வரலாற்றில் இன்று – 15.06.2020 – உலக காற்று தினம்

 வரலாற்றில் இன்று – 15.06.2020 – உலக காற்று தினம்

உலக காற்று தினம் ஆண்டுதோறும் ஜூன் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது காற்றாற்றலைக் கொண்டாடும் தினமாகும்.

இதை ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் ஒழுங்குப்படுத்தி வருகின்றது. மேலும் காற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாளாக உலக காற்று தினம் அனுசரிக்கப்படுகிறது.

முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம்

உலகில் உள்ள அனைத்து முதியவர்களுக்கும் மரியாதை கொடுக்கவும், மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம் ஜூன் 15ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

சுமார் 4 முதல் 6 சதவீதம் முதியோர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை. இதனால் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். முதியவர்களை மரியாதையுடன் நடத்த ஐ.நா.சபை இத்தினத்தை அறிவித்துள்ளது.

அண்ணா ஹசாரே

சமூக ஆர்வலரான கிசான் பாபுராவ் ஹசாரே எனப்படும் அண்ணா ஹசாரே அவர்கள், 1937ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள பிங்கார் என்னும் இடத்தில் பிறந்தார்.

சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி மற்றும் வினோபா பாவேயின் வாழ்க்கை வரலாறுகளை படித்த பிறகு ஏழைகள் மேம்பாட்டை தனது வாழ்நாள் நோக்கமாகக் கொண்டார். இவர் பத்ம பூஷண், பத்மஸ்ரீ, மஹாவீர் விருது, சர்வதேச ஒருமைப்பாட்டு விருது, சிட் கில் நினைவு விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.

முக்கிய நிகழ்வுகள்

2013ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி தமிழ் திரைப்பட நடிகரும், இயக்குநருமான மணிவண்ணன் மறைந்தார்.

1950ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி உலகளவில் அதிக இரும்புகளை தயாரிக்கும் மித்தல் இரும்பு நிறுவனத்தின் தலைவரான இலட்சுமி மித்தல் ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்தார்.

1948ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழிசை இயக்கம் ஆகியவற்றின் அமைப்பாளருமான அண்ணாமலை செட்டியார் மறைந்தார்.

1849ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் குடியரசு தலைவர் ஜேம்ஸ் போக் (James K. Polk) மறைந்தார்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...