ஹிஜாப் பிரச்சினை எல்லா முஸ்லிம் பெண்களுக்கும் பொருந்துமா?

 ஹிஜாப் பிரச்சினை எல்லா முஸ்லிம் பெண்களுக்கும் பொருந்துமா?

உடுப்பியில் உள்ள மகாத்மா காந்தி நினைவுக் கல்லூரியில் முஸ்லீம் பெண்கள் நீதி கோரி ஹிஜாப் அணிந்து போராட்டம் நடத்தியதையடுத்து, கல்லூரி வளாகத்தில் இந்து சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் குங்குமப் பொட்டு மற்றும் தலைக்கவசம் அணிந்து கோஷங்களை எழுப்பியதைத் தொடர்ந்து போராட்டம் வெடித்தது. இதனால் இந்தப் போராட்டம் முழுவது மாக தீவிரமானது.

மாநிலங்களின் பல பகுதிகளில் போராட்டங்கள் தீவிரமடைந்ததையடுத்து, கர்நாடக அரசு மாநிலத்தில் உள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூன்று நாட்களுக்கு மூட உத்தரவிட்டது. நிர்ண யித்த சீருடையைத் தவிர வேறு எந்தத் துணியையும் கொண்டு வரக் கூடாது என்று கர்நாடக அரசு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தொடரப் பட்ட மனுக்கள் மீது கர்நாடக உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தி வரு கிறது.

கேள்வி : முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் எனும் முக்காடு போட்டு கல் லூரிக்கு வருவதைத் தடை செய்யும் பா.ஜ.க.வினர் சீக்கியர் மாணவர் கள் தலைப் பாகை அணிந்து வருவதைத் தடுக்கத் தயங்குவது ஏன்?

பதில் : தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளிலும் அந்தத் தடை உள்ளது. புர்கா அணியக்கூடாது. முகமூடி போட்டுகிட்டு ஆள் யாருன்னே தெரியாம எப்படி? கல்லூரிக்குள்ளே விடுவாங்க. பிரான்ஸ்லேயும், எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் இந்தத் தடை உள்ளது.

ஓட்டு போடறதுக்கும் விலக்கு கேட்டாங்க. உச்ச நீதிமன்றம் விலக்கு தர முடியாது. நீ ஓட்டே போடத்தேவையில்லை. கிளம்பு இடத்தை விட்டுன்னு சொல்லிடுச்சு!

பை த பை சிங் தலைப்பாகை இந்திய அரசியல் சட்டத்துலேயே, மத வழிபாட்டு சட்டத்திலேயும் இருக்கு. இராணுவத்திலேயும் இருக்கு. அவங்க குறுவாள் வைத்துக்கொள்ளவும் அனுமதி இருக்கு. அதாலே யாரையும் தாக்கக்கூடாது. தாக்க மாட்டாங்க.

சிங் முகமூடி அணிந்தா அதுக்கும் இங்கே தடைதான்.

இந்துமத வழிபாட்டுச் சட்டம்னு வருதா இல்லையா? அது சீக்கிய மதத்துக் கான வரைவும் பிரிவும் இடம்பெற்றிருக்கு.

ஆனா இப்ப விமானத்துல இந்திரா காந்தி அசம்பாவிதத்துக்கப்புறம் தடை பண்ணியிருக்காங்க. மற்றபடி பொது இடங்களில் வைத்துக்கொள்ளலாம். அவங்க மதக் கொள்கைப்படி அது ஒரு கௌரவம் அதாலே யாரையும் தாக்க மாட்டாங்க.

ஆனால், முஸ்லீம் ஹிஜாப் என்பது முகமூடி அணிவது அல்ல. இதை ஷியா பிரிவு முஸ்லீம்கள் பின்பற்றுவது. ஆனால் ஹிஜாப்னு செய்தி போட்டு முகமூடி அணியும் நிகாப்பைத்தான் காட்டறாங்க. அது எல்லா மாநிலத்திலும் எல்லா பள்ளி, கல்லூரிகளிலும் உள்ள தடை.

ஹிஜாப் முகத்தை மூடாமல் அணியும் அங்கி, நிகாப் முகத்தை மூடிய அங்கி, புர்கா உடல் முழுவதும் முகமூடி கொள்ளைக்காரன் மாதிரி அணி யும் அங்கி.

புர்கா, நிகாப் அணியும் தடையைத்தான் இப்படி சொல்றாங்க. டி.வி. செய்தி களில் அனைத்திலும் இந்த முகமூடி அணிவதைத்தான் காட்டறாங்க.

அது சட்டப்படி தடை! எல்லா நாடுகளிலும் அரபு நாடுகளைத் தவிர.

