இன்றைய தினப்பலன்கள் (15.06.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 இன்றைய தினப்பலன்கள் (15.06.2020) –  ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

குணநலன்களில் சில மாற்றங்கள் உண்டாகும். செயல்பாடுகளில் ஏற்படும் மந்தத்தன்மையால் காலவிரயம் ஏற்படும். பிறரின் செயல்களில் தலையிடாமல் இருப்பது நன்மையை அளிக்கும். புதிய முயற்சிகள் சார்ந்த அலைச்சல்கள் மேம்படும். ஜாமீன் கையெழுத்துகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : மாற்றம் உண்டாகும்.
பரணி : காலவிரயம் ஏற்படும்.
கிருத்திகை : அலைச்சல்கள் மேம்படும்.

ரிஷபம் :

செய்தொழிலில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். தலைமை பதவியில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். உறவுகளால் அனுகூலமான சூழல் ஏற்படும். பொதுக்கூட்டப் பேச்சுக்களில் நிதானமான செயல்பாடுகளால் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
கிருத்திகை : இலாபம் உண்டாகும்.
ரோகிணி : சாதகமான நாள்.
மிருகசீரிஷம் : மேன்மை உண்டாகும்.

மிதுனம் :

தாய்மாமன் உறவுகளால் சாதகமான சூழல் உண்டாகும். மனதில் ஒருவிதமான பய உணர்வு ஏற்படலாம். எதிர்பாலின மக்களிடம் நிதானம் வேண்டும். வழக்குகளில் எதிர்பார்த்த தீர்ப்புகள் கிடைக்க காலதாமதமாகும். சந்தேக உணர்வினால் நெருக்கமானவர்களிடம் மனக்கசப்புகள் நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : சாதகமான சூழல் உண்டாகும்.
திருவாதிரை : தீர்ப்புகள் காலதாமதமாகும்.
புனர்பூசம் : மனக்கசப்புகள் நேரிடலாம்.

கடகம் :

கூட்டாளிகளுக்கிடையே அனுசரித்து செல்லவும். சுபச்செய்திகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். மனதில் புதுவிதமான உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். வாகனப் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். மனைவிவழி உறவுகளிடம் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.
பூசம் : உத்வேகம் உண்டாகும்.
ஆயில்யம் : அனுகூலமான நாள்.

சிம்மம் :

உடல் ஆரோக்கியம் மேம்படும். வாசனை திரவிய தொழிலில் எண்ணிய இலாபம் உண்டாகும். விவாதங்களில் வெற்றி கிடைக்கும். உறவினர்களிடத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். மனதில் புதுவிதமான தேடல் பிறக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : ஆரோக்கியம் மேம்படும்.
பூரம் : மதிப்புகள் உயரும்.
உத்திரம் : தேடல் பிறக்கும்.

கன்னி :

பயணம் சார்ந்த முடிவுகளில் சிந்தித்து செயல்படவும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். தாயின் உடல்நலத்தில் இருந்த இன்னல்கள் நீங்கும். செய்யும் பணியில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் அகலும். பணிபுரியும் இடங்களில் பிறருடைய பணிகளையும் சேர்த்து பார்க்க நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.
அஸ்தம் : இன்னல் நீங்கும்.
சித்திரை : எதிர்ப்புகள் அகலும்.

துலாம் :

உத்தியோகஸ்தர்கள் எடுத்த பணியை துரிதமாக செய்து முடிப்பீர்கள். செய்தொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும். புதிய முயற்சிகளால் பாராட்டும், மதிப்பும் உயரும். வாரிசுகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாகனச் சேர்க்கை

பற்றிய சிந்தனைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
சித்திரை : துரிதம் உண்டாகும்.
சுவாதி : மேன்மையான நாள்.
விசாகம் : மகிழ்ச்சி உண்டாகும்.

விருச்சிகம் :

வீட்டின் பாராமரிப்பு செலவுகள் ஏற்படலாம். தொழிலில் இருந்த நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பெரியோர்களிடம் அமைதியுடன் செயல்படவும். பயணங்களால் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். பழக்க-வழக்கங்களில் மாற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : தீர்வு கிடைக்கும்.
அனுஷம் : அமைதி வேண்டும்.
கேட்டை : மாற்றம் உண்டாகும்.

தனுசு :

இளைய சகோதரர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் நினைத்த காரியங்களில் இருந்துவந்த தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : அனுகூலமான நாள்.
பூராடம் : வாய்ப்புகள் உண்டாகும்.
உத்திராடம் : வெற்றி கிடைக்கும்.

மகரம் :

கணவன், மனைவிக்கிடையே உறவுகள் மேம்படும். சொந்தபந்தங்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். உயர் அதிகாரிகளுடன் நட்பு மலரும். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் சாதகமாகும். பேச்சுத்திறமையால் இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திராடம் : உறவுகள் மேம்படும்.
திருவோணம் : மகிழ்ச்சி உண்டாகும்.
அவிட்டம் : வாய்ப்புகள் சாதகமாகும்.

கும்பம் :

எளிதில் முடியும் என எதிர்பார்த்த காரியங்களில் சில காலதாமதம் உண்டாகும். கால்நடைகளிடம் கவனம் வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பொறுப்புகள் உயரும். எதிரிகளால் சில இன்னல்கள் உண்டாகலாம். மூத்த உடன்பிறப்புகளிடம் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அவிட்டம் : தாமதம் உண்டாகும்.
சதயம் : பொறுப்புகள் உயரும்.
பூரட்டாதி : நிதானம் வேண்டும்.

மீனம் :

பெரியோர்களின் ஆசிகளும், ஆலோசனைகளும் கிடைக்கும். சுபச்செய்திகளால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். எதிர்பார்த்த தனவரவுகள் உண்டாகும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி சுபிட்சம் ஏற்படும். பணியில் உயர் பதவிக்கான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : ஆசிகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : தனவரவுகள் உண்டாகும்.
ரேவதி : சுபிட்சமான நாள்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...