இன்றைய தினப்பலன்கள் (18.05.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 இன்றைய தினப்பலன்கள் (18.05.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

தொழில், வியாபாரம் தொடர்பாக இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். குடும்ப நபர்களிடம் அனுசரித்து செல்லவும். பயணங்களை மேற்கொள்ள எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், கூடுதல் பொறுப்புகளும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அஸ்வினி : குழப்பங்கள் நீங்கும்.
பரணி : அனுசரித்து செல்லவும்.
கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

ரிஷபம் :

கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். செய்தொழிலில் இருந்து வந்த இழுபறியான சுழல் மறைந்து சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாராத உதவிகளால் மேன்மையான நிலை ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : மதிப்பு அதிகரிக்கும்.
ரோகிணி : ஒற்றுமை மேலோங்கும்.
மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.

மிதுனம் :

புதிய பதவி மற்றும் பொறுப்புகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தொழிலில் வேலையாட்களால் எற்பட்ட இன்னல்கள் குறையும். பலவிதமான எண்ணங்களால் மனக்கவலைகள் ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மிருகசீரிஷம் : பொறுப்புகள் கிடைக்கும்.
திருவாதிரை : நெருக்கம் அதிகரிக்கும்.
புனர்பூசம் : இன்னல்கள் குறையும்.

கடகம் :

கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆதரவு கிடைக்கும். இறை சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உத்தியோகம் சம்பந்தமான புதிய முயற்சியில் காரியசித்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.
பூசம் : வாய்ப்புகள் சாதகமாகும்.
ஆயில்யம் : காரியசித்தி உண்டாகும்.

சிம்மம் :

மந்தமான செயல்பாடுகளால் காலதாமதம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செய்யும் செயல்களில் நிதானம் தேவை. கவனக்குறைவால் சிறு அவப்பெயர்கள் ஏற்படலாம். மனைவிவழி உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : காலதாமதம் உண்டாகும்.
பூரம் : நிதானம் வேண்டும்.
உத்திரம் : அனுசரித்து செல்லவும்.

கன்னி :

பலவிதமான எண்ணங்களால் ஏற்பட்ட குழப்பங்களில் இருந்து தெளிவு கிடைக்கும். குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள். எதிர்பார்த்த பணவரவு சாதகமாக அமையும். கணவன், மனைவிக்கிடையே உறவுகள் பலப்படும். காரிய அனுகூலம் உண்டாகும். மனதில் ஒருவிதமான கவலை தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திரம் : தெளிவு கிடைக்கும்.
அஸ்தம் : உறவுகள் பலப்படும்.
சித்திரை : அனுகூலம் உண்டாகும்.

துலாம் :

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். பிள்ளைகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நெருக்கிய நபர்களிடம் நிதானம் வேண்டும். பணி சம்பந்தமான முடிவுகளால் சாதகமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
சித்திரை : வாய்ப்புகள் உண்டாகும்.
சுவாதி : மனக்கசப்புகள் நீங்கும்.
விசாகம் : நிதானம் வேண்டும்.

விருச்சிகம் :

சகோதர ஒற்றுமை மேம்படும். நீர் நிலை சார்ந்த பணிகளில் இலாபம் உண்டாகும். திட்டமிட்ட பணிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பணிபுரியும் இடங்களில் பாராட்டுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : ஒற்றுமை மேம்படும்.
அனுஷம் : இலாபம் உண்டாகும்.
கேட்டை : பாராட்டுகள் கிடைக்கும்.

தனுசு :

திட்டமிட்ட பணிகள் இனிதே நடைபெறும். புதிய முயற்சிகள் சாதகமான பலனை தரும். திறமைகள் வெளிப்படும். எதிர்ப்புகள் விலகும். மனோதைரியம் அதிகரிக்கும். நண்பரிகளின் உதவியால் தொழில் முன்னேற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : திறமைகள் வெளிப்படும்.
பூராடம் : எதிர்ப்புகள் விலகும்.
உத்திராடம் : முன்னேற்றம் உண்டாகும்.

மகரம் :

உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். சாதுர்யமான செயல்களால் காரிய வெற்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மறைமுக விமர்சனங்கள் நேரிடலாம். மாணவர்கள் கல்வியில் கவனத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
உத்திராடம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
திருவோணம் : வெற்றி கிடைக்கும்.
அவிட்டம் : விமர்சனங்கள் நேரிடலாம்.

கும்பம் :

பணி நிமிர்த்தமான அலைசல்கள் அதிகரிக்கும். செய்யும் செயலில் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படவும். எதிர்பார்த்த தனவரவுகளால் பண புழக்கம் மேம்படும். வியாபாரத்தில் நண்பர்களால் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். உறவினர்களின் வருகையால் கலகலப்பான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : அலைசல்கள் அதிகரிக்கும்.
சதயம் : நிதானத்துடன் செயல்படவும்.
பூரட்டாதி : வாய்ப்புகள் ஏற்படும்.

மீனம் :

உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். மனக்குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். சக ஊழியர்களால் செய்யும் பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். பணி நிமிர்த்தமான ஆலோசனைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
பூரட்டாதி : புத்துணர்ச்சியான நாள்.
உத்திரட்டாதி : மேன்மை ஏற்படும்.
ரேவதி : ஆலோசனைகள் கிடைக்கும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...