தமிழகத்தில் உள்ள எந்தப் பள்ளி, கல்லூரிகளிலும் ஆசிரியர் உட்பட முகமூடியாக அணியும் நிகாப் அணியத்தடை, புர்கா அணியத் தடை. அப்படி அணியனும்னா உன் வீட்டுல அணிஞ்சுக்க. அரசு பொது வேலைக்கு வரக்கூடாது. எப்படி சம்பந்தப்பட்ட ஆள்தான் வேலை பார்க்கிறாங்கன்னு தெரிஞ்சுக்கறது?

டிரைவிங் லைசன்ஸ் எப்படி எடுக்கிறது. ஓட்டு ஐ.டி. எப்படி வழங்கறது? ஆதார் கார்ட் எப்படி எடுக்கிறது? தீவிர மத அடிப்படைவாதம்தான் வேணும்னா உன் மத நாட்டுக்குத்தான் போகணும் இங்கே இருக்க முடி யாது. இங்கே மதச் சட்டம் செல்லுபடியாகாது.

இது தமிழ்நாடு உட்பட எல்லா மாநிலத்திலும் எப்போதும் தடை! பள்ளிக் கூடம் பக்கம் போகாதவன் படிக்காதவனுக்கு இது தெரிய வாய்ப்பில்லை.

இது ஷியா பிரிவு ஹிஜாப் இல்லை, சன்னிப் பிரிவு நிகாப்! இதுக்குத் தமிழ் நாடு உட்பட எல்லா மாநிலத்திலும், எல்லா நாடுகளிலும் தடை. முஸ்லீம் தீவிர மத நாடுகளைத் தவிர. அவங்களே இதை ஃபாலோ பண்றது இல்லை. தீவிர வாதிகளைத் தவிர.

முகமூடி அணியத் தடை என்பதைப் பொதுவாகவே ஹிஜாப் அணியத் தடைன்னு செய்தி வெளியிட்டு, ஷியா பிரிவு முஸ்லீம்களைத் தூண்டி விடுவதற்காக சன்னி முஸ்லீம் தீவிரவாதிகள் இதைக் கிளப்பிவிடறாங்க. மீடியாக்காரனும் இந்தச் சதி வேலைகளில் ஈடுபடுகிறான்.

எல்லா ஊடகங்களிலும் முகமூடி அணிந்த அங்கியைத்தான் காட்டறாங்க. அது எப்போதுமே கல்வி நிலையங்களில், பொது அரசு அலுவலகங்களில், பணிபுரியும் இடங்களில் என எல்லா இடத்திலும் தடை தான்.

ஷியா பிரிவு முஸ்லீம் பிரிவுல பெண்களுக்கு அதிக உரிமை! சன்னி மதத் துல பெண்கள் எப்போதுமே ஆண்களுக்கு அடிமை. இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் நிறைய.

ஷியா பிரிவுல ஆண்கள் பெண்கள்கிட்டே மாட்டிக்கிட்டு அழுகிற அளவுக்கு போயிருக்காங்க. சன்னியில அது எதிர்பார்க்கவே முடியாது.

ஈரான்ல இருக்கின்ற நீதிமன்ற வீடியோக்கள் எல்லாம் இருக்குது. நீதி மன்றத்தின் லைவ் காட்சிகளே இணையத்தில இருக்கிறது. அவங்க எல்லா ருமே ஹிஜாப் தான் அணிந்திருப்பாங்க. பெண்கள் எல்லா அரசு அலுவல கங்களிலும் பணிபுரிவார்கள்.

முஸ்லீம் தீவிரவாதம்னா அது சன்னி அடிப்படைவாதியைத்தான் குறிக் கும்.

இந்த அடிப்படை வாதங்களை எதிர்க்கும் மதப் பிரிவுகள், ஜாதிகள்தான் ஷியா, இபாதி, குரேஷி, சூபிசம் என உள்ள 150 ஜாதிப் பிரிவுகள்  லெப்பை, மரைக்காயர் என உள்ள அனைத்தும் அடங்கும்.

அவன் மத்தவங்களை ஒண்ணு சேர்த்து பிரச்சினையை வேண்டுமென்றே பெரிதாக்கி கலவரத்தை உண்டு பண்ண பிளான் பண்ணுவான். ஆனால் யாரையும் கிட்டே சேர்த்துக்கமாட்டான். கலவரத்துக்கு மட்டும் ஒண்ணு சேர்த்துப்பான். அதில் இதுவும் ஒன்று.

சீக்கிய ஆண்கள் கூட பெரும்பாலானவர்கள் தலைப்பாகை அணிவதை விரும்பு வதில்லை. உளவுப்பிரிவில் வேலை பார்ப்பவர்கள் இப்படி அணிவ தில்லை.

