ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு திட்டங்கள்
- பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு திட்டங்கள்: 5வது கட்டமாக புதிய அறிவிப்புகளை வெளியிட்டார், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- கடந்த 4 நாட்களில் வேளாண், சிறு குறு தொழில், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான திட்டங்கள் அறிவிப்பு
- கடந்த 4 நாட்களில் மீனவர்கள், கால்நடை வளர்ப்பாளர்கள், கனிமங்கள் துறைக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டது
- ராணுவ தளவாட உற்பத்தி, யூனியன் பிரதேச மின் வினியோக கட்டமைப்பு குறித்து நேற்று அறிவிப்பு
- விமான போக்குவரத்து, விண்வெளி, அணுசக்தி துறைகளுக்கான திட்டங்கள் நேற்று அறிவிக்கப்பட்டன
- இன்று 20 லட்சம் கோடி சுய சார்பு திட்டத்திற்கான கடைசி அறிவிப்பு
- நாடு மிக இக்கட்டான சூழலை எதிர்கொண்டுள்ளது
- சுய சார்பு பாரதம் திட்டத்தை வலுப்படுத்த திட்டங்கள் வகுக்கப்படுகின்றன
- சரக்குகளை கையாளுவதில் உள்ள சிரமங்களை களைய நடவடிக்கை
- நிலம், தொழிலாளர், பண கையிருப்பு, சட்டம் உள்ளிட்ட 4 முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தி உள்ளோம்
- பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் மூலம் ஏழைகள் நேரடியாக பயன்பெற முடியும்
- தற்போதைய சவால்கள் மேலும் வலிமை மிக்க இந்தியாவை உருவாக்கும்
- 8 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.2 ஆயிரம் செலுத்தி உள்ளோம்
- தனித்துவம் மிக்க இந்தியாவை உருவாக்க இந்த திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன
- வருங்கால வைப்பு நிதியில் இருந்து ரூ.3660 கோடி வழங்கப்பட்டுள்ளது
- 6.8 கோடி இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
- 2.20 கோடி கட்டுமான தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்களுக்கு ரூ.3950 கோடி நிதி ஒதுக்கீடு
- 2 மாதங்களுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளன
- உஜ்வாலா திட்டத்தின் கீழ் விலையில்லா சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன
- 20 கோடி மக்களுக்கு ஜன்தன் வங்கிக் கணக்கு மூலம் ரூ.10 கோடி அளவிற்கு நேரடியாக பணம் வழங்கப்பட்டுள்ளது
- தற்போதைய சவால்கள் மேலும் வலிமை மிக்க இந்தியாவை உருவாக்கும்
- 10025 கோடி ஜன்தன் கணக்குகள் மூலம் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
- ஊரடங்கு முடிவடைந்த பிறகு தொழில்துறை சந்திக்க இருக்கும் சவால்கள் குறித்த சீர்திருத்த அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன
- நிலம், தொழிலாளர், பண கையிருப்பு, சட்டம் உள்ளிட்ட 4 முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தி உள்ளோம்
- இக்கட்டான சூழலாக இருந்தாலும், இது ஒரு நல்ல வாய்ப்பு என பிரதமர் கூறி இருக்கிறார்
- 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம், கல்வி மற்றும் சுகாதாரம், வணிகம்..
- பொதுத்துறை நிறுவனங்கள், மாநில அரசுகள், எளிமையாக தொழில் துவங்குவது…
- நிறுவன சட்டத்தில் திருத்தம் உள்ளிட்ட 7 அறிவிப்புகள் இன்று வெளியாக உள்ளன
- கொரோனா பரவலை கட்டுப்படுத்த மருத்துவ உபகரணங்கள் வாங்க 15,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது
- மருத்துவம், சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பிற்காக பேரிடர் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது
- மருத்துவ பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் 300 நிறுவனங்கள் தற்போது இயங்கி வருகின்றன
- மருத்துவ பணியாளர்களுக்கு இதுவரை 51 லட்சம் பாதுகாப்பு கவச உடைகள் வழங்கப்பட்டுள்ளது
- 4113 கோடி ரூபாய் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது
- இன்றைய 7 அறிவிப்புகளில், 5 அறிவிப்புகள் பொருளாதார வளர்ச்சிக்கானது
- இதுவரை 87 லட்சம் N95 முகக் கவசங்களும், 11 கோடி ஹைட்ராக்சி குளோரோ குயின் மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளது.