வரலாற்றில் இன்று – 04.09.2020 தாதாபாய் நௌரோஜி

 வரலாற்றில் இன்று – 04.09.2020 தாதாபாய் நௌரோஜி

சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்திய தேசிய காங்கிரஸை நிறுவிய தாதாபாய் நௌரோஜி 1825ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி மும்பையில் பிறந்தார்.

இவர் எல்பின்ஸ்டன் கல்லூரியில் கணிதம், இயற்கைத் தத்துவ உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார். அக்கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்த முதல் இந்தியர் இவர் தான்.

இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக 3 முறை இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மும்பை சட்டப்பேரவை உறுப்பினராக (1885-1888) பணியாற்றினார்.

இவர் பிரிட்டன் பாராளுமன்றத்தில் இந்தியர்களின் துயரத்தை வெளிப்படுத்தினார். இவர் காந்தியடிகள், திலகர் போன்ற பெருந்தலைவர்களின் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்.

இந்தியாவின் ஆதார வளங்கள், நிதி ஆதாரங்களை வெள்ளையர்கள் கொள்ளை கொண்டதை புள்ளி விவரத்துடன் எடுத்துக்கூறினார். இந்தியர்களின் தனிநபர் வருமானம் வெறும் ரூ.20 தான் என்று 1870ஆம் ஆண்டு சுட்டிக்காட்டினார்.

‘பாவர்ட்டி அண்ட் அன்-பிரிட்டிஷ் ரூல் இன் இண்டியா’ என்ற தனது நூலில் பிரிட்டிஷாரின் கொடுங்கோல் ஆட்சி பற்றிய உண்மைகளை எழுதியுள்ளார். தாதாபாய் நௌரோஜி 1917ஆம் ஆண்டு மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1978ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

1958ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி அமெரிக்க வானியற்பியலாளரான ஜேக்குவிலைன் எவிட் பிறந்தார்.

1781ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி ஸ்பானிய கவர்னரான ஃபிலிப்பே டி நெவெ என்பவரால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் அமைக்கப்பட்டது.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...