வரலாற்றில் இன்று – 30.09.2020 சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்
சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் செப்டம்பர் 30ஆம் தேதி உலகளவில் கொண்டாடப்படுகின்றது. பைபிளின் மொழிபெயர்ப்பாளரான புனித ஜெரோம், மொழிபெயர்ப்பாளரின் புனிதராகவும் போற்றப்படுகிறார்.
பன்னாட்டு மொழிபெயர்ப்பாளர்களின் கூட்டமைப்பு என்ற அமைப்பு 1953ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இந்நாள் அவ்வமைப்பினால் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளிலும் மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட்டுள்ளோருக்கு ஒருமைப்பாட்டைக் காட்டும் முகமாக இவ்வமைப்பு 1991ஆம் ஆண்டில் இந்நாளைப் பன்னாட்டு ரீதியில் கொண்டாட அழைப்பு விடுத்தது. இவ்வகையில் இன்றைய இந்த சர்வதேச மொழிபெயர்ப்பு தினம், கோலாகலமாகக் கொண்டாடத்தக்கதாகவே இருக்கிறது எனலாம்.
ஜீன் பாப்டிஸ்ட் பெர்ரின்
பிரெஞ்சு இயற்பியலாளர் ஜீன் பாப்டிஸ்ட் பெர்ரின் (துநயn டீயிவளைவந Pநசசin) 1870ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி பிறந்தார்.
பொருளிலுள்ள நீர்மங்களில் நுண்ணிய துகள்களின் ‘பிரௌனியன் இயக்கத்தைப்’ பற்றி ஆய்வு செய்ததோடு இதற்கான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் விளக்கத்தையும் மெய்ப்பித்து, பொருளின் அணுத்தன்மையை உறுதி செய்தார். இதற்காக 1926ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசுபெற்றார்.
1914-18ஆம் ஆண்டுகளில் நடந்த போரின் போது பொறியாளர் படைக்குத் தலைமை அலுவலராகப் பொறுப்பேற்றார். ஜீன் பாப்டிஸ்ட் பெர்ரின் 1942ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1941ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி பொதுநலவாய நாடுகளின் 5வது செயலாளர் கமலேஷ் சர்மா பிறந்தார்.
1985ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி அமெரிக்க இயற்பியலாளர் சார்லஸ் ரிக்டர் மறைந்தார்.
1882ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி உலகின் முதலாவது நீர்மின் திறன் ஐக்கிய அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் அமைக்கப்பட்டது.