ஈசன்-வெட்டியானுக்கு அவன் மனைவிக்கும் முத்தி கொடுத்த ஸ்தலம்.

 ஈசன்-வெட்டியானுக்கு அவன் மனைவிக்கும்  முத்தி கொடுத்த ஸ்தலம்.

உஜ்ஜயினியில் உள்ள மஹாகாலேஷ்வரருக்கு தினமும் அதிகாலை 4.00 மணிக்கு நடக்கும் பஸ்மார்த்தி அபிஷேகம். இயற்கை மரணம் அடைந்த மனித உடலை எரித்து அந்த சாம்பலால் அபிஷேகம் செய்யப்படும். இந்த அபிஷேகம் இந்தியாவில் வேறெங்கும் நடக்காது. சிவபெருமான் காலனுக்கும் காலன் ஆவார் என்பதையும், எந்த உடலின் சாம்பலால் அபிஷேகம் செய்ய படுகிறதோ அந்த உயிர்க்கு இனி பிறவியில்லை என்பதையும் இந்த அபிஷேகம் உணர்த்துகிறது. நீங்கள் உஜ்ஜைனி சென்றாலும் இதை காணமுடியாது. ஏனென்றால் 2 கிலோ மீட்டர் தூரம் அளவிற்கு கூட்டம் காணப்படும்.

வெட்டியான் ஒருவன் பிணத்துக்காகக் குழி தோண்டும்போது சிவலிங்கம் ஒன்றைக்கண்டெடுத்தான்.

அதை 🤴அரசனிடம் எடுத்துச் சென்றபோது “சுடுகாட்டில் கிடைத்ததை நீயே வைத்துக்கொள் சுடுகாட்டுச் சாம்பலை வைத்துஅபிஷேகம் செய்”
என்று ஏளனமாக 🤴அரசன் கூறிவிட்டான்.

இறை வழிபாடு என்றால் என்ன என்றுதெரியாத வெட்டியானும் அரசனது வார்த்தைகள் ஏளனமானவை
என்பதை அறியாமல்,
பிணம் எரித்தசாம்பலைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வழிபட்டான்.

ஒருநாள் திடீரெனப் பெய்த மழையினால், சுடுகாட்டில் இருந்த சாம்பல் முழுவதும் கரைந்து விட்டது.

சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய
சாம்பல் இல்லையே என வருந்திய
அவனும்விராட்டிகளை அடுக்கி தீயை
மூட்டிவிட்டு தனது மனைவியிடம் “நான் இந்த தீயில் விழுகிறேன். என்உடல் எரிந்து கிடைக்கும் சாம்பலைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்” என்று கூறினான்.

ஆனால் மனைவியோ “நீங்கள் அப்படி இறந்து விட்டால் இங்கு வரும் பிணங்கள் சீரழிந்துவிடும், நானே தீயில் குதிக்கின்றேன்” என்று கூறிக்கொண்டே தீயில் வீழ்ந்தாள்.

இருவரது பக்தியிலும் திளைத்த
பரமசிவன் பார்வதியுடன் பிரத்தியட்சமாகி மனைவியை உயிர்ப்பித்து இருவரையும்
முக்தியடைய வைத்தார்.

இதைக் கேள்விப்பட்ட அரசனும் 🤴
தங்கத்தால் ஆன சிவலிங்கத்திற்குப் பன்னீர், பஞ்சாமிர்தம் என்றும்
வாசனைத் திரவியங்களாலும் அபிஷேகம் செய்த எனக்கு காட்சிதராத இறைவன், சுடுகாட்டுச்சாம்பலையும்,
பழைய சோற்றையும் கொடுத்தவனுக்கு
மோட்சம் அளித்துள்ளாரே என்று வருந்தினாலும்…..பக்தி_என்பது ஆடம்பரத்தில் இல்லை அன்பினால் மட்டுமே

மலரக்கூடியது என்பதை உணர்ந்து கொண்டான்…..!

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...