தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசுக் கல்லூரிக் கட்டணத்தையே நிர்ணயிக்க வேண்டும்

 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசுக் கல்லூரிக் கட்டணத்தையே நிர்ணயிக்க வேண்டும்

மருத்துவக் கல்விக்கான கட்டணங்களை நிர்ணயம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவதற்கு ஏற்ற வரைவுகளைத் தேசிய மருத்துவ ஆணையத்துக்குத் தயாரித்து வழங்கும்படி இந்திய மருத்துவக் குழுவின் (Medical Council of India) ஆட்சிமன்றக் குழுவுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. அதைத் தொடர்ந்து, 23.11.2019 அன்று இந்திய மருத்துவக் குழு, அதற்கான வல்லுநர் குழு (Expert Committee) ஒன்றை அமைத்தது. பின்னர், அந்தக் குழு தேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ் செயல்பட்டது.

அந்த வல்லுநர் குழு, எம்.பி.பி.எஸ் மற்றும் முதுநிலை மருத்துவ மேற்படிப்பு களுக்கான கட்டணங்களை நிர்ணயிப்பதற்கு வழிகாட்டும் வகையில் 26 வழி முறைகளைத் தேசிய மருத்துவ ஆணையத்துக்குப் பரிந்துரைத்தது. அந்தப் பரிந்துரைகளைப் பெற்றுக்கொண்ட தேசிய மருத்துவ ஆணையம், அதைத் தேசிய மருத்துவ ஆணையத்தின் வலைதளத்தில் 25.5.2021 அன்று பதிவேற்றம் செய்து, அந்தப் பரிந்துரைகள் குறித்த பொதுக்கருத்துகளை வழங்கும்படி அனைவரையும் கேட்டுக் கொண்டது. அதைத் தொடர்ந்து, பொதுமக்கள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சங்கங்கள் என்று பல்வேறு தரப்புகளிலிருந்து 1800 கருத்துகளைத் தேசிய மருத்துவ ஆணையம் பெற்றது.

அதன் பிறகு, தேசிய மருத்துவ ஆணையம் 21.10.2021 அன்று முன்பிருந்த வல்லுநர் குழுவை மாற்றியமைத்து, அந்தக் குழுவிடம் பொதுவாகப் பெறப்பட்ட 1800 கருத்துகளையும் சமர்ப்பித்து, குழுவின் கருத்தை வேண்டியது. அந்தக் குழு 1800 கருத்துகளையும் பரிசீலித்து, தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெறும் எம்.பி.பி.எஸ் மற்றும் முதுநிலை மருத்துவ மேற்படிப்பு மாணவர்களிடம் கட்டணங்களைப் பெறுவதற் கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி, தேசிய மருத்துவ ஆணையத் திடம் வழங்கியது. தேசிய மருத்துவ ஆணையம் 29.12.2021 அன்று அதை ஏற்றுக்கொண்டது.

அந்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இந்தியாவிலிருக்கும் மாநில / ஒன்றியப் பகுதியிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் இருக்கும் எம்.பி.பி.எஸ் மற்றும் முதுநிலை மேற்படிப்புகளுக்கான இடங்களில் சேர்க்கை பெறும் மாணவர்களில் 50% மாணவர்களிடம், மாநில / ஒன்றியப் பகுதியிலிருக்கும் அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தையே பெற வேண் டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, தனியார் மருத்துவக் கல்லூரி அல்லது நிகர்நிலைப் பல்கலைக்கழகங் களில் அரசு ஒதுக்கீட்டில் சேர்க்கை பெறும் 50% மாணவர்களுக்கு அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தையே பெற வேண்டும். அரசு ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை 50% இடங்களுக்குக் குறைவாக இருக்கும் நிலையில், மீதமிருக்கும் இடங்களைத் தகுதி அடிப்படையிலான மாணவர்களைத் தேர்வு செய்து, அவர் களிடமிருந்து அரசுக் கட்டணத்தையேப் பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவிகித இடங்களுக்கு அரசுக் கல்லூரிக் கட்டணம் என்கிற அரசாணையை உடனே பிறபிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.

“தமிழ்நாட்டில் முதற்கட்ட மருத்துவ மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு நேற் றுடன் முடிவடைந்துவிட்ட நிலையில் கல்லூரி ஒதுக்கீட்டுப் பட்டியல் வரும் 15ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரி இடங்கள் அதிக அளவில் ஒதுக்கப்படும் இரண்டாம்கட்டக் கலந்தாய்வும் அடுத்த சில வாரங்களில் நிறைவடைந்துவிடும். அதற்குள்ளாக, தனியார் மருத்துவக் கல்லூரி களில் 50 சதவிகித இடங்களுக்கு ரூ.13,610  மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும் என்கிற அரசாணையைத் தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளைவிட, தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங் களில் இந்தக் கட்டண விகிதம் நடைமுறைப்படுத்தப்படுவதுதான் மிகவும் அவசியமானதாகும். தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் ஆண்டுக் கட்டணமாக ரூ. 20 லட்சம் முதல் ரூ. 25 லட்சம் வரை வசூலிக்கப்படும் நிலை யில் 50 விழுக்காடு இடங்களுக்கு ரூ. 13,610 மட்டும் வசூலிக்கப்பட்டார் அது ஏழை மாணவர்களுக்குப் பேருதவியாக இருக்கும்.

ஆனால் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை அவற் றின் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வையும் மத்திய அரசுதான் நடத்து கிறது. கட்டணத்தையும் மத்திய அரசே நிர்ணயிக்கிறது. இத்தகைய சூழலில் அவற்றில் உள்ள 50 சதவிகித இடங்களுக்கு அரசு கட்டணத்தை யார் நிர்ண யிப்பது என்ற வினா எழுகிறது. மத்திய அரசுடன் தமிழக அரசு பேசி தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 50 சதவிகித இடங்களுக்கான கட்டணம் குறித்த தெளியான ஆணைகளையும் உடனடியாகப் பிறப்பிக்க வேண்டும்” என்றார் டாக்டர் ராமதாஸ்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...