இன்றைய தினப்பலன்கள் (16.06.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 இன்றைய தினப்பலன்கள் (16.06.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

நிர்வாகத்தில் சாதகமான சூழல் உண்டாகும். வணிகம் தொடர்பான பயணங்கள் எதிர்பார்த்த பலன்களை தரும். ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். தந்தை மற்றும் வாரிசுகளுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வெளிவட்டார தொடர்புகளால் நன்மை கிடைக்கும்.

அஸ்வினி : சாதகமான நாள்.
பரணி : வேறுபாடுகள் குறையும்.
கிருத்திகை : நன்மை கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

ரிஷபம் :

கலைஞர்களுக்கு திறமைகள் வெளிப்பட்டு கீர்த்தி உண்டாகும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். எந்தவொரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். வீண் அலைச்சல்கள் உண்டாகும்.

கிருத்திகை : கீர்த்தி உண்டாகும்.
ரோகிணி : பொறுமை வேண்டும்.
மிருகசீரிஷம் : அலைச்சல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிதுனம் :

புதிய பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலை உண்டாகும். எடுத்த முயற்சிகள் ஈடேறும். உறவுகளின் மூலம் சாதகமான பலன்கள் ஏற்படும். செய்தொழிலில் மேன்மை உண்டாகும். சபைகளில் செல்வாக்கு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.

மிருகசீரிஷம் : முயற்சிகள் ஈடேறும்.
திருவாதிரை : மேன்மை உண்டாகும்.
புனர்பூசம் : பிரச்சனைகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கடகம் :

தொழில் அலைச்சல்களால் இலாபம் அடைவீர்கள். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். பணியில் உள்ளவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் வந்தடையும். அரசு அதிகாரிகளின் மூலம் சாதகமான நிலை ஏற்படும்.

புனர்பூசம் : இன்னல்கள் குறையும்.
பூசம் : வாய்ப்புகள் ஏற்படும்.
ஆயில்யம் : சுபமான நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சிம்மம் :

உயர்கல்விக்கான முயற்சிகள் நல்ல பலன்களை தரும். வெளியூர் வேலை தொடர்பான முயற்சிகள் ஈடேறும். உடல்நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி நலம் உண்டாகும். மனதில் நினைத்த எண்ணங்களுக்கு பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை பற்றிய சுபச்செய்திகள் வந்து சேரும்.

மகம் : முயற்சிகள் ஈடேறும்.
பூரம் : நலம் உண்டாகும்.
உத்திரம் : ஆதரவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கன்னி :

இழுபறியாக இருந்துவந்த சிக்கல்களை அமைதியாக கையாண்டு முடிப்பீர்கள். இளைய சகோதரர்களிடம் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி அனுசரித்து செல்லவும். வாகனப் பயணங்களில் கவனம் தேவை. சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். உத்திரம் : அமைதி வேண்டும்.

அஸ்தம் : அனுசரித்து செல்லவும்.
சித்திரை : மாற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

துலாம் :

புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். பணியில் உள்ளவர்களுக்கு வீண் கவலைகள் தோன்றும். செயல்பாடுகளில் சிறிது கவனம் வேண்டும். போட்டி, பந்தயங்களில் சாதகமான சூழல் அமையும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு பொதுமக்களின் ஆதரவு கிடைக்கும்.

சித்திரை : புதிய நட்பு கிடைக்கும்.
சுவாதி : கவனம் வேண்டும்.
விசாகம் : ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

விருச்சிகம் :

நெருக்கமானவர்களிடம் எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். பாசன வசதி தொடர்பான சிக்கல்கள் ஏற்படலாம். வளர்ப்புப் பிராணிகளின் மூலம் மகிழ்ச்சியான சூழல் அமையும். பழக்க-வழக்கங்களில் மாற்றமான சூழல் உண்டாகும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும்.

விசாகம் : உதவிகள் கிடைக்கும்.
அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.
கேட்டை : மாற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

தனுசு :

கூட்டாளிகளிடம் விவேகத்துடன் செயல்படவும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை மேம்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வாரிசுகளை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

மூலம் : விவேகம் வேண்டும்.
பூராடம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
உத்திராடம் : வரவுகள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மகரம் :

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் காலதாமதமாக கிடைக்கும். தாயின் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். திட்டமிட்ட பயணங்களில் சில மாற்றங்கள் நேரிடலாம்.

உத்திராடம் : காலதாமதம் ஏற்படலாம்.
திருவோணம் : விழிப்புணர்வு வேண்டும்.
அவிட்டம் : மாற்றங்கள் நேரிடலாம்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

கும்பம் :

மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்பட்டு பாராட்டப்படுவீர்கள். கலை சார்ந்த அறிவுகள் மேம்படும். உறவினர்களிடம் உள்ள உறவுநிலை மேம்படும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் குறைந்து அன்பு அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் எல்லா காரியங்களிலும் ஈடுபடுவீர்கள்.

அவிட்டம் : அறிவு மேம்படும்.
சதயம் : அன்பு அதிகரிக்கும்.
பூரட்டாதி : தைரியம் பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மீனம் :

சுயதொழிலில் மேன்மையான சூழல் அமையும். பொருளாதார மேன்மைக்கான செயல்பாடுகள் எண்ணிய பலன்களை தரும். முதலாளி மற்றும் தொழிலாளிக்கு இடையே சாதகமான சூழல் அமையும். வாக்குவன்மையால் பெருமைகள் அடைவீர்கள். அடிப்படைக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான நாள்.

பூரட்டாதி : மேன்மையான நாள்.
உத்திரட்டாதி : எண்ணங்கள் ஈடேறும்.
ரேவதி : பெருமைகள் அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...