தற்காப்புக்கலையையும்பெண்கள் கட்டாயம் கற்கவேண்டும்
“தற்காப்புக்கலையில் ஆண்கள் மட்டும் சிறந்து விளங்கமுடியும் என்ப தில்லை. பெண்கள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவிலும் சிறந்த தற்காப்புக்கலை வீராங்கனைகளாக பெண்கள் விளங்குகிறார்கள்” என் கிறார் சென்னையைச் சேர்ந்த தற்காப்புக்கலை பயிற்சியாளர் பாலி சதீஷ்வர். அவரிடம் பேசினோம்.
உங்களிடம் தற்காப்புக்கலை பயிற்சி பெற்ற பெண்களைப் பற்றிச் சொல்லுங்கள்?
“பரமேஸ்வரி என்கிற 8 வயது சிறுமி என்னிடம் தற்காப்புப் பயிற்சி பெற்று. கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கினார். அவர் கலந்துகொண்ட எல்லா ஸ்டேட் லவல், நேஷனல் லவல் போட்டிகளிலும் சேம்பியன் பட்டம் பெற்றுள்ளார். அந்தப் பெண்ணை யாராலும் வெல்ல முடிய வில்லை. ஆண் களுக்கு நிகராகப் போட்டியிட்டு வென்றார்.
அடுத்து சங்கரி என்கிற பெண் எடையைக் குறைப்பதற்காக பிரான்ஸி லிருந்து வந்து என்னிடம் பயிற்சி எடுத்துக்கொண்டார். அதோடு தற்காப்புப் பயிற்சியான குத்துச்சண்டையையும் கற்றுக்கொண்டார். சில போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கம் வென்றார். இது மாதிரி நிறைய பெண்கள் என் னிடம் தற்காப்புக்கலையான கராத்தே, குத்துச்சண்டை போன்ற போட்டி களில் கலந்து கொண்டு பதக்கம் வென்றிருக்கிறார்கள்.
2019 கோவிட்டுக்கு முன்னால் பெண்கள் தினம் அன்று எல்.என்.டி.யில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான பெண்களுக்கு குழு பயிற்சி கொடுத்தேன். இந்தப் பயிற்சியில் பெண்களால் நடனம், பாட்டு, ஓவியம் போன்ற மென்மையான கலைகளைத்தான் கற்கமுடியும், சண்டைப் பயிற்சிகள் ஆண்களால்தான் முடியும் என்கிற எண்ணத்திலிருந்தவர் களுக்குப் பெண் களால் எதையும் செய்யமுடியும். பலமான ஆண்களை யும் சில உத்திகளின் மூலம் தாக்கி சமாளிக்க முடியும் என்கிற தன்னம்பிக்கையை இந்தப் பயிற்சியின் மூலம் பெற்றதாகச் சொன்னார் கள். அதோடு அங்கிருந்த ஆண்களுடன் அவர்கள் தற்காப்புக்கலை உத்திகளைப் பயன்படுத்தி சண்டையிட்டு நிரூபித்தார்கள்.”
பெண்களுக்குத் தற்காப்புக்கலை எவ்வளவு முக்கியமானது?
“எந்த ஒரு சூழ்நிலையிலும் தன்னைத் தற்காத்துக்கொள்ள முடியும். எந்த நேரமும் பெப்பர் பவுடரையும் வைத்திருக்கமுடியாது. இந்தக் கலையைக் கற்ற பெண்கள் பிறர் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய தில்லை. பிற பெண்கள் ஆபத்தில் இருக்கும்போது கூட அவர்களுக்குப் பாது காப்பு தரமுடியும். தற்காப்புக்கலை என்பது ஆண்களுக்கான துறை மட்டுமல்ல. இந்தத் துறையில் பெண்கள் நிறைய சாதித்திருக்கிறார்கள். அதிலும் இந்தியா வில் தற்காப்புக்கலையில் பெண்கள் நிறைய பெரிதாகச் சாதித்திருக்கிறார்கள். அதற்குப் பெரிய உதாரணம் இந்திய குத்துச் சண்டை வீராங்கனை மேரிகோம்.
ஏனென்றால் ஆண்களே முப்பதிலிருந்து முப்பத்தைந்து வயதிற்குள் போட்டியிலிருந்து ஓய்வு பெறும்போது மூன்று பிள்ளைகளுக்குத் தாயான 39 வயதாகும் மேரிகோம் போட்டியிலிருந்து விலகாமல் பல போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்று வரு கிறார். ஆறு முறை வேர்ல்டு சோம்பியனாகவும் ஒருமுறை இந்தியாவின் முதல் பெண் குத்துச்சண்டை வீராங்களையாக ஒலிம்பிக்கில் பிரான்ஸ் பதக்கம் வென்றார்.”
எடை, உயரம் குறைவான பெண்களும் தற்காப்புக்கலை பயிற்சி எடுத்துக் கொள்ளலாமா?
“தற்காப்புக் கலையைக் கற்றுக்கொள்ளப் பெண்களுக்குப் எடை, உயரம், பலமோ, வயதோ தடை இல்லை. ஆர்வமும் பயிற்சியும் இருந்தாலே போதும். எல்லாவிதத்திலேயும் ஆண்களுக்குப் பெண்கள் சரிசமம். தற்காப் புக்கலை ஆண்களுக்கு மட்டுமே சாத்தியப்படும் என்பது இப்போது மாறி விட்டது என்பதற்கு உதாரணமும் மேரிகோம்.
இன்னொரு உதாரணம், தற்காப்புக்கலை பயிற்சியாளர், பிரபல நடிகர் புரூஸ்லி மிகவும் சக்தி வாய்ந்தவர், பலசாலி என்பது எல்லாருக்கும் தெரியும். அப்படிப்பட்ட பலசாலி உருவாகக் காரணமாக இருந்தவர் ஒரு பெண். அவர் கற்றுக்கொண்ட தற்காப்புக்கலை மார்சல் ஆர்ட் விஞ்ஜுனோ. அந்த விஞ்ஜுனோவை உருவாக்கியவர் ஒரு பெண். அவர் பெயர் நாக்மாய். அவர் சீனாவைச் சேர்ந்தவர்.
அவரை ஒரு ஆண் திருமணம் செய்ய விரும்பு கிறார். அந்தப் பெண்ணோ, என்னிடம் மோதி வெற்றி பெற்றபின்தான் திருமணம் என்கிறார். அந்த ஆண் நாக்மாயிடம் மோதி எளிதாக வென்று விடலாம் என்கிற எண்ணத்தில் ஒத்துக்கொள்கிறார். ஆனால் நாக்மாயை அவரால் அவ்வளவு எளிதில் வெல்லமுடியவில்லை. மிக விரைவாகவே தோற்றுவிடுகிறார். அப்போது தான் விஞ்ஜுனோ என்கிற தற்காப்புக்கலை பற்றிய புகழ் உலகில் பரவுகிறது. ஆண்கள் பலர் நாக்மாயியிடம் வந்து விஞ்ஜுனோ கலையைக் கற்றுக்கொள்கிறார்கள். அதில் கைதேர்ந்தவர் தான் கிப்மேன் என்கிற ஐ.பி. மேன். அவர்தான் புரூஸ்லியின் குரு.
தற்போது மேற்கத்திய, கிழக்கத்திய நாடுகளில் பெண்கள் தற்காப்புக்கலை களில் முன்னணியில் இருக்கிறார்கள். சர்தேச அளவில் சொல்லவேண்டு மென்றால் மறைந்த பிரபல குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் மகள் லைலா அலி, மற்றும் எம்.எம்.ஏ., யூ.எப்.சி. பைட்டர் காண்டா ரோஸி. அமேண்டோ மோனி போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.”
தற்காப்புக்கலையை யாரிடம் கற்கலாம்?
“இசைக்கு எப்படி இனம், மொழி நாடு என்கிற பேதம் கிடையாதோ அது போல் தற்காப்புக்கலைக்கும் இனம், மொழி பேதம் கிடையாது. ஆண் குருவிடம்தான் கற்கவேண்டும், பெண்கள் பெண் குருவிடம்தான் கற்க வேண்டும் என்பது கிடையாது. எந்த குருவிடமும் கற்கலாம். இந்தக் கலையில் சிறந்தவர்களிடம் கற்கவேண்டும். இனிவரும் காலங்களில் பெண்கள் எப்படி நடனம், பாட்டு, அழகுக்கலை கற்கிறார்களோ அதேபோல் தற்காப்புக்கலையையும் ஒவ்வொரு பெண்ணும் கற்கவேண்டும் என்பது என் கருத்து.”
உங்கள் எதிர்கால லட்சியம்?
“வருகிற மார்ச் மாதம் சிங்கள குத்துச்சண்டை வீரனை எதிர்த்து பாக்ஸிங் சாம்பியன்ஷிப்பில் சண்டையிட இருக்கிறேன். அந்தப் போட்டியில் அந்த வீரரை முதல் சுற்றிலேயே நாக்அவுட் செய்வேன்.
ஏப்ரல் மாதம் சென்னையில் முதன்முறையாக எம்.எம்.ஏ. எனப்படும் உலகின் மிக ஆபத்தான விளையாட்டான மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் வோல்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் மேலைநாட்டு குத்துச்சண்டை வீரனை எதிர்த்து மோதி வெற்றி பெற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்ப் பேன்.
வேர்ல்ட் சாம்பியன்களை உருவாக்க, நாட்டிலேயே பெரிய சர்வதேசத் தரம் வாய்ந்த மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சிக்கூடம் சென்னை மதுரவாய லில் தொடங்கி இருக்கிறேன். இதில் எளிய பின்னணியில் உள்ள திறன் வாய்ந்த இளைஞர், இளைஞிகளுக்குப் பயிற்சி தந்து வேர்ல்ட் சாம்பியன் களை உருவாக்குவேன்” என்றார் பாலி சதீஷ்வர்.