வரலாற்றில் இன்று – 31.07.2020 ஜே.கே.ரௌலிங்

 வரலாற்றில் இன்று – 31.07.2020 ஜே.கே.ரௌலிங்

உலகையே புரட்டிப்போட்ட ஹாரிபாட்டர் கதையின் நாவலாசிரியர் ஜே.கே.ரௌலிங் 1965ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார்.

1990ஆம் ஆண்டில் ஒருமுறை இவர் மான்செஸ்டரிலிருந்து லண்டன் செல்ல இருந்தபோது அவரது ரயில் தாமதமாக வந்தது. அப்போது மக்கள் மிகுந்த தொடருந்தில் லண்டனை நோக்கி இவர் பயணித்துக் கொண்டிருந்த போதுதான் ஹாரிபாட்டர் கதைக்கான எண்ணம் இவருடைய மனதில் உதித்தது. அப்போது சுழன்ற இவரது கற்பனையில் பிறந்தவன்தான் மந்திரவாதிகளின் பள்ளிக்குச் செல்லும் ஹாரிபாட்டர்.

1995ஆம் ஆண்டு ‘ஹாரிபாட்டர் அன்ட் தி ஃபிலாசஃபர்ஸ் ஸ்டோன்’ என்ற தனது முதல் நாவலை எழுதி முடித்தார். அதை தொடர்ந்து,’ஹாரிபாட்டர் அன்ட் சேம்பர் ஆஃப் சீக்ரெட்ஸ்’,’ஹாரிபாட்டர் அன்ட் தி பிரிசினர் ஆஃப் அஸ்கபன்’ அடுத்தடுத்து வெளிவந்தன.

இவரது 7 படைப்புகளும் உலகம் முழுவதும் 65 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் சில்ரன் புக் விருது, 3 முறை ஸ்மார்டீஸ் பரிசு, ஒயிட்பிரெட் சில்ரன்ஸ் புக் ஆஃப் தி இயர் விருது என பல விருதுகள் குவிந்தன.

முக்கிய நிகழ்வுகள்

1874ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி தமிழ்ப் பெரும் புலவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான செய்குத்தம்பி பாவலர் நாஞ்சில் நாட்டு கோட்டாறு பகுதியில் இடலாக்குடியில் பிறந்தார்.

1805ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி தமிழக விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டார்.

1865ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி உலகின் முதலாவது குறுகிய அகல ரயில்பாதை ஆஸ்திரேலியாவில் அமைக்கப்பட்டது. 1964ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி சந்திரனின் முதல் மிக அருகிலான படங்களை ரேஞ்சர்-7 விண்கலம் பூமிக்கு அனுப்பியது.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...