உயர் பதவிப் படிப்புகள் பலவிதம்
படித்தவர்கள் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் IAS, IPS என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதே அளவு தகுதி உள்ள மத்திய /மாநில அரசுப் பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்வோம்.
மாணவச் செல்வங்களே..
இளைய தளபதி விஜய் படமும் தல அஜித் படமும் எப்ப வரும் என்று எண்ணிக் கொள்ளாமல் இதையும் பற்றி சிந்தித்துப் படியுங்கள்.
1. IAS – Indian Administrative Service
2. IPS – Indian Police Service
3. IFS – Indian Foreign Service
4. IFS – Indian Forest Service
5. IRS – Indian Revenue Service (Income Tax )
6. IRS – Indian Revenue Service ( Customs & Central Excise )
7. IAAS – Indian Audit and Accounts Service
8. ICAS – Indian Civil Accounts Service
9. ICLS – Indian Corporate Law Service
10. IDAS – Indian Defence Accounts Service
11. IDES – Indian Defence Estate Service
12. IIS – Indian Information Service
13. IPTAS – Indian Post & Telecom Accounts Service
14. IPS – Indian Postal Service
15] IRAS – Indian Railway Accounts Service
16. IRPS – Indian Railway Personal Service
17. IRTS – Indian Railway Traffics Service
18. ITS – Indian Trade Service
19. IRPFS – Indian Railway Protection Force Service
20. IES – Indian Engineering Services
21. IIOFS – Indian Ordinance Factory Service
22. IDSE – Indian defence engineering services
23. IES – Indian Economics Services
24. ISS – Indian Statistics Service
25. IRES – Indian railway engg service
26. IREES – indian railway elec engg service
இத்தனை பதவிகளும் தேர்வுகளும், இந்திய ஆட்சி, அதிகார, ஆளுமைப் பணிகளுக்கான பணி இடங்கள் ஆகும். இவை அனைத்துக்கும் தேவையான கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு மட்டுமே.
பெரிய கல்வித் தகுதி ஏதும் தேவை இல்லை. ஒரு பட்டப்படிப்பும் முறையான பயிற்சியும் இருந்தால், யார் வேண்டுமானாலும் இந்தத் தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப்பணி பதவிகளி்ல் அமரலாம்.
இத்தனை வாய்ப்புகள் இருப்பது பெரும்பாலான இளம் பட்டதாரிகளுக்கு தெரிவதில்லை. நம் தமிழக இளைஞர்களுக்கு தெரிந்தது எல்லாம், வி.ஏ.ஒ. பதவி, கிளார்க் பதவி, சத்துணவு அமைப்பாளர் பதவி மட்டுமே.
இனியாவது, உயர் பதவிகளுக்கு இந்திய அளவிளான தேர்வுகளுக்குத் தயார் செய்து கொள்ளுங்கள்.
இதை உங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதில் இருந்தே அறிந்து கொள்ள உதவுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் நம் தமிழ்ச் சொந்தங்களுக்கு தெரிவியுங்கள்.