வரலாற்றில் இன்று – 15.05.2020 – சர்வதேச குடும்ப தினம்

 வரலாற்றில் இன்று – 15.05.2020 – சர்வதேச குடும்ப தினம்

ஐக்கிய நாடுகள் சபை 1993ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டு ஆண்டுதோறும் மே 15-ஆம் தேதி சர்வதேச குடும்ப தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

குடும்பங்களுக்கிடையே சமத்துவத்தை வளர்க்கவும், வீட்டு பொறுப்புகள், தொழில் வாய்ப்புகள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் குடும்பங்களின் பங்களிப்பை உணர்த்தவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

எந்த சூழ்நிலையிலும், எந்த வயதினிலும், யாரும் குடும்பத்தை கைவிடாமல் ஆதரவளிக்க வேண்டும் என்பதை சர்வதேச குடும்ப தினம் வலியுறுத்துகிறது.

பியரி கியூரி

மனிதகுல மேம்பாட்டுக்கான பல சிறந்த கண்டுபிடிப்புகளை கண்டறிந்த பியரி கியூரி 1859ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி பாரிஸில் பிறந்தார். இவர் 21-வது வயதில் தன் சகோதரருடன் இணைந்து அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு பியூசோ மின் குவார்ட்ஸ் மின்னோட்டமானியை ((Piezo Electric Effect) கண்டறிந்தனர்.

இவர் காந்த குணங்களைக் கண்டறிவதற்காக முறுக்குத் தராசு (Torsion Balance) ஒன்றை உருவாக்கினார். பிறகு காந்தப் பொருட்கள் வெப்பத்தால் அடையும் மாற்றம் பற்றி இவர் கண்டறிந்த விதிமுறையை கியூரி விதி எனப்படுகிறது.

தன் மனைவி மேரி கியூரியுடன் இணைந்து ரேடியம் மற்றும் பொலோனியம் தனிமங்களைப் பிரித்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டனர். இவர்கள்தான் கதிரியக்கம் (Radioactivity) என்ற சொல்லை முதலில் பயன்படுத்தினார்கள்.

கதிரியக்கத்தைக் கண்டறிந்தமைக்காக 1903ஆம் ஆண்டு ஹென்றி பெக்கெரல், மேரி கியூரியுடன் சேர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார். காந்தப் புலங்களைப் பயன்படுத்தி ஆல்பா, பீட்டா, காமா கதிர்களை கண்டறிந்தனர். கதிரியக்கத்தை அளக்கப் பயன்படும் அலகு கியூரி அலகு என்று குறிப்பிடப்பட்டது.

நோபல் பரிசுக் குடும்பத்தில் பிறந்த கதிரியக்கக் கண்டுபிடிப்பின் முன்னோடியான பியரி கியூரி 1906ஆம் ஆண்டு மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1718ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி உலகின் முதலாவது இயந்திரத் துப்பாக்கிக்கான காப்புரிமத்தை லண்டனைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜேம்ஸ் பக்கிள் பெற்றார்.

1907ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி இந்திய விடுதலைக்காக வீரமரணம் அடைந்து, இன்றும் பல இளைஞர்களுக்கு உந்து சக்தியாக திகழும் சுகதேவ் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பிறந்தார்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...