நவபாஷாணம் என்றால் என்ன? நவபாஷாண சிலைகள் தமிழகத்தில் எங்கெல்லாம் இருக்கிறது?
நவம் என்றால் ஒன்பது, பாஷாணம் என்றால் விஷம். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்கள். சித்தர்கள் முறைப்படி ஒன்பது விஷங்களைச் சேர்த்துக் கட்டுவதுதான் நவபாஷாணம். பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளனவாம். இதில் நீலி எனும் ஓர் பாஷாணமும் உண்டு. இந்த நீலி மற்ற 63 பாஷாணங்களைச் செயலிழக்க வைக்கக்கூடிய தன்மையுடையது. நவபாஷா ணம் என்று கூறப்படும் இந்த ஒன்பது வகையான பாஷாணக்களுக்கும் தனித் தனியாக வேதியல், இயற்பியல் பண்புண்டு. எதிர்காலத்தில் வரக்கூடிய ஒரு கொடிய நோய்க்காக சுமார் 2800 வருடத்திற்கு முன்னாள் போகர் சித்தர் மூலம் உருவாக்கப்பட்டதுதான் இந்த நவபாஷாணம்.
சித்தரியல் முறைப்படி அணுக்களைப் பிரித்து, மீண்டும் சேர்ப்பதை நவபாஷா ணம் கட்டுதல் என்கிறார்கள். இதில் அடங்கியிருக்கும் ஒன்பது பஷாணங்கள்…
1 .சாதிலிங்கம். 2. மனோசிலை 3. காந்தம் 4. காரம் 5. கந்தகம் 6. பூரம் 7. வெள்ளை பாஷாணம் 8. கௌரி பாஷாணம் 9. தொட்டி பாஷாணம்.
இந்த நவபாஷாணத்தின் தன்மையில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்துள்ளன என்று கூறப்படுகிறது. நவபாஷாணக்கட்டு என்பது சித்தர்களால் மட்டுமே சாத்தியமான விஷயம். நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலை கள், நவக்கிரகங்களின் சக்தியைப் பெற்றுவிடுகிறது என்பது நம்பிக்கை.
தமிழ்நாட்டில் நான்கு இடங்களில் நவபாஷாணச் சிலைகள் உள்ளன.
- பழனி மலைக்கோவில்
- கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை,
- குழந்தை வேலப்பர் கோயில்.
- சிவகங்கையில் பெரிச்சி கோவில் என்ற இடத்தில் உள்ள நவபாஷாண பைரவர்
மூன்றில் இரண்டு சிலைகள் போகர் உருவாக்கியவை என்றும் தேவிப்பட்டி ணத்தில் இருக்கும் மற்றொன்றை யார் உருவாக்கினார் என்பது தெரிய வில்லை என்றும் கூறப்படுகிறது.
நவபாஷாணங்களால் உருவான சுவாமி சிலையை வழிபடுபவர்களுக்கு நவ கிரகங்களால் ஏற்படும் தீங்குகள் நீங்கும் எனப்படுகிறது.
பழனிமலை தண்டாயுதபாணியை வழிபடுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம் என்று கருதப்படுகிறது. பழனி முருகன் சிலைக்கு அபிஷேகம் செய்த நீரைப் பருகுவதால் தீராத நோய்களும் கூட தீர்ந்துவிடும் என்று கூறப்படுகிறது. தற்போது நவபாஷாண சிலைக்கு அபிஷேகம் செய்யப் படுவதில்லை.
பழனி மலை முருகன் சிலை, நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் சுபாவத்தை உடையது. நவபாஷாணங்களால் உருவான சுவாமி சிலையை வழிபடுபவர்களுக்கு நவகிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும். பழனிமலை தண்டாயுதபாணியை வழிபடுபவர்கள் நவகிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம். இதை உணர்ந்தே போகர் பழனி மலையில் நவபாஷாண முருகர் சிலையை உருவாக்கினார்.
முருகனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி கோயிலின் பழமையான நவபாஷாணச் சிலை போகர் சித்தரால் செய்யப்பட்டது. பதினெட்டு சித்தர் களில் ஒருவரான போகர் கன்னிவாடி மெய்கண்ட சித்தர் குகையில்தான் நவபாஷாண சிலை யைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கு அடையாளமாகச் சிலை செய்ய போகர் மூலிகைகளை அரைத்த உரல் இன்னும் உள்ளது. சிலையைச் செய்து முடித்த போகர் செவ்வாயின் ஆதிக்கம் உள்ள பழநி மலையைத் தேர்வு செய்து பிரதிஷ்டை செய்தார். இச்சிலை பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூலிகைகளால் செய்யப்பட்டது. மனிதனைப் போல் இரவில் சிலையிலிருந்து வியர்வை வெளியேறுவது சிறப்பம்சம்.
சிலை செய்த இடம் கன்னிவாடி சோமலிங்கபுரத்தில் நால்வர் மலை (அரிகேச பர்வதம்) அடிவாரத்தில் போகர் சிலை செய்த இடம் உள்ளது. இது எந்தப் பகுதியிலிருந்து பார்த்தாலும் லிங்கம் போலத் தெரியும். கன்னிவாடி-ஒட்டன் சத்திரம் ரோட்டில் ஒரு கி.மீட்டரில் அடர்ந்த தென்னந்தோப்புக்கு மத்தியில் சோமலிங்க சுவாமி கோயில் உள்ளது.
தென்னிந்தியாவில் குறிப்பாக, தமிழகத்தில் நவபாஷாணச் சிலை வழிபாடு என் றால் முதலில் நம் மனதில் உதயமாவது பழநி முருகன்தான். இங்குள்ள தண்டாயுதபாணி என்னும் முருகன் சிலையே முதலில் கண்டறியப்பட்ட நவபாஷாண சிலை. இவை இரண்டும் ‘போகர்’ உருவாக்கியதாக கூறப்படுகிறது.
இதைத்தவிர்த்து இரண்டாவதாகவும் ஓர் நவபாஷாண சிலை கண்டறியப் பட்டது. அது, கொடைக்கானலில் உள்ள பூம்பாறை கிராமத்தில் அமைந்துள்ள ‘குழந்தை வேலப்பர்’ முருகன் கோவிலாகும்.
நவபாஷாண பெருமாள்
விருதுநகர், சிவகாசி அருகே உள்ள காரிசேரி லட்சுமி நாராயணர் கோவிலில் நவபாஷாணத்தில் அமைந்த நவபாஷாண பெருமாள் உள்ளார். 28 நாட்கள் விரத மிருந்து, பின்பு லட்சுமி நாராயணரை வணங்க வேண்டியதெல்லாம் நிறைவேறும் என்பதும், பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தத்தை அருந்தினால் நோய்கள் நீங்குவதும் இக்கோவிலின் தனிச்சிறப்பாக உள்ளது.
சதுரகிரி மலையிலுள்ள மகாலிங்க சுவாமி கோவிலில் இருந்த சித்தர்கள் நவபாஷாணத்தால் ஸ்ரீ லட்சுமி நாராயணர் சிலையைச் செய்து வழிபட்டு வந்த னர். மலையில் வெள்ளம் ஏற்பட்ட சமயத்தில், இந்தச் சிலை நீரில் அடித்து வரப்பட்டு காரிசேரியில் கரை ஒதுங்கியது. இதனை மீட்ட மக்கள், அந்த இடத் திலேயே பிரதிஷ்டை செய்து கோவில் கட்டியுள்ளனர்.