உள்ளாட்சித் தேர்தல் வெற்றி விவரம்
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய
9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. அதன்படி கடந்த 6ஆம் தேதி 9ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது. மாவட்ட மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களுக்கு தி.மு.க., அ.தி.மு.க.வினர் பெரும்பான்மையான இடங்களில் நேருக்கு நேர் போட்டியிட்டனர். மேலும் உள்ளூரில் செல்வாக்குள்ள நபர்கள் பலரும் சுயேச்சையாக களமிறங்கியுள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தல் விவரங்கள்
- உள்ளாட்சி எண்ணிக்கை 9
- மொத்த மாவட்ட ஊராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 140
- மொத்த ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கை 74
- மொத்த ஊராட்சி ஒன்றிய வார்டுகளின் எண்ணிக்கை 1381
- ஊராட்சிகளின் எண்ணிக்கை 2,901
- மொத்த ஊராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 22,581
- மொத்தம் 79,433 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
- இதில் 2,981 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு.
- இரண்டு கட்டத் தேர்தலில் சுமார் 78 சதவிகிதம் வாக்குகள் பதிவானது.
- இந்தத் தேர்தலில் மக்கள் ஒவ்வொருவரும் 4 வாக்குகள் அளித் தனர். மாவட்ட கவுன்சிலருக்கு ஒரு ஓட்டு, ஒன்றிய கவுன்சி லருக்கு ஒரு ஓட்டு, ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு ஒரு ஓட்டு.
- நான்கு ஓட்டுகள் போடவேண்டியிருந்ததால் மின்னணு இயந்திரம் பயன்படுத்தப்படவில்லை. அதனால் 4 ஓட்டுச் சீட்டுகளும் நான்கு நிறங்களில் அச்சிடப்பட்டது.
- ஏற்கெனவே 2019ல் ஆண்டு டிசம்பரில் நடந்த 27 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. பெரிய வெற்றியைப் பெற்றிருந் தாலும் இந்த அளவுக்கு மிக அதிக இடங்களை கைப்பற்றவில்லை. ஆனால் இந்த 9 மாவட்டத் தேர்தலில் தி.மு.க. பெரும்பாலான இடங் களைப் பெற்றிருக்கிறது. இது தி.மு.க.வுக்குக் கிடைத்த இமாலய வெற்றியாகக் கருதப்படுகிறது.
- சட்டசபைத் தேர்தலில் வென்று தி.மு.க. ஆட்சிக்கு வந்தததற்கு பிறகு 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் நடந்துள்ளது. அதில் கிடைத்துள்ள வெற்றி தி.மு.க. அரசுக்கு மக்கள் கொடுத்த மிகப் பெரிய அங்கீகாரமாகவும் கருதப்படுகிறது.
வெற்றி பெற்றோர் விவரம்
- ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்குத் தேர்தல் நடந்த 1,381 இடங்களில் 1,368 பதவிகளுக்குக்கான முடிவுகள் வெளிவந்துள்ளன. (13-10-2021 நிலவரப்படி) இதில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 1,007 இடங்களையும் அ.தி.மு.க. 214 இடங்களையும் பா.ம.க. 45 இடங்களையும் அ.ம.மு.க. 5 இடங்களையும் தே.மு.தி.க. 1 இடத்தை யும் கைப்பற்றி இருக்கின்றன.
- 9 மாவட்டங்களிலும் உள்ள ஒன்றியங்களில் கிட்டத்தட்ட அனைத்து ஒன்றியங்களையுமே தி.மு.க. கைப்பற்றியது. ஒன்றியங்களைப் பொறுத்தவரை அனைத்து இடங்களிலும் தி.மு.க. 90 சதவிகிதத்துக்கு மேலாக வெற்றி பெற்றிருக்கிறது.
- மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் இரு பதவிகளையும் சேர்த்து 95 சதவிகித இடங்களை தி.மு.க. கைப்பற்றி உள்ளது.
- மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் என மொத்தம் 1,521 இடங்களில் தி.மு.க. கூட்டணி 1,145 இடங்களில் வென்றுள்ளது. அதிமுக 214 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.
உள்ளாட்சித் தேர்தல் அதிசயம்
- கோவையில் உள்ளாட்சித் தேர்தலில் குருடாம்பாளையம் 9வது வார்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. வார்டு உறுப்பினர் பதவிக்கு பா.ஜ.க. பிரமுகர் கார்த்திக் போட்டியிட்டார். இவர் ஒரு ஓட்டு வாங்கி படுதோல்வி அடைந்தார். இவரது தாய், தந்தை, மனைவி, சகோதரர் கள்கூட இவருக்கு ஓட்டு போடவில்லை என்பதால் இந்தத் தேர்த லில் இந்தியப் புகழ் அடைந்துவிட்டார்.
- 96 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான இடங்களை கைப்பற்றியது சுயேச்சைகள். இதனால் சில சிறிய கட்சிகள் இதனிடம் தோற்று விட்டன.
- ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 26 ஊராட்சி உறுப்பினர் இடங்கள் கிடைத்தன.
- கிராம பஞ்சாயத்து தேர்தல்களில் 169 இடங்களில் நின்ற (நடிகர்) விஜய் மக்கள் இயக்கம் 110 இடங்களைக் கைப்பற்றியது. போட்டியிட்டவர்களில் 65 சதவிகிதம் பேர் வெற்றி.
- ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 3 மாவட்ட கவுன்சிலர், 23 ஒன்றிய கவுன்சிலர்கள் வெற்றி. 23 பஞ்சாயத்துகளை கைப்பற்றியது.
- முதல்முறையாக உள்ளாட்சித் தேர்தலைச் சந்தித்த நடிகர் கமலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு எந்த இடங்களிலும் வெற்றி பெறவில்லை.