மார்ச் 12 தண்டி யாத்திரை தினம்

 மார்ச் 12 தண்டி யாத்திரை தினம்

1930ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி அகமதாபாதில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் மாலை பிரார்த்தனைக் கூட்டத்தில் 10,000 பேர் குழுமினர். பிரார்த்தனைக் கூட்ட முடிவில் வரலாற்றுப் புகழ்பெற்ற அந்தத் தண்டி யாத்திரை பற்றி மகாத்மா காந்தி பேருரை ஆற்றினார்.

“உங்களிடம் நான் ஆற்றும் கடைசி உரையாக இது அமையலாம். அரசாங்கம் நாளை காலை பேரணி நடத்த எனக்கு அனுமதி வழங்கினாலும், சபர்மதியின் புனித கரைகளில் எனது கடைசி உரையாகவே இது இருக்கும். என்னுடைய வாழ்வின் இறுதி வார்த்தைகளாகக்கூட இது அமையலாம்.

நான்  உங்களிடம் என்ன கூறவேண்டுமோ அதனை நான் ஏற்கெனவே நேற்று உங்களிடம் கூறிவிட்டேன். இன்று, நானும் என்னுடன் வருபவர்களும் கைது ஆன பிறகு நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பது குறித்து உரையாடப் போகிறேன்.
ஜலால்பூருக்கு பேரணி செல்லும் திட்டம், அது எப்படி தீர்மானிக்கப்பட்டதோ அப்படியே நிறைவேற்றப்படவேண்டும். இந்த நோக்கத்திற்காக வரும் தொண்டர் கள் பட்டியல் குஜராத்திற்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. கடந்த 15 நாட் களாக என் காதிற்கு எட்டும் விஷயங்களை வைத்துப் பார்க்கும்போது, ஒத்துழையாமை போராட்ட வீரர்கள் தடையின்றி நீரோட்டம் போல் பெருகு வார்கள் என்று நம்புகிறேன்.

ஆனால் நாம் அனைவரும் கைதானாலும் கூட, அமைதிக்கு ஊறு விளைவிப்பது போன்ற சாயல் கூட இருக்கக் கூடாது. ஒரு தனித்த அஹிம்சா வழி போராட் டத்தை நோக்கிய நமது குறிக்கோளில் நாம் நமது ஆதாரங்களை பயன்படுத்து வதாய் உறுதி பூண்டுள்ளோம்.

கோபத்தில் யாரும் எந்த ஒரு தவறையும் செய்துவிடலாகாது. இதுவே எனது நம்பிக்கையும் பிரார்த்தனையுமாம். என்னுடைய இந்த வார்த்தை இந்த நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கெங்கிலும் எட்ட வேண்டும் என்று விரும்புகிறேன். நானும் எனது தோழர்களும் இறந்தாலும் எனது பணி நிறைவேறியதாகிறது. இதன் பிறகு உங்களுக்கு வழிகாட்ட வேண்டியது காங்கிரஸ் கட்சியின் பணிக் குழு வாகும். அதன் தலைமையைப் பின்பற்றுவது உங்கள் விருப்பமாகும். நான் ஜலால்பூரை அடையும்போது, காங்கிரஸ் எனக்கு அளித்துள்ள அதிகாரத்திற்கு எதிரிடையான எந்த ஒரு செயலையும் செய்யவேண்டாம். ஆனால் நான் கைதாகிய பிறகு முழு பொறுப்பும் காங்கிரஸ் கட்சிக்கு செல்கிறது.

அகிம்சையை ஒரு கோட்பாடாகவும் தேவையாகவும் ஏற்றுக்கொள்ளும் எவரும் அப்போது அமைதியாக இருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். நான் கைதான வுடன் காங்கிரஸுடனான எனது உடன்படிக்கை முடிவுக்கு வருகிறது. அது போன்ற நிலை ஏற்படும்பட்சத்தில் தொண்டர்கள் எங்கெல்லாம் முடிகிறதோ அங்கெல்லாம் உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தை தொடங்க வேண்டும்.

