வரலாற்றில் இன்று – 02.05.2020 – சத்யஜித் ராய்

 வரலாற்றில் இன்று – 02.05.2020 – சத்யஜித் ராய்

இந்திய திரையுலக மேதை சத்யஜித் ராய் 1921ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார்.

இவர் ஜவஹர்லால் நேரு, பூபதி பூஷண் ஆகியோரின் நாவல்களில் அட்டைப் படம் வரைந்ததன் மூலம் புகழ்பெற்றார். 1947ஆம் ஆண்டு சித்தானந்தா தாஸ் குப்தாவுடனும், மற்றவர்களுடனும் இணைந்து ராய் கல்கத்தா பிலிம் சொசைட்டியை உருவாக்கினார்.

பிறகு தனக்குள் காவியமாக சுழன்றுகொண்டிருந்த பதேர் பாஞ்சாலி திரைப்படத்தை 1955ஆம் ஆண்டு வெளியிட்டார். உலக அளவில் தலைசிறந்த இயக்குநராக இவரை இத்திரைப்படம் அடையாளம் காட்டியது.

அதன் பிறகு அபராஜிதோ, அபுர் சன்சார், தேவி, மஹாநகர், சாருலதா, தீன் கன்யா உள்ளிட்ட இவரது எல்லாப் படைப்புகளுமே உலக அளவில் புகழ்பெற்றன.

தன்னுடைய திரைப்படப் பணிக்காக 1992ஆம் ஆண்டு சிறப்பு ஆஸ்கார் விருது பெற்றார். இவ்விருதை பெற்ற முதல் இந்தியரும் இவரே. மேலும், 1992ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னாவை பெற்றார்.

இந்திய திரைப்படங்களின் மீது உலகின் கவனத்தை திருப்பிய இணையற்ற இயக்குநராகப் போற்றப்பட்ட சத்யஜித் ராய் 1992ஆம் ஆண்டு மறைந்தார்.

இன்று லியானார்டோ டா வின்சி நினைவு தினம்..!

உலகப் புகழ்பெற்ற மோனலிசா ஓவியத்தை வரைந்த லியானார்டோ டா வின்சி (Leonardo da Vinci) 1452ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி இத்தாலியின் ஃபிளாரன்ஸ் நகரில் பிறந்தார்.

இவர் வேதிப் புகை, கவச வாகனங்கள் உள்ளிட்ட ராணுவத் தளவாடங்களை வடிவமைத்து உருவாக்கினார். மேலும், பல இயந்திரங்களையும் வடிவமைத்துள்ளார்.

உலகப் புகழ்பெற்ற தனது ‘தி லாஸ்ட் சப்பர்’ ஓவியத்தை 1490ஆம் ஆண்டு வரையத் தொடங்கி, 1498ஆம் ஆண்டு நிறைவு செய்தார். 1503ஆம் ஆண்டு புகழ்பெற்ற மோனலிசா வண்ண ஓவியத்தைத் தீட்டத் தொடங்கி, மூன்றாண்டுகளில் அதை நிறைவு செய்தார்.

இவர் மேலும் நீர்க் கடிகாரம் ஒன்றையும் உருவாக்கியுள்ளார். விமானம், நீர் மூழ்கிக் கப்பல் தொடங்கி கருவில் குழந்தை எப்படி இருக்கும் என்பதுவரை இவரது கற்பனைகள் விரிந்திருந்தது.

உலகம் போற்றும் உயர்ந்த கலைஞரும், பன்முகத்திறன் வாய்ந்த மேதையுமான லியானார்டோ டா வின்சி 1519ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்
1952ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி உலகின் முதலாவது ஜெட் விமானம், டி ஹாவிலண்ட் கொமெட் 1, முதற்தடவையாக லண்டனுக்கும், ஜோகான்னஸ்பேர்க் நகருக்கும் இடையில் பறந்தது.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...