இன்றைய தினப்பலன்கள் (15.05.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 இன்றைய தினப்பலன்கள் (15.05.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

பதவி உயர்விற்கான முயற்சிகள் கைகூடும். மனக்கவலைகள் நீங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். மூத்த சகோதரர்களின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொதுநலத் தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அஸ்வினி : முயற்சிகள் கைகூடும்.
பரணி : முன்னேற்றம் ஏற்படும்.
கிருத்திகை : கீர்த்தி உண்டாகும்.

ரிஷபம் :

அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எடுத்துரைக்கின்ற பேச்சுத்திறனால் புகழ் உண்டாகும். குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். கணவன், மனைவிக்கிடையே உறவுநிலை மேம்படும். ஆன்மிகம் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கிருத்திகை : அனுகூலமான நாள்.
ரோகிணி : புகழ் உண்டாகும்.
மிருகசீரிஷம் : உறவுகள் மேம்படும்.

மிதுனம் :

உடல் தோற்றப்பொலிவில் முன்னேற்றம் உண்டாகும். மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். கனவுகளை நிறைவேற்றுவதற்கான உதவிகள் கிடைக்கும். பொதுப்பணியில் இருப்பவர்களுக்கு கீர்த்தியும், செல்வாக்கும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : முன்னேற்றம் உண்டாகும்.
திருவாதிரை : உதவிகள் கிடைக்கும்.
புனர்பூசம் : செல்வாக்கு அதிகரிக்கும்.

கடகம் :

செய்யும் பணிகளில் சற்று கவனமாக செயல்படவும். பணிகளில் ஏற்பட்ட மந்தத்தன்மையால் அவச்சொல்லுக்கு ஆளாக நேரிடலாம். மனதில் ஏற்பட்ட வீண் கவலைகளை களைவீர்கள். எதிலும் நிதானத்துடன் செயல்படவும். உடனிருப்பவர்களின் பிரச்சனைகளில் ஈடுபடுவதால் அவச்சொல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : கவனம் வேண்டும்.
பூசம் : கவலைகள் உண்டாகும்.
ஆயில்யம் : நிதானத்துடன் செயல்படவும்.

சிம்மம் :

பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத தனவரவால் சேமிப்பு உயரும். விவாதங்களில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். சபைகளில் மேன்மையான சூழல் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மகம் : புதிய நட்பு கிடைக்கும்.
பூரம் : சேமிப்பு உயரும்.
உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.

கன்னி :

தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிலும் அவசரப்படாமல் பொறுமையாக காரியங்களை செய்வீர்கள். பெரியோர்களிடம் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.
அஸ்தம் : காரியசித்தி உண்டாகும்
சித்திரை : அனுசரித்து செல்லவும்.

துலாம் :

தந்தை பற்றிய கவலைகள் மேலோங்கும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். செய்தொழிலில் மேன்மையான சூழல் அமையும். பயணங்களால் தனலாபம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் சுபவிரயம் செய்வீர்கள். பிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் வரும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
சுவாதி : மேன்மையான நாள்.
விசாகம் : தனலாபம் உண்டாகும்.

விருச்சிகம் :

வீண் அலைச்சல்களால் உடல் சோர்வு உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் மேம்படும். உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். திரவிய பொருட்களின் மூலம் இலாபம் மேம்படும். எதிர்காலம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
விசாகம் : சோர்வு உண்டாகும்.
அனுஷம் : சிந்தனைகள் மேம்படும்.
கேட்டை : இலாபம் உண்டாகும்.

தனுசு :

கூட்டாளிகளின் மூலம் நன்மை உண்டாகும். உயர்கல்வி தொடர்பான உதவிகள் சாதகமாகும். செய்யும் முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். திட்டமிட்ட பயணங்களால் எதிர்பார்த்த ஆதரவு உண்டாகும். பழைய நண்பர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : நன்மை உண்டாகும்.
பூராடம் : வெற்றி கிடைக்கும்.
உத்திராடம் : சந்திப்பு உண்டாகும்.

மகரம் :

பயணங்களின் போது தேவையான ஆவணங்களை கொண்டு செல்லவும். மனதிற்கு நெருங்கியவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். பங்காளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : உடமைகளில் கவனம் வேண்டும்.
திருவோணம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
அவிட்டம் : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.

கும்பம் :

பூர்வீக சொத்துக்களால் விரயம் உண்டாகும். பொதுக்கூட்டப் பேச்சுக்களில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும். செயல்பாடுகளில் நுட்பத்திறமை வெளிப்படும். பொருளாதார மேம்பாட்டிற்கான சிந்தனைகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
அவிட்டம் : விரயம் உண்டாகும்.
சதயம் : திறமைகள் வெளிப்படும்.
பூரட்டாதி : சிந்தனைகள் அதிகரிக்கும்.

மீனம் :

உறவினர்களின் ஆதரவால் சுபச்செய்திகள் உண்டாகும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். பிறமொழி பேசும் மக்கள் சிலரால் நன்மைகள் உண்டாகும். ஜாமீன் கையெழுத்து போட்டு மற்றவர்களுக்கு கடன் வாங்கி தருவதை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மயில் நலீ ம்
பூரட்டாதி : சுபமான நாள்.
உத்திரட்டாதி : அனுபவம் உண்டாகும்.
ரேவதி : சிந்தித்து செயல்படவும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...