இன்றைய ராசி பலன்கள் – 12.02.2022

 இன்றைய ராசி பலன்கள் – 12.02.2022

ராசி- பலன்கள்

வெள்ளிக்கிழமை

மேஷம்

நண்பர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். எழுத்து சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மனை தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். வித்தியாசமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். சுபமான நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

அஸ்வினி : சுபிட்சமான நாள்.
பரணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
கிருத்திகை : தாமதங்கள் குறையும்.

ரிஷபம்

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மனதிற்கு புதிய நம்பிக்கையை உருவாக்கும். நண்பர்களுடன் கலந்துரையாடி மனம் மகிழ்வீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். விருப்பமான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். ஆராய்ச்சி தொடர்பான விஷயங்களில் புதுவிதமான சூழ்நிலைகள் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

கிருத்திகை : நம்பிக்கை மேம்படும்.
ரோகிணி : புத்துணர்ச்சி உண்டாகும்.
மிருகசீரிஷம் : புதுமையான நாள்.

மிதுனம்

ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் உண்டாகும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவமும், லாபமும் ஏற்படும். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மிருகசீரிஷம் : மாற்றம் உண்டாகும்.
திருவாதிரை : ஒத்துழைப்பு மேம்படும்.
புனர்பூசம் : அனுபவம் ஏற்படும்.

கடகம்

வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகள் ஈடேறும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். கூட்டு வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : முயற்சிகள் ஈடேறும்.
பூசம் : முன்னேற்றமான நாள்.
ஆயில்யம் : ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்

குடும்ப உறுப்பினர்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். சிறு வியாபாரங்களின் மூலம் புதிய அத்தியாயத்தை உருவாக்குவீர்கள். அரசு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல் உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபமும், அலைச்சலும் ஏற்படும். தந்தைவழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

மகம் : சாதகமான நாள்.
பூரம் : முன்னேற்றம் உண்டாகும்.
உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.

கன்னி

குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முயற்சிக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். கவலைகள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திரம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
அஸ்தம் : மகிழ்ச்சி உண்டாகும்.
சித்திரை : அங்கீகாரங்கள் கிடைக்கும்.

துலாம்

உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மைக்கான சூழ்நிலைகள் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மற்றும் அது சார்ந்த பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். உயர்கல்வி தொடர்பான பணிகளில் எண்ணிய உதவிகள் கிடைக்கும். கலைத்துறை சார்ந்த துறைகளில் லாபகரமான சூழல் உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு

சித்திரை : மேன்மையான நாள்.
சுவாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
விசாகம் : லாபகரமான நாள்.

விருச்சிகம்

உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எளிதில் முடியக் கூடிய செயல்கள் கூட தாமதமாகும். நண்பர்களின் செயல்பாடுகளை பற்றிய கருத்துக்கள் கூறுவதில் கவனம் வேண்டும். வெளியூர் பயணங்களில் சிந்தித்து செயல்படவும். கால்நடைகள் தொடர்பான செயல்பாடுகளில் நிதானத்துடன் செயல்படவும். அன்பு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : அனுசரித்து செல்லவும்.
அனுஷம் : கவனம் வேண்டும்.
கேட்டை : நிதானத்துடன் செயல்படவும்.

தனுசு

எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் மனதளவில் மாற்றங்களை ஏற்படுத்தும். பொறுமையான செயல்பாடுகளின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு லாபகரமான சூழல் ஏற்படும். வாழ்க்கைத்துணைவரிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : மாற்றமான நாள்.
பூராடம் : லாபம் உண்டாகும்.
உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.

மகரம்

குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். நுட்பமான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். செல்வாக்கு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு

உத்திராடம் : மகிழ்ச்சி உண்டாகும்.
திருவோணம் : வெற்றிகரமான நாள்.
அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும்.

கும்பம்

குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். மனதில் தோன்றும் சிந்தனைகளில் மாற்றம் உண்டாகும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழல் அமையும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : அறிமுகம் கிடைக்கும்.
சதயம் : மேன்மை உண்டாகும்.
பூரட்டாதி : சாதகமான நாள்.

மீனம்
சுபகாரியங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் மற்றும் அது சார்ந்த உதவிகள் கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குறுகிய தூரப் பயணங்களின் மூலம் உண்டாகும் ஏற்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் திறமைகள் வெளிப்படும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் அதிகரிக்கும். நிறைவான நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

பூரட்டாதி : உதவி கிடைக்கும்.
உத்திரட்டாதி : மாற்றம் உண்டாகும்.
ரேவதி : திறமைகள் வெளிப்படும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...