசாரத்துக்கு காரணம் என்ன?

அமெரிக்காவின் தெற்கு டெக்சாஸ் மாகாணம் உவால்டே பகுதியில் தொடக்கப் பள்ளிக்கூடம் ஒன்றுக்குள் புகுந்த மர்ம நபர் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினார். பிஞ்சு குழந்தைகள் 15 பேர் உள்பட 3 ஆசிரியர்களையும் அந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தார். இந்தச் சம்பவம் அமெரிக்கர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  அதோடு இந்தச் சம்பவம் உலகையே உலுக்கி அமெரிக்காவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. அங்கு மீண்டும் தலைதூக்கியுள்ள துப்பாக்கிக் கலாசாரம் உலகையே உலுக்கி யுள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு கலாசாரம் என்பது நீண்டகாலமாக தொடரும் பிரச்சனை.

அமெரிக்காவில் இந்த ஆண்டு மட்டும் 200க்கும் மேற்பட்ட துப்பாக்கிச்சூடு சம்ப வங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் நடப்பாண்டில் துப்பாக் கிச்சூடு சம்பவங்கள் 52 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

துப்பாக்கிகளுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்களைப் பறிகொடுத்து வரும் வல்லரசு நாடான அமெரிக்கா, துப்பாக்கிக் கலாசாரத்தைக் கட்டுப் படுத்த முடியாமல் திணறிவருகிறது. அந்தளவுக்கு அமெரிக்காவில் துப்பாக்கிப் பயன் பாடு, ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

உலக நாடுகளிலேயே துப்பாக்கி உரிமம் வைத்திருக்கும் தனி நபரின் எண் ணிக்கையும் அமெரிக்காவில்தான் அதிகம். ஒவ்வொரு 100 குடும்பங்களிலும் 121 துப்பாக்கிகள் இருக்கின்றன. 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் துப்பாக்கி வைத் திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், இளம் வயதினர் மத்தியில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு துப்பாக்கிக் கலாசாரத்தால் 4,000 சிறார்கள் பாதிக்கப்பட்ட நிலையில், இது கடந்த ஆண்டு 5,692 ஆக அதிகரித்துள்ளது. இந்தத் துப்பாக்கிச் சம்பவங்களில் 1,560 சிறார்கள் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவருகிறது.

அமெரிக்காவின் தெற்கு டெக்சாஸ் மாகாணம் சான் அன்டோனியோவுக்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டே பகுதியில் தொடக்கப் பள்ளிக் கூடம் ஒன்று உள்ளது. இங்கு 18 வயதுள்ள மர்ம நபர் திடீரென துப்பாக்கியுடன் நுழைந்துள்ளார். பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்த மர்ம நபர் கண்மூடித்தனமாகச் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்தச் சந்தேக நபர் கைத்துப்பாக்கி ஒன்றையும் AR-15 ரக துப்பாக்கி ஒன்றையும் வைத்திருந்ததாகப் புலனாய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் பிஞ்சுக் குழந்தைகள் 15 பேர் பரிதாபமாகப் பலி யாகினர். மேலும் 3 ஆசிரியர்களையும் அந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய் தார்.  இச்சம்பவத்தில் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். துப்பாக்கிச்சூட் டில் படு காயமடைந்த அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள் ளனர். இச் சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன.

இந்தத் துப்பாக்கிச் சூட்டின் தொடக்கத்தில் வாலிபர் தனது பாட்டியை சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும், அவர் அப்பகுதியில் உள்ள உயர் நிலைப் பள்ளி மாணவராக இருக்கலாம் என்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் பெரும்பாலும் பள்ளி, கல்லூரிகளில்தான் துப்பாக்கிச் சம்பவங் கள் நடந்துள்ளன. அதிலும் துப்பாக்கிச்சூடு நடத்துபவர் பள்ளி, கல்லூரி மாணவர் களாகவே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஹூஸ்டன் பகுதியில் உள்ள சாண்டா ஃபே உயர் நிலைப் பள்ளியில் 10 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலியாகினர். அந்தச் சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் டெக்ஸாஸ் சம்பவமும் நிகழ்ந் துள்ளது ஒரு ரைபிள் துப்பாக்கியுடன் பள்ளிக்குள் நுழைந்த அந்த வாலிபர் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தியதில் 18 குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர், ஒரு பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் கொல்லப்பட்டனர். அதே நேரம் 18 வயது நபரும் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்துள்ளார். அன்பது அப்போது அமெரிக் கர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்போது அங்கு கதறி அழுத மக்கள் செய்தறியாது திகைத்தனர்.

டெக்ஸாஸ் மாகாண தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“எப்போதுதான் நாம் அனைவருமே துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிராக ஒருமித்த குரல் கொடுக்கப் போகிறோம்? இன்னும் சிலர் ‘துப்பாக்கி சுதந்திரத்தை’ ஆதரிக் கின்றனரே! துப்பாக்கிக் கலாசாரத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நேரம் வந்துவிட்டது. ஒவ்வொரு பெற்றோரும், ஒவ்வொரு குடிமக னும் துப்பாக்கிச் கலாசாரத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கவேண்டும். தேர்ந் தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் நிலைமையைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு குழந்தையை இழப்பது பெற்றோருக்கு நீங்கா சோகம். நான் 1972ல் ஒரு விபத்தில் என் மனைவியையும், மகளையும் இழந் தேன். 2015ல் என் மகன் புற்றுநோயால் இறந்தார். ஒரு குழந்தையை இழப்பது ஆன்மாவின் ஒரு துண்டை பிய்த்து எடுப்பது போன்று வலி தரும். நெஞ்சில் ஒரு வெறுமை ஏற்படும். ஏதோ ஒன்று உங்களை முழுவதுமாக உரிஞ்சு கொள்வதுபோல் இருக்கும்” என்று கூறினார்.

அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாசாரம் செழித்து வளர்வதற்கு அங்கு நடக் கும் துப்பாக்கி வியாபாரமே காரணமாகும். சாதாரண ஆடைகளை வாங்குவதைப் போல துப்பாக்கிப் போன்ற ஆயுதங்களையும் அமெரிக்காவில் உள்ள கடைகளி லும், ஆன்லைன் மூலமாகவும் எளிதாக வாங்கமுடியும் என்ற நிலை இருக்கிறது.

அமெரிக்காவுக்கும் துப்பாக்கிக்குமான தொடர்பு என்பது, அதன் வரலாறு தொடங் கிய காலத்திலிருந்தே இருக்கிறது. 1775-ல் பிரிட்டீஷ் காலனி ஆட்சிக்கு எதிரான புரட்சிகரப் போரில் அமெரிக்கா வெற்றி பெற்ற பிறகு அந்நாட்டில் காவல் நிலை யங்களே இல்லாத நிலை இருந்தது. அன்றைய காலகட்டங்களில் உணவுக்காக வேட்டையாடுதல் தொடங்கி நாட்டை பாதுகாப்பது வரை குடிமக்களின் ஒரு அங்கமாகவே துப்பாக்கி இருந்துள்ளது.

அதைத் தொடர்ந்து, 1791-ஆம் ஆண்டில், அமெரிக்க அரசியலமைப்பின் இரண்டா வது திருத்தம் நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் குடிமக்களுக்கு ஆயுதம் வைத்துக் கொள்ளும் உரிமை வழங்கப்பட்டது.

அடிமை முறை ஒழிக்கப்பட்டதற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த மாகாணங் களைக் கட்டுப்படுத்த 1861-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் வெடித்தது. அந்தக் காலம்தொட்டே அமெரிக்கர்களுக்கு வரலாற்றுப் பெருமை யாகவும், குடும்ப கௌரவமாகவும் மக்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ளும் முறை இருந்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவின் வெள்ளையின மக்களில் 48 சதவிகிதம் பேர் துப்பாக்கி வைத்திருக்கின்றனர். தற்காப்புக்காக என்றே அமெரிக்கர்கள் பிரதானமாகத் துப்பாக்கியைப் பயன்படுத்தி வந்தனர். இனவெறி தலைதூக்கிய பிறகு துப்பாக்கி வன்முறைகள் அதிகரித்துவிட்டன.

கடந்த பல ஆண்டுகளாக அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாசாரம் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உயிர்களை இழந்தனர். 2020ஆம் ஆண்டில் துப்பாக்கிச்சூடு காரணமாக மட்டும் 45,222 பேர் உயிரிழந்துள்ளனர் என்கிறனர்.

அமெரிக்காவில் சமீப காலமாக அங்கங்கே துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் சம்பவங் கள் அதிகரித்து வருகின்றன.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின் மிகப்பெரிய நகரம் பில டெல்பியா. இங்கு மதுக்கூடங்கள், ஹோட்டல்கள், பொழுதுபோக்குத் திடல்கள் உள்ளிட்டவை அமைந்துள்ள பரபரப்பான இடம். இங்கு வார இறுதி நாட்களில் ஏராளமான மக்கள் கூடியிருப்பார்கள். அப்போது அங்கு வந்த ஒரு மர்ம கும்பல், பொதுமக்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுவிட்டு தப்பியது. ஒரு பெண் உட்பட மூன்று பேர் அதே இடத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர். காயம் அடைந்த 11 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பஃபேலோ நகரில் செயல்பட்டுவரும் டாப்ஸ் சூப்பர் மார்க்கெட் கட்டடத்திற்குள் நுழைந்த மர்ம நபர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.  இதில் 10 பேர் உயிரிழந் துள்ளதாகச் சட்ட அமலாக்க அதிகாரிகள் கூறினர். உடனடியாக அந்த நபரை சுற்றிவளைத்த போலீசார் கைது செய்தனர்.  இனவெறியால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதா என்பது குறித்தும் ஆராய்ந்து வருவதாக காவல்துறை அதிகாரி  தெரிவித்தார்.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் மேலும் மேலும் பெருகி வருகிறது. போலீ சாரை குறிவைத்தும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் துப்பாக்கி விநி யோகத்தில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  

இதையடுத்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் துப்பாக்கிச்சூடு சம்பவங்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இந்த நிலை யில் நியூயார்க் மாகாணத்தில் துப்பாக்கி உரிமைச் சட்டம் கடுமையாக்கப்பட் டிருக்கிறது. இது தொடர்பாக துப்பாக்கி சீர்திருத்தங்கள் மாகாண செனட்டில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்துக்கு மாகாண கவர்னர் கேந்தி ஹோச்சுல் ஒப்புதல் அளித்தார். அதன்படி நியூயார்க்கில் துப்பாக்கி வாங்குவதற்கான வயது வரம்பு 18 லிருந்து 21 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் கவச உடை போன்றவற்றை பொதுமக்கள் வாங்கவும் இந்தச் சட்டம் மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் இனிமேல் இதுபோல் பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு நடக்காமல் முற்றி லும் தடுக்கமுடியுமா என்ற கேள்விகளுக்கு, இப்போதைக்கு யாரிடமும் பதில் இல்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...