நாய்கள் பலவிதம் ஒவ்வென்றும் ஒருவிதம்

 நாய்கள் பலவிதம் ஒவ்வென்றும் ஒருவிதம்

வெளிநாட்டு ரக நாய்களை அதிக விலை கொடுத்து வாங்கினாலும், நம் நாட்டு இனங்களான ராஜபாளையம், கன்னி, சிப்பிப்பாறை, கோம்பை ஆகிய ரக நாய் களை வளர்ப்பதில் தற்போது பலரும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் ராஜபாளையத்தில் வளர்க்கப்படும் சிப்பிப்பாறை உள்ளிட்ட நாட்டு நாய் இனங்கள் குறித்து பிரதமர் மோடி பெருமிதத் துடன் புகழாரம் சூட்டினார். இதனால் நாடு முழுவதும் செல்லப்பிராணி பிரியர் களின் கவனம் ராஜபாளையத்தை நோக்கி திரும்பியுள்ளது.

ஜல்லிக்கட்டுக் காளைகளைப் போல தமிழர்களின் வாழ்க்கை முறை, பாரம் பர்யத்துடன் ஒன்றியவை நாட்டு நாய்கள்.  கன்னி, கோம்பை, சிப்பிப்பாறை, ராஜ பாளையம் ஆகிய நான்கும் நம் தமிழகத்தின் இனமாகும். ஆசிய கண்டத்திலேயே ஐந்து வகை நாய்கள்தாம் ஒரே நிறத்தில் குட்டி போடுமாம். அதில், ராஜபாளையம் நாயும் ஒன்று.

வெளிநாட்டு நாய்களுக்குப் பயிற்சி அளித்தால் மட்டுமே திறமையாகச் செயல் படும். ஆனால், நமது நாட்டு இன நாய்கள் பிறப்பிலேயே வீரமும் விசுவாச குணமும் அதிகம் கொண்டவை.

பாஜபாளையம் நாய்கள்

எந்தச் சூழலிலும் தன் எஜமானர்களை மாற்றிக் கொள்ளாத குணமுடையது ராஜபாளையம் நாய். மோப்ப சக்தி மிகுந்த இந்த நாய், வீட்டுக்காவலுக்குச் சிறந்தது. பார்ப்பதற்கு கம்பீரத்துடனும் வீரத்துடனும் இருக்கும். இந்நாயின் குட்டிகள் அனைத்தும் ஒரே நிறத்தில் இருக்கும். வேகமாக ஓடும் தன்மை உடையது. உடல் முழுவதும் பால் நிற வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். அடி வயிறு, மூக்கு மற்றும் கண்களைச் சுற்றிலும் ரோஸ் நிறத்தில் இருக்கும். காது மடல்கள் மடங்கியும், கால்கள் கட்டில் கால் போல நேராகவும், உறுதியாகவும் இருக்கும்.

வால் பகுதியை தடவிப் பார்த் தால் கரும்புகளில் உள்ள கணுக்கள் போன்றும், பார்ப்பதற்கு அரிவாள் போன்றும் வால் தூக்கி நிற்கும். தலை சிறியதாகவும் முகம் ஊசி போன்ற அமைப்பிலும், நெஞ்சுப்பகுதி இறங்கியும் வயிற்றுப்பகுதி ஏறியும் வாலின் அடிப்பகுதி தடித்தும் நுனிப்பகுதி மெல்லியதாகவும் மொத்தத் தில் நாய் பார்ப்பதற்கு எலும்பும் தோலுமாக இருக்க வேண்டும். இதில், நாய்களின் கண்கள் பூனைக்கண் போன்று இருந்தால் அந்த வகை நாய்களுக்குக் காது கேட்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கோம்பை நாய்கள்

கோம்பை ரகம் இயல்பாகவே அதீத தைரியம் கொண்ட நாயாகும். தெருக் களில் சுற்றித் திரியும் நாட்டு நாய்களில் சிவப்பு நிறத்திலான கோம்பையின் கலப் பினத்தை நாம் காணமுடியும். கோம்பை ஒரு வனவிலங்குதான். காடு களில் செந்நாயின் ஒரு இனமாக இருந்தது. பின்னர், மலையோரங்களில் வசிக்கும் மக்களால் பாதுகாப்புக்கு வளர்க்கப்பட்டது.

மருதுபாண்டியர்களின் கோட்டைக் காவலாக விளங்கிய கோம்பை, பார்ப்ப தற்குச் `செந்நாய்’ போன்ற உருவ அமைப்புடையது. எதிரிகள் குதிரைகளில் படை எடுத்து வரும்போது, இவற்றை வைத்து குதிரைகளின் கால் பகுதிகளைக் கடித்துக் குதிரைகளைக் கீழே விழச்செய்து, எதிரிகளை தாக்கியுள்ளார் களாம். இவை புலியையே எதிர்த்து சண்டையிட்டதாகவும் வரலாறு உண்டு. உடல், மண் சிவப்பு நிறத்தில் இருக்கும். கண், மூக்கு, வாய்ப்பகுதியில் கறுப்பு நிறத்தில் இருக்கும். நெற்றிப்பகுதி மேடும்பள்ளமாகவும், வால் நன்கு சுருண்டும் காணப் படும்.

