மின்னி மறைந்த நட்சத்திரம் சில்க் ஸ்மிதா

 மின்னி மறைந்த நட்சத்திரம் சில்க் ஸ்மிதா

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒருவர் எப்படி அறிமுகம் ஆகிவிடுகிறார் களோ அந்த கேரக்டர் ரசிகர்கள் மனதில் பதிந்துவிடும். அப்படித்தான் சில்க் ஸ்மிதாவும் தமிழ் ரசிகர்கள் மனதில் பதிந்து போனார்.

அவரது உடல் வனப்பும் கவர்ச்சியும் போதைக் கண்களும் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தவர்களுக்கு சில்க் ஸ்மிதாவின் ஈர மனசும், தங்க குணமும் தெரிந்திருக்க நியாயமில்லைதான்!

விஜயலட்சுமி என்கிற சில்க்கின் இளம் வயதிலேயே வீட்டில் வறுமை வந்து உட்கார்ந்து கொண்டது. பசி ஒரு பக்கம், மாமியார் கொடுமை ஒரு பக்கம் என ஒரேடியாக மென்று தின்றுவிட்டது.

இறுதியில் வஞ்சம் இல்லாமல் வழிந்து நிறைந்த அழகுதான் சில்க்கை காப்பாற் றியது. அப்போது சில்க்குக்கு 18 வயது. ஏ.வி.எம். ஸ்டூடியோ முன்பு ஒரு மாவு மிஷினில் மிளகாய் அரைக்க வந்திருந்தபோதுதான் வினுசக்கரவர்த்தியின் கண்ணில் பட்டுள்ளார்.. அவரது தயவால், வண்டிச்சக்கரம் பட வாய்ப்புக் கிட்டி யது. பளபள முகம், செக்க செவேல் நிறம் கொண்ட நடிகைகள்கூட சில்க்கை பார்த்து ஆச்சரியமும், பொறாமையும் அடைந்தனர்.  முகத்தில் எதுவுமே இல் லாத அந்த வெறுமை, முகசாயங்களே இல்லாத அந்தப் பொலிவு. அனைவரை யுமே சுண்டி இழுத்தது.

வண்டிச்சக்கரத்தில் ‘வா மச்சான் வா’ என்று பாடவும்.. அப்போது கிறங்கி பார்த்த ரசிகர்கள், கடைசிவரை அப்படியேதான் அவரைப் பார்க்க விரும்பினர். ஒரு படத்தில் ஹீரோ இருப்பதுபோலத்தான் சில்க்கும் அன்றைய காலகட்ட படங் களில் நிறைந்திருந்தார்.

தமிழ்த்திரையிலகில் 1980களில் முக்கிய கவர்ச்சி நடிகையாக இருந்த சில்க் சுமிதா 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வண்டிச்சக்கரம், அலைகள் ஓய்வதில்லை போன்ற ஒருசில படங்களில் தன்னால் நடிக்கவும் முடியும் எனக் காட்டினார்.

கமலுடன் சகலகலாவல்லவன் படத்தில் ‘நேத்து ராத்திரி யம்மா’, மூன்றாம் பிறை படத்தில் ‘பொன்மேனி உருகுதே’ பாடல்கள் இன்றும் கிளுகிளுப்பூட்டக் கூடியது. பின்னர் காதல், மது என வார்வு திசை மாறியது. அன்புக்காக  ஏங்கிய அவரைப் பலர் போலியாகக் காதலித்து ஏமாற்றினர். சொத்துக்களையும் பிடுங்கினர். இறுதியில் வாழ்வில் வெறுப்படைந்து தற்கொலை முடிவுக்கு வரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

ஒரு பாட்டுக்குத்தான் வருவார். ஆனால் போஸ்டரில் ஹீரோ ஒருபுறம் என்றால் சில்க்கும் மறுபுறம் நம்மைப் பார்த்துக்கொண்டு சிரிப்பார். அந்த அளவுக்கு ஒரு ஆளுமை சில்க்கிடம் இருந்தது.

போனியாகாமல் பெட்டியில் தூங்கிக்கொண்டிருந்த பல படங்களில் இவரது ஒரே ஒரு பாட்டை இணைத்து காசை அள்ளிய கூட்டமும் அதிசயமும் அன்று நடந்தது. தவிர்க்கவே முடியாத தேவையானார் சில்க் ஸ்மிதா. கடித்துவிட்டு மிச்சம் வைத்திருந்த ஆப்பிள் துண்டு முதல், சில்க் உட்கார்ந்த சேர் வரை பல ஆயிரம் ரூபாய்க்கு விலைபோயின. சில்க் போட்டோவை வைத்து எத்தனையோ வார பத்திரிகைகள் பிழைத்தன.

அரைகுறை ஆடை, முக்கல், முனகலுடன் கவர்ச்சி நடனம் ஆடினா லும் தங்கள் வீட்டுப் பெண்ணாகவே சில்க்கை பார்க்கும் மனோபாவம் நம் மக்களிடம் இருந் தது. சில்க்கை தவிர வேறு எந்தக் கவர்ச்சி நடிகைக்கும் கிடைக்காத அந்தஸ்து இது!

அவரிடம் ஒருமுறை ‘நடிக்க வராட்டி என்னவா ஆகியிருப்பீங்க’ என்று கேள்வி கேட்டதற்கு, ‘நக்சலைட் ஆகியிருப்பேன்’ என்று சொன்ன பதில் பலருக்கும் தூக்கி வாரிப்போட்டது.. அந்த அளவுக்கு முதலாளிகளின் கொடுமைகளை ஆந்திராவில் அனுபவித்த சில்க்.

