இன்றைய தினப்பலன்கள் (14.05.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்
மேஷம் :
பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் ஏற்படும். இணையம் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். கமிஷன் அடிப்படையிலான செயல்பாடுகளில் இலாபம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அஸ்வினி : சாதகமான நாள்.
பரணி : முன்னேற்றம் ஏற்படும்.
கிருத்திகை : இலாபம் அதிகரிக்கும்.
ரிஷபம் :
தொழில் போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். கூட்டாளிகளிடம் விவேகத்துடன் நடந்து கொள்ளவும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய பொருட்களை வாங்குவதற்கான சூழல் அமையும். வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கிருத்திகை : வெற்றிகரமான நாள்.
ரோகிணி : விவேகம் வேண்டும்.
மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும்.
மிதுனம் :
செயல்பாடுகள் மற்றும் எண்ணங்களில் மாற்றங்கள் உண்டாகும். வெளிப்படையான பேச்சுக்களின் மூலம் தெளிவு பிறக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். கலைஞர்களின் திறமைகள் வெளிப்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மிருகசீரிஷம் : மாற்றங்கள் உண்டாகும்.
திருவாதிரை : தெளிவு பிறக்கும்.
புனர்பூசம் : திறமைகள் வெளிப்படும்.
கடகம் :
உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான முடிவுகளில் நிதானம் வேண்டும். எண்ணிய காரியங்களில் காலதாமதம் உண்டாகும். உடைமைகளில் சற்று கவனம் வேண்டும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூசம் : நிதானம் வேண்டும்.
ஆயில்யம் : அலைச்சல்கள் உண்டாகும்.
சிம்மம் :
தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். நிர்வாக துறையில் மாற்றங்களை செய்வீர்கள். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சுயதொழில் சம்பந்தமான புதிய முடிவுகள் சாதகமாகும். பொதுச் சேவைகளில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். பெரியோர்களின் வழிகாட்டுதல்கள் சாதகமான பலனை அளிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : ஆதரவு கிடைக்கும்.
பூரம் : முடிவுகள் சாதகமாகும்.
உத்திரம் : கீர்த்தி உண்டாகும்.
கன்னி :
சிறு தூர பயணங்களின் மூலம் மேன்மை உண்டாகும். எதிர்பாலின மக்களிடம் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பார்த்த கடன் உதவிகள் சிறு அலைச்சலுக்கு பின் கிடைக்கும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
உத்திரம் : மேன்மை உண்டாகும்.
அஸ்தம் : விழிப்புணர்வு வேண்டும்.
சித்திரை : சிந்தனைகள் அதிகரிக்கும்.
துலாம் :
கூட்டாளிகளால் அனுகூலமான சூழல் அமையும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். வாரிசுகளின் மூலம் தொழில் வகை ஆதரவுகள் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : அனுகூலமான நாள்.
சுவாதி : ஆதரவுகள் கிடைக்கும்.
விசாகம் : அறிமுகம் உண்டாகும்.
விருச்சிகம் :
வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். சக ஊழியர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். வணிகத்தில் மந்தமான சூழ்நிலை உண்டாகும். செயல்பாடுகளால் பிறரின் விமர்சனத்திற்கு ஆளாவீர்கள். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : கவனம் வேண்டும்.
அனுஷம் : மந்தமான நாள்.
கேட்டை : விமர்சனங்கள் ஏற்படலாம்.
தனுசு :
வாரிசுகளிடம் அமைதியை கடைபிடிக்கவும். கல்வி பயிலும் மாணவர்கள் சற்று நிதானத்துடன் செயல்படவும். அந்நியர்களின் உதவியால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். குறுஞ்செய்திகளால் அலைச்சல்கள் அதிகரிக்கும். அனுபவ ரீதியான நுணுக்கமான தொழில் நுட்பங்களை பயில்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் ஆரஞ்சு
மூலம் : அமைதி வேண்டும்.
பூராடம் : மகிழ்ச்சியான நாள்.
உத்திராடம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
மகரம் :
நிலுவையில் இருந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உறவுகளின் ஆதரவு கிடைக்கும். நீர் நிலைய பணியில் உள்ளவர்களுக்கு பொருள்வரவு மேம்படும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பிள்ளைகளின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : எண்ணங்கள் ஈடேறும்.
திருவோணம் : பொருள்வரவு மேம்படும்.
அவிட்டம் : சுபிட்சமான நாள்.
கும்பம் :
இளைய சகோதரர்களால் சாதகமான சூழ்நிலை உண்டாகும். வாகனங்களால் விரயச் செலவுகள் ஏற்படும். தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : சாதகமான நாள்.
சதயம் : செலவுகள் ஏற்படும்.
பூரட்டாதி : கவனம் வேண்டும்.
மீனம் :
எதிர்பாராத தனவரவால் பொருளாதாரம் மேம்படும். திருமணப் பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் உண்டாகும். பெரியோர்களின் ஆதரவுகள் கிடைக்கும். தலைமை அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். தம்பதிகளுக்கிடையே சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். மாற்றமான சூழலும், சிந்தனைகளும் மலரும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
பூரட்டாதி : பொருளாதாரம் மேம்படும்.
உத்திரட்டாதி : ஆதரவுகள் கிடைக்கும்.
ரேவதி : சிந்தனைகள் மேலோங்கும்.