ஒரு சிலர்தான் சிறப்பு அனுமதியுடன் சட்டம் வழங்கிய அனுமதியுடன் ராணுவத் திலும் அதிகாரிகளாகப் பணிபுரிந்து வருகின்றனர். சிப்பாய்களில் இருப்பதில்லை. ஏன்னா அதுவே எதிரி ராணுவத்துக்கு சாதகமாச்சே! ஆனால் சீக்கியப் பெண்கள் எங்கே தலைப்பாகை அணிகிறார்கள்? முகமூடி அணிகிறார்கள்?

சீக்கிய மதத்தின் தத்துவமே, நான் இந்துவும் இல்லை முஸ்லீமும் இல்லை என்பதுதான் சீக்கிய மதம்! தனி இனமாகத்தான் நிறுவிக்கொள்கிறார்கள். அவர்கள் கோவிலுக்குள் யார் வேண்டுமானாலும் போகலாம். சில கலாச் சார உடைக்குறி களுடன் அவ்வளவுதான். வெளியில பின்பற்றணும்னு அவசியம் இல்லை. எந்த மதப் பெண்கள் போனாலும் தலையில துணியை போர்த்திகிட்டு போகணும். முகத்தை மூடியல்ல. அதுவும் நுழைவு வாயில்ல போர்த்திகிட்டு போய் உள்ளே எடுத்திடறாங்க.

எல்லாருமே சமம். எல்லாருமே லங்கர் உணவு விருந்தில் பாரபட்சமின்றி கலந்துக்கறாங்க. டொனேசன் தராங்க.

பள்ளி, கல்லூரிக்குள் சீருடைத் திட்டம்தான் இருக்கணும். அவங்கவுங்க இஷ்டத் துக்கு உடை உடுத்தி ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கக்கூடாது. அதுக்குத்தானே பள்ளிச் சீருடைத் திட்டம். சீருடைப் பணியாளர்கள் காவலர் களை உருவாக்கியிருக்கோம். அதுல எப்படி மத டிரஸ்ஸை தூக்கிட்டு வருவே. நீயே படிச்சுக்க நீயே பிசினஸ் பண்ணிக்க. நீயே சோறு தின்னுக்க மத்தவங்க கிட்டே வராதே!

சன்னி முஸ்லீம் பெண்கள் பள்ளி, கல்லூரிக்கு வந்தாதான் சந்தோஷ மாகவே சுதந்திரமாகவே இருக்குதுங்க. வீடுன்னா பயப்படுதுங்க. மீண்டும் சிறையான்னு. இதுல இதுங்க இந்த பிட்டை வேற போட்டுகிட்டு திரியுதுங்க.

நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க இந்த உடை பிரச்சினை கிடந்து உருட்டுது.

கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சினையை கண்டித்து, மனித உரிமை வழக்கறிஞர் மலாலா யூசுப்சாய் ஒரு பதிவிட்டிருக்கிறார், “முஸ்லீம் பெண்கள் ஓரங்கட்டப்படுவதை நிறுத்த வேண்டும்” என்று இந்திய தலைவர்களை வலியுறுத்தினார். ஏற்கனவே இவர் காஷ்மீர் குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு செல்ல உதவுமாறு ஐ.நா.வை மலாலா வலியுறுத்தி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்பொழுது ட்விட்ட ரில் கர்நாடகாவில் நடக்கும் பிரச்சனை குறித்து பதிவிட்டுள்ள மலாலா, பெண்களை ஹிஜாப் அணிந்து பள்ளிகளுக்கு செல்ல அனுமதிக்க மறுப்பது திகிலூட்டுவதாக உள்ளது.

மேலும் இதுபற்றி அவர் கூறுகையில், “பெண்கள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு செல்ல அனுமதிக்க மறுப்பது பயங்கரமானது. பெண்களின் புறக்கணிப்பு தொடர்கிறது. குறைவாகவோ அல்லது அதிகமாகவோ அணி வது அவர்களின் விருப்பம். இந்தியத் தலைவர்கள் முஸ்லீம் பெண்கள் ஓரங்கட்டப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்”.

சமீபத்தில் கல்லூரிகளில் ஹிஜாப் தடை செய்யப்பட்டதற்கு எதிராக கர்நாடகாவில் போராட்டங்கள் மற்றும் வன்முறை சம்பவங்களுக்கு மத்தி யில் அவரது ட்விட்டர் பதிவு வந்துள்ளது. மேலும் இவருடைய கருத்துக்கு பல்வேறு தலைவர்களும் இங்கு நடக்கும் நிகழ்வுகளை அறியாமல் அவர் இத்தகைய பதிவு செய்துள்ளது அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது என்று கருத்தை அறிவித்துள்ளார்கள்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...