வலிகள் இறுதிவரை, சதைப்பிண்டமாகவே மக்கள் முன் உலவிய சில்க் ஒரு தங்கமான மனசுக்குச் சொந்தக்காரி… எனினும், தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஒரு கோபக்காரியாகக் காட்டிக்கொள்ள வேண்டிய நிலைமை அவருக்கு அந்தக் காலகட்டத்தில் இருந்தது. ஏகப்பட்ட வலிகளுடன்தான் இவரது பயணம் தொடங் கியது.

ஷூட்டிங்கில் சிவாஜி கணேசன் வரும்போதெல்லாம் எல்லோருமே மரியாதைக் காக எழுந்து நிற்கும்போது, சில்க் மட்டும் சேரில் உட்கார்ந்து இருப்பாராம். இதைப் பற்றி அவரிடம் அங்கிருந்தோர் பதறிக்கொண்டு கேட்டதற்கு, ‘நான் எழுந்து நின்னா, என்னுடைய குட்டி டிரஸ் சிவாஜி சாருக்கு கூச்சத்தை தந்துடுவிடும். அவருக்கு அந்த தர்மசங்கடம் வரக்கூடாதுன்னுதான் உட்கார்ந்தே இருக்கேன்’ என்றாராம். கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் இந்தப் பெண் இப்படி டான்ஸ் ஆடுகிறாரே என்று சிலர் முகம்சுளித்த சூழலிலும், அடுத்தவரின் கூச்சத்தையும் மதித்து நடந்த சில்க் மனசு பற்றி பலர் அறியவில்லை!

ஒரு காலத்தில் சில்க் சுமிதா பற்றி வதந்திகள் வராத பத்திரிகைகளே இல்லை. எத்தனை கேவலங்கள், அவதூறுகள், உயரங்கள், பள்ளங்கள், வந்தாலும் கலங்கா மல் அவைகளை துணிச்சலுடன் கடந்துள்ளார்.. ஆனால், தனக்கு என்ன தேவை என்பதை மட்டும் கடைசிவரை அறிந்துகொள்ள முடியாத அப்பாவியாகவே இருந்துள்ளார். திமிர் பிடித்தவள் என்ற பெயரை அனாயசயமாகத் தட்டிச் சென்ற சில்க், நிஜத்தில் ஒரு மிருதுவான குழந்தை என்பதை நெருங்கிப் பழகியவர்கள் மட்டும் இன்னமும் சொல்லி கொண்டே இருக்கிறார்கள்!!

வறுமையால் நக்சலைட்டாக மாற நினைத்தார், ஆனால் முடியவில்லை.. நடிப் பில் சாவித்ரி போல வரவேண்டும் என்று நினைத்தார், அதுவும் நடக்கமில்லை.. கல்யாணம், குழந்தை குட்டியுடன் சராசரி குடும்ப வாழ்க்கை வாழ ஆசைப் பட்டார்.. அதுவும் ஈடேறவில்லை.. கடைசியில் அவர் ஆசைப்படாத மரணம் 35 வயதிலேயே இழுத்துக்கொண்டு போய்விட்டது. அதன் மர்ம முடிச்சுகளை இன்னும் யாராலும் அவிழ்க்க முடியவில்லை!

இறுதி நாட்கள் சமூக ஒழுக்கம், சமூகக் கட்டுமானம் என்ற வரையறைக்குள் இவரைக் கொண்டுவந்து பெரும்பாலானோர் பார்க்கவேயில்லை. தன் உள்ளத்தை யாராவது விரும்பி ஏற்றுக்கொள்வார்களா என்ற ஏக்கத்திலேயேதான் இறுதி நாட்கள் கழிந்திருக்கின்றன. வலி நிறைந்த வாழ்க்கையின் மீது, பிடிப்பு தளர்ந்த நிலையிலும், சுற்றியுள்ளவர்களின் மீது நம்பிக்கையிழந்த நிலையிலும், பழிகள், காயங்கள் எல்லை மீறிய சூழலிலும்தான் தற்கொலை முடிவை எடுத்திருப்பார் போலும்!

இன்றளவும் தென்னிந்தியாவில் பேசப்படும் ஆளுமையாக சில்க் திகழ்கிறார்.

சில்க் ஸ்மிதா கடைசியாக நடித்த படம் ‘சுபாஷ்’. அர்ஜுன் ஹீரோவாக நடித்த இந்தப் படம், 1996-ம் ஆண்டு ரிலீஸானது. அந்த வருடம் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார் சில்க் ஸ்மிதா. அப்போது அவருக்கு 35 வயது.

2010ஆம் ஆண்டு சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகை வித்யாபாலன் நடித்தார். படத்தை மிலன் ருத்ரியா இயக்கினார். இந்தி, தமிழில் ஏக்தா கபூர் தயாரித்தார். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு, இந்தியில் ‘டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் படமாக வெளியானது. சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடித்த வித்யா பாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. சிறந்த ஒப்பனைக் கலைஞர் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் என மேலும் இரண்டு தேசிய விருதுகளையும் இந்தப் படம் பெற்றது.

‘டர்ட்டி பிக்சர்: சில்க் சக்கத் ஹாட்’ என்ற பெயரில் கன்னடத்திலும் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக வெளியாகி, ஹிட் ஆனது. பாகிஸ் தான் நடிகை வீணா மாலிக், சில்க் வேடத்தில் நடித்தார். மேலும், மலை யாளத்திலும் சனா கான் நடிப்பில் ‘க்ளைமாக்ஸ்’ என்ற பெயரில் படமாக வெளிவந்தது.

இந்நிலையில், சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தமிழில் வெப் சீரிஸாக எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித் என 2018ல் அறிவிப்பு வந்தது அதற்குள் அவர் அரசியல் படங்களில் கவனம் செலுத்திவருகிறார். சில்க் படம் வருமா என்பது கேள்விக்குறி.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...