ஒன்றிரண்டு மேகக் கூட்டத்துக்கு இடையில் வானம் வெள்ளை நிறத்தில் ஜொலித்துக் கொண்டிருக்க, மேற்கு திசையிலிருந்து வெண் கதிரவன் தன் திருமுகத்தை மெல்ல பிரதிபலிக்கத் தொடங்கிக் கொண்டிருந்தான். இரைதேடும் பறவையினங்கள் ரீங்கார இசையோடு அங்குமிங்குமாக வானில் பறந்து கொண்டிருந்தது. காலை வேளை