வரலாற்றில் இன்று – 13.07.2021 வைரமுத்து
ஒவ்வொரு தமிழ் ரசிகன் மனதிலும் நீங்கா இடம் பெற்றிருக்கும் கவிஞர் வைரமுத்து 1953ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி தேனி மாவட்டம் வடுகப்பட்டியில் பிறந்தார்.
இவர் 1980ஆம் ஆண்டு வெளிவந்த நிழல்கள் திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார். இவருடைய முதல் பாடல் ‘இது ஒரு பொன் மாலைப் பொழுது’ ஆகும். பல்வேறு நாவல்கள், கவிதை தொகுப்புகள், நூல்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டின் மாநில விருது, கலைமாமணி விருது, பத்மஸ்ரீ விருது, தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
கவியரசு என்றும், கவிப்பேரரசு என்றும், காப்பியப்பேரறிஞர் என்றும், காப்பியசாம்ராட் என்றும் பல பட்டங்களை பெற்றுள்ளார் கவிஞர் வைரமுத்து.
முக்கிய நிகழ்வுகள்
- 1923ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி லாஸ் ஏஞ்சலில் ஹாலிவுட்டின் மேல் உள்ள மலையில் ஹாலிவுட் குறியீடு அதிகாரப்பூர்வமாக எழுதப்பட்டது.
- 1930ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி முதலாவது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் உருகுவேயில் ஆரம்பமாயின.
- 1921ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி குறுக்கீட்டு விளைவின் (Interference) அடிப்படையில், புகைப்படம் மூலமாக வண்ணங்களைப் பிரித்தெடுத்த காபிரியேல் லிப்மன் மறைந்தார்.