இன்றைய தினப்பலன்கள் (31.07.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 இன்றைய தினப்பலன்கள் (31.07.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து சுபச்செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். சமூக பணியில் இருப்பவர்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
பரணி : சுபச்செய்திகள் கிடைக்கும்.
கிருத்திகை : ஆதரவு அதிகரிக்கும்.

ரிஷபம் :

வியாபாரத்தில் வேலையாட்களிடம் அனுசரித்து செல்லவும். உறவினர்களின் வழியில் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக செயல்பட வேண்டும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.
ரோகிணி : கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
மிருகசீரிஷம் : நிதானம் வேண்டும்.

மிதுனம் :

நண்பர்களுடன் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் உண்டாகும்.
திருவாதிரை : ஒற்றுமை அதிகரிக்கும்.
புனர்பூசம் : புத்துணர்ச்சி உண்டாகும்.

கடகம் :

உத்தியோகம் சம்பந்தமான முயற்சிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். எதிர்பாலின மக்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். வெளியிடங்களுக்கு செல்லும் போது உடைமைகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : முன்னேற்றமான நாள்.
பூசம் : புதுவிதமான அனுபவம் ஏற்படும்.
ஆயில்யம் : கவனம் வேண்டும்.

சிம்மம் :

கல்வி தொடர்பான செயல்பாடுகளில் மேன்மையான பலன்கள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கலகலப்பான செயல்பாடுகளின் மூலம் அனைவரிடத்திலும் மதிப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : மேன்மை உண்டாகும்.
பூரம் : அனுகூலமான நாள்.
உத்திரம் : மதிப்புகள் அதிகரிக்கும்.

கன்னி :

சொந்தமாக மனை வாங்குவது பற்றிய எண்ணங்கள் மேம்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும். விவசாயப் பணிகளில் புதுவிதமான வியூகங்களை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : எண்ணங்கள் மேம்படும்.
அஸ்தம் : முன்னேற்றம் ஏற்படும்.
சித்திரை : வாய்ப்புகள் உண்டாகும்.

துலாம் :

முயற்சிக்கு உண்டான எதிர்பார்த்த பலன்கள் சாதகமாக அமையும். தாயிடம் தேவையற்ற கருத்துக்கள் பகிர்வதை தவிர்ப்பது நன்மை அளிக்கும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் அனுசரித்து செல்வது உங்களின் மீதான நன்மதிப்பை அதிகப்படுத்தும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
சித்திரை : சாதகமான நாள்.
சுவாதி : கருத்துக்களை தவிர்க்கவும்.
விசாகம் : அனுசரித்து செல்லவும்.

விருச்சிகம் :

குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நல்ல வாய்ப்புகள் உண்டாகும். மனதில் நினைத்த எண்ணங்கள் நிறைவேறும். பொருளாதார ரீதியான பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நலீ ம்
விசாகம் : உதவிகள் கிடைக்கும்.
அனுஷம் : வாய்ப்புகள் உண்டாகும்.
கேட்டை : எண்ணங்கள் நிறைவேறும்.

தனுசு :

பழைய நினைவுகளால் குழப்பமான சூழல் ஏற்படும். செயல்பாடுகளில் மற்றவர்களின் விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடலாம். மற்றவர்களின் மீதான கருத்துக்களை தவிர்க்கவும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவது நன்மை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : குழப்பமான நாள்.
பூராடம் : விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடலாம்.
உத்திராடம் : திட்டமிட்டு செயல்படவும்.

மகரம் :

குடும்ப உறுப்பினர்களின் மூலம் அலைச்சலும், சிறு சிறு கருத்து வேறுபாடுகளும் தோன்றி மறையும். புதிய வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அவ்வப்போது ஏற்படும் கனவுகளால் குழப்பான சூழல்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
உத்திராடம் : அலைச்சல்கள் உண்டாகும்.
திருவோணம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
அவிட்டம் : குழப்பங்கள் ஏற்படும்.

கும்பம் :

நிர்வாகம் தொடர்பான முடிவுகளில் சிந்தித்து செயல்பட வேண்டும். எதிர்பாராத சில மாற்றங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். குருமார்களின் ஆசிகள் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : சிந்தித்து செயல்படவும்.
சதயம் : புதுவிதமான அனுபவம் ஏற்படும்.
பூரட்டாதி : ஆசிகள் கிடைக்கும்.

மீனம் :

வர்த்தகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். பணிகளில் பொறுப்புகளும், அதிகாரமும் மேலோங்கும். வெளியூர் தொடர்பான பணி வாய்ப்புகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.
உத்திரட்டாதி : தனவரவுகள் கிடைக்கும்.
ரேவதி : சேமிப்புகள் அதிகரிக்கும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...