டெட்டி பேர்

டெட்டி பேர் எனப்படும் அழகான கரடி பொம்மைகள் பற்றி பார்ப்போம்

பல குழந்தைகளின் கனவு உலகம். அவர்கள் பல வருடம் வைத்து விளையாடுகின்றனர் ஏன் என்றால் டெட்டி மன உளைச்சல் கஷ்டத்தை போக்கி ஓர் சந்தோஷ உணர்வை தருகிறது .

பல இடங்களில் குழந்தைகளுக்கு தாய் தந்தை அன்பு கிடைக்கவில்லை என்றாலும் இந்த குட்டி கரடியோடு விளையாடி அதனை அம்மாவாகவோ அப்பாவாகவோ நினைக்கின்றனர் என்று உளவியல் ஆய்வுகள் கூறுகின்றன

ஆண் பெண் இரு பாலரிலும் குட்டி குழந்தைகளுக்கு டெட்டி பிடிக்கிறது…31 சதவிகிதம் குழந்தைகள் டெட்டி மீது தீவிர பாசம் வைக்கின்றனர் என்று ஆய்வு சொல்கிறது

அமைதி, பாதுகாப்பு, நிம்மதி இவை போன்ற உளவியல் மாற்றங்களினால் காதல் மற்றும் தாய்மை அன்பு எல்லாத்துக்கும் மக்கள் டெட்டி அனுப்பி வாழ்த்து தெரிவிக்கின்றனர்….

காதலர் வேறு ஊரில் இருந்தாலும் இதனை பரிசாக தரும் போது அந்த பெண் காதலருடன் இருப்பது போல் உணர்வு தருகிறது…அறிவுக்கும் மனதுக்கும் எப்படி பார்த்தால் அந்த அமைதி மற்றும் அன்பு கிடைக்குமோ அப்படி இந்த நிறுவனங்கள் உருவாக்குகின்றனர்.

அம்மாவை விட்டு பாதி நாள் டே கேர் விடுதிகளில் தங்கும் குழந்தைகளை விட அம்மாவை விட்டு முழு நேரம் டே கேரில் இருக்கும் குழந்தைகளுக்கு டெட்டி கரடி மீது பாசம் இன்னும் இருக்கிறது என்று ஆய்வு சொல்கிறது…

குழந்தைகள் அம்மாவை பிரியும் போது இதனை அமைதிக்கும் ஆறுதலுக்கும் உபயோகிக்கின்றனர் .

இதில் முடிவாக நான்கு உளவியல் தகவல்கள் தெரிகின்றன

  1. அன்னை குழந்தை உறவு போல பாதுகாப்பு இதனை அனைவரும் உணர்கின்றனர்.
  2. தான் விரும்பப்படுகிறோம் நேசிக்க படுகிறோம் என்பதை இது காட்டுகிறது
  3. மனதுக்கு இனிய சில நாட்களுக்கான பரிசாக இதனால் காதலன் காதலிக்கு அனுப்பி வைக்கின்றனர்…காதலர் தினத்தில் பூ போன்ற அன்பை இந்த குட்டி கரடி பொம்மையும் தருகிறது
  4. பல நேரம் தொடுதல் அற்புதமான உணர்வு அதுவே ஹீலிங்..
    உடம்பு மன வலிகளுக்கு சில சோரியாசிஸ் தோல் வியாதி உள்ளவர்களை கூட தொடலாம் ஒட்டாது அது போல…வலிகளுக்கு நாம் பிடித்து விடுவது அருமையான விஷயம் டெட்டி இப்படி தான் அதனை கட்டி அணைக்க செய்து மனதுக்கு இதம் தருகிறது.

உங்கள் வாழ்க்கையில் யார் எப்போது அனுப்பி வைத்த குட்டி டெட்டி உங்கள் மனதுக்கு இனியது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!