ராஜபாளையத்தைப் போல, தற்போது கோம்பையும் வீட்டுக் காவலுக்காக வளர்க்கப்படுகிறது. எஜமானருக்கு விசுவாசம் காட்டுவதிலும் இதை மிஞ்சமுடி யாது. போடி, பொள்ளாச்சி, உதகை, சத்தியமங்கலம் உள்ளிட்ட மலைப்பகுதி களில் வசிப்போர் கோம்பை நாய்களை அதிகமாக வளர்க்கிறார்கள். கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் வனத்துறையினரும் தங்கள் பாதுகாப்புக்கு கோம்பை நாய்களையே வளர்க்கின்றனர்.

கன்னி நாய்

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதியில் சில இடங்களில் மட்டுமே கிடைக்கும் ஒரு வகை நாயின் பெயர் கன்னி. இந்த வகை நாய் எல்லா ஜாதியினரிடமும் இருக்காது. குறிப்பிட்ட ஒரு ஜாதியினர் மட்டும்தான் வைத் திருப்பார்கள். அவ்வளவு எளிதில் இந்த நாயை வாங்கிவிட முடியாது. அந்தக் குறிப்பிட்ட ஜாதியினருக்கு இந்த நாய் அவர்களின் கெளரவம். அந்த கெளர வத்தை தங்களைத் தவிர மற்ற எவரும் அடைந்துவிடக் கூடாது என்பதற்காக இந்த நாயை அந்தக் குறிப்பிட்ட ஜாதியினரைத் தவிர்த்து வேறு எவருக்கும் கொடுக்க மாட்டார்கள்.

வீட்டில் கன்னி நாய், குட்டி போட்டால் அதைக் கல்யாணம் முடிந்துபோன பெண் குழந்தைகளுக்கு சீதனமாகக் கொடுப்பார்கள். அந்த அளவிற்கு அது அவர்களுக்கு பெருமை. மீதம் இருக்கும் குட்டிகளைக் கண்ணைக் கட்டி கிணற்றில் கூட தூக்கி எறிவார்களே தவிர, பணம் கொடுக்கிறோம் எங்களுக்கு தாருங்கள் என்று கேட் டாலும் பிறருக்குக் கொடுக்கமாட்டார்கள். தங்கள் ஜாதியினருக்கு கொடுக்கை யில் கூட இதை வேறு எவருக்கும் கொடுத்துவிடக் கூடாது என்பது போன்ற சில நிபந்தனைகளுக்குப் பிறகு தான் கொடுப்பார்கள். திருநெல்வேலி தூத்துக்குடியில் இப்படி ஒரு நாய் இருக்கிறது. அதற்குப் பின் இப்படி ஒரு பெருமை சார்ந்த பழக்கம் இருக்கிறது என்பது பெரும்பாலான மாவட்ட மக்களுக்கே தெரியாது.

பார்ப்பதற்கு கறுப்பு நிறமாகவும் கால்கள் பிரவுன் நிறத்திலும் இருக்கும். நெஞ்சுப் பகுதி விரிந்தும், வயிற்றுப்பகுதி இறங்கியும், கால்கள் சற்று நீளமாகவும் இருக் கும். எவ்வளவு உணவு எடுத்துக்கொண்டாலும் பார்ப்பதற்கு எலும்பும் தோலுமாக இருக்கும். இதன் உடல் அமைப்புதான் வேகமாகப் பாய்ந்து ஓடிச் செல்லவும், விலங்குளை விரட்டவும் உதவுகிறது.

சிப்பிப்பாறை

கறுப்பு அல்லாமல் அழுக்கு வெள்ளை, சாம்பல், மங்கிய பழுப்பு ஆகிய நிறங்களில் இருந்தால் அதைச் `சிப்பிப்பாறை’ என்கிறோம். கன்னி, சிப்பிப் பாறை இரண்டும் வேறு இனம் அல்ல. இவை இரண்டும் வேறு, வேறு இனம் என பலரும் குழப்பிக் கொள்கிறார்கள். தற்போது பெரிய பண்ணைகள், தோட்டங்களில் காவலுக்காகவும், அத்துமீறி நுழையும் ஆடு, மாடுகள் போன்ற விலங்குகளை விரட்டுவதற்காகவும் வளர்க்கப்படுகிறது.

நம் நாட்டு நாய்கள் இன்னும் பெயர் தெரியாத வகைகள் தெரு நாய்களாக வலம் வருகின்றன. எல்லா நாட்டு நாய்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அதுதான் எஜமான விசுவாசம். பொதுவாக நன்றி உணர்வு. அதை அதனிடம் மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...