வரலாற்றில் இன்று – 14.05.2020 மிருணாள் சென்
உலகத் தரத்துக்கு இந்தியத் திரைப்படங்களை உயர்த்திய இயக்குநர் மிருணாள் சென் (Mrinal Sen) 1923ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி வங்காள மாகாணத்தில் உள்ள ஃபரீத்பூரில் பிறந்தார்.
இவரது முதல் திரைப்படமான ராத் போர் வெற்றி அடையவில்லை. பிறகு, இரண்டாவதாக வந்த நீர் ஆகாஷெர் நீச்சே என்ற படம் தான் இவருக்கு புகழைப் பெற்றுத் தந்தது. மேலும் பைஷேஷ்ரவன், புவன் ஷோம் என்ற படங்கள் உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தது.
இவரது ஏக் தின் பிரதிதின், காரிஜ், கல்கத்தா 71, அமர் புவன் ஆகிய திரைப்படங்களும் பிரபலமானவை. பல திரைப்படங்கள் இந்தியாவில் விருதுகளை வென்றதோடு கேன்ஸ், பெர்லின், வெனிஸ், மாஸ்கோ, சிகாகோ, கெய்ரோ உள்ளிட்ட அனைத்து உலகத் திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு, விருதுகளையும் வென்றன.
இவர் 2004ஆம் ஆண்டு சுயசரிதை (Always Being Born) எழுதினார். இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் 1998 முதல் 2003 வரை கௌரவ உறுப்பினராக இருந்தார். இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதாசாஹேப் பால்கே விருது, பத்ம பூஷண் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.
இந்தியத் திரையுலகின் தலைசிறந்த அடையாளமாக திகழ்ந்த மிருணாள் சென் 2018ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1984ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கை உருவாக்கிய மார்க் ஜுக்கர்பெர்க் நியூயார்க்கில் பிறந்தார்.
1796ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் அறிமுகப்படுத்தினார்.
1973ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி அமெரிக்காவின் முதல் விண்வெளி நிலையமான ஸ்கைலேப் உருவாக்கப்பட்டது.