கர்ணனின் பெருமை
குருஷேத்திர போரில் கர்ணனின் தேர் மண்ணில் புதைந்து விட்டது. அதை மீட்கும் முயற்சியில் கர்ணன் ஈடுபட்டு கொண்டு இருந்த போது, அர்ஜூணன் கர்ணன் மீது தொடுத்த பாணங்கள் அவன் உடல் முழுதும் துளைத்து குருதி ஆறாக ஓடியது. கர்ணன் செய்த தர்மம் அவனை காப்பதை அறிந்த கிருஷ்ணர்
ஓர் ஏழை அந்தனர் வேடம் பூண்டு கர்ணன் செய்த தர்மங்களை தானமாக பெற்று, அர்ஜூணனுக்கு சைகை செய்ய, அர்ஜூணன் விட்ட அம்புகள் கர்ணனனை துளைத்து மரணத்தின் வாசலை அடைந்தான். அப்போது இது தான் சமயமென கர்ணனுக்கு தன் விஸ்வரூபத்தை காட்டி அருளினார்
கிருஷ்ணரின் விஸ்வரூபத்தை சாகும் தறுவாயில் தரிசித்த கர்ணன் கைகூப்பி தொழுதான். “கிருஷ்ணா! என்னை உன் கரத்தால் எங்காவது புதைக்க முடியுமா? என கர்ணன் கேட்க,
அந்த வேண்டுகோளை ஏற்ற கிருஷ்ணர் ஒரு தனி இடத்தில் கர்ணனை புதைத்தார். அந்த இடமே தற்போது கர்ண ப்ரயாக் இது பிந்தார் அலகானந்தா நதிகள் சங்கமிக்கும் இடத்தில் உள்ளது. கிருஷ்ணரால் புதைக்கப்பட்டதால் கிருஷ்ண கர்ணன் என்னும் பெயரால் கர்ணன் இங்கு பெருமையுடன் அழைக்கப் பெறுகிறான்.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
கர்ணனை நாம் அனைவரும் நடிகர் சிவாஜி கணேசன் அவர்களின் உருவத்தில் தான் உணர்ந்திருக்கிறோம். இன்று அவரின் 93வது பிறந்த நாள்…