இந்தச் சட்டங்களை மூன்று விதங்களில் மீறலாம். எங்கெலாம் உப்பு தயாரிக்க வசதிகள் உள்ளதோ அங்கெல்லாம் உப்புத் தயாரிப்பில் ஈடுபடுவது குற்றமாகும். கள்ள உப்பு வைத்திருத்தல், விற்பனை, இதில் இயற்கை உப்பு அல்லது உப்பு நிலம் ஆகியவையும் அடங்குகிறது, எனவே இதுவும் ஒரு குற்றம். இந்த உப்பைக் கொள்முதல் செய்பவர்களும் குற்றவாளிகளே. கடற்கரையில் படிந்திருக்கும் இயற்கை உப்புப் படிவுகளை சுமந்து செல்வதும் சட்ட மீறல் ஆகும். உப்பை தெருவில் கூவி விற்பதும் சட்ட மீறலாகும். சுருக்கமாக இந்த சட்ட மீறல்களில் எந்த ஒன்றையுமோ அல்லது அனைத்தையுமோ நீங்கள் தேர்வு செய்து உப்பு ஏகபோக உரிமையை உடைக்க வேண்டும்.” அதன் பிறகு மறுநாள் உப்பு சத்தியா கிரகம் நடைபயணம் தொடங்கியது.

உப்புச் சத்தியாகிரகம் அல்லது தண்டி யாத்திரை (Salt March) காலனிய இந்தியா வில் ஆங்கிலேயர் இந்தியர்கள் மீது விதித்த உப்பு வரியை அறவழியில் எதிர்க்கும் திட்டமிட்ட போராட்டமாகும். மார்ச் 12, 1930 இல் குஜராத் மாநிலத்தி லுள்ள தண்டியில் தடையை மீறி உப்பெடுக்கும் நடைப்பயணமாகத் தொடங் கியது.

குஜராத் மாநிலத்தின் நவ்சாரி மாவட்டம், நவ்சாரி நகரை ஒட்டி அமைந்த கடற்கரை கிராமம் தண்டி (Dandi). 1930ஆம் ஆண்டில், உப்பு மீதான வரியை நீக்கக் கோரி, பிரிட்டீஷ் அரசுக்கு எதிரான உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தின் ஒரு பகுதியாக மகாத்மா காந்தியடிகள் தனது சபர்மதி ஆசிரமத்திலிருந்து 23 நாள்கள் 240 மைல் தூரத்திலுள்ள தண்டிக்கு நடை பயணத்தை வழி நடத்தினார்.

மார்ச் 12, 1930 இல் காந்தி மற்றும் 78 ஆண் சத்தியாக்கிரகிகள் அவர்களின் தொடக்க முனையான சபர்மதி ஆசிரமத்திலிருந்து மேலிருந்த கடற்கரை கிராம மான குஜராத்தின் தண்டிக்கு கால் நடையாகக் கிளம்பிச் சென்றனர். அரசின் அதிகார பூர்வ செய்தித்தாளான ‘தி ஸ்டேட்ஸ்மேனி’ன் கூற்றுப்படி, அது வழக்க மான காந்தியின் நிகழ்ச்சிகளுக்கு வருகின்ற கூட்டத்தைவிடக் குறைந்தே இருந்தது.

100,000 பேர் அகமதாபாத்திலிருந்து சபர்மதியை பிரிக்கின்ற சாலையில் கூடி யிருந்தனர் எனக் கூறியது.

‘முதல் நாள் நடைப்பயணம் அஸ்லாலி கிராமத்தில் முடிந்தது. அங்கு காந்தி சுமார் 4,000 பேர் இருந்த கூட்டத்தில் பேசினார். அஸ்லாலி மற்றும் இதர கிராமங் களைக் கடந்து சென்ற நடைப்பயணத்தில் தன்னார்வலர்கள் நன்கொடை வசூலித் தனர்; புதிய அறப்போராளிகள் தங்களைப் பதிவு செய்துகொண்டனர். மேலும் ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் ஒத்துழையாமையை விரும்பிய கிராம அதிகாரி களிடமிருந்து பதவி விலகலைப் பெற்றனர்.

ஒவ்வொரு கிராமத்திலும் அவர்கள் நுழைந்தபோது, நடைப்பயணம் செய்பவர் களை மத்தளம் மற்றும் கைத்தாளமிட்டு மக்கள் வரவேற்றனர். காந்தி உப்பு வரியை மனித நேயமற்றது எனத் தாக்கிப் பேசினார், மேலும் அறபோரை “ஏழை மனிதனின் போர்” என வர்ணித்தார். ஒவ்வொரு இரவும் அவர்கள் திறந்த வெளியில் தூங்கினர். கிராமவாசிகளிடம் எளிய உணவு மற்றும் தங்குவதற்கும் தூய்மை செய்துகொள்வதற்கும் ஓரிடம் தவிர கூடுதலாக எதையும் கோர வில்லை. காந்தி இந்நடைப்பயணம் ஏழைகளை விடுதலைப் போரில் பங்கு கொள்ள வைக்கும் என உணர்ந்தார், அது இறுதி வெற்றிக்குத் தேவையானது.

உப்பை உற்பத்தி செய்வதற்கு விதித்த தடையை மீறி வழியில் அவருடன் இந்தியர்கள் பெருமளவு எண்ணிக்கையுடன் இணைந்தனர்.

காந்தி மே 5, 1930 இல் தாராசனா சால்ட் வொர்க்ஸ் என்ற நிறுவனத்தில் அத்துமீறி நுழைந்து உப்பெடுக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே கைது செய்யப்பட்டார். தண்டி நடைப்பயணம் மற்றும் பிந்தைய நிகழ்வான தாராசனா சத்தியாகிரகம் இந்திய விடுதலை இயக்கத்தின் மீது உலகம் முழுதுமான கவனத்தை ஈர்த்தது. ஏப்ரல் 6, 1930 இல் காந்தி தண்டியில் உப்புச் சட்டங்களை உடைத்தபோது, அது பேரளவில் சட்ட மறுப்பு இயக்கமாக லட்சக்கணக்கான இந்தியர்களை ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகப் போராடத் தூண்டியது.

விரிவான செய்தித் தாள்கள் மற்றும் செய்திச் சுருள் சேகரிப்புகளில் இவை இடம் பெற்றன. உப்பு வரிக்கு எதிரான அறப்போர் ஓராண்டிற்குத் தொடர்ந்தது, இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகக் காந்தி சிறையி லிருந்து விடுவிக்கப்பட்டார். வைஸ்ராய் லார்ட் இர்வினுடன் பேச்சு வார்த்தை நடத்தியதில் உப்புச் சத்தியாகிரகம் விலக்கிக் கொள்ளப்பட்டது. 80,000த்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் உப்புச் சத்யாக்கிரகத்தின் விளைவாகச் சிறையிலடைக் கப்பட்டனர். இந்நடவடிக்கையானது இந்திய விடுதலை குறித்த உலகின் மற்றும் ஆங்கிலேயரின் கொள்கைகள் மீது கணிசமான விளைவினை ஏற்படுத்தியது.[3][4] மேலும் பெரும் எண்ணிக்கையிலான இந்தியர்களைச் சுறுசுறுப்புடன் இணைந்து முதல் முறையாகப் போராட வழிவகுத்தது.

ஆயிரக்கணக்கான சத்தியாக்கிரகிகளும் சரோஜினி நாயுடு போன்ற தலைவர் களும் அவருடன் இணைந்தனர். கூட்டமானது சுமார் 2 மைல் நீளமிருந்தது. நடைப்பயணத்தின் போது அறப்போரளிகள் “ரகுபதி ராகவ ராஜா ராம்” என்ற பாடலைப் பாடிக்கொண்டே நடந்தனர். ஒவ்வொரு நாளும், நடைப்பயணத்தில் இணைந்த மக்கள் எண்ணிக்கைப் பெருகியது. சூரத்தில், 30,000 மக்கள் அவர்களை வரவேற்றனர். அவர்கள் தண்டியின் இருப்புப் பாதை முனையை அடைந்தப் போது 50,000த்துக்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர்.

காந்தி வழியில் செல்லும்போது நேர்முகப் பேட்டிகளைக் கொடுத்தும் கட்டுரை களை எழுதியும் வந்தார். அந்நிய இதழியலாளர்கள் அவரை ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் அடிக்கடி உச்சரிக்கும் பெயராக ஆக்கினர். “மூன்று மும்பை திரைப்பட நிறுவனங்கள் செய்திச்சுருள் படமெடுக்க குழுக்களை உடன் அனுப் பின. 1930ஆம் ஆண்டின் கடைசியில் டைம் இதழ் அவரை ‘ஆண்டின் சிறந்த மனிதர்’ எனக் குறித்தது. தி நியூயார்க் டைம்ஸ் பெரும்பாலும், இரு முன்பக்கக் கட்டுரைகளை ஏப்ரல் 6 மற்றும் ஏப்ரல் 7 இல் வெளியிட்டதுடன் அனைத்து நாட்களும் உப்பு நடைபயணத்தைப் பற்றி எழுதியது.  மார்ச் மாத இறுதியில் ‘வலிமைக்கெதிரான உரிமைக்கான இப்போராட்ட களத்தில்நான் இந்த உலகின் இரக்கத்தை விரும்புகிறேன்’ எனக் காந்தி அறிவித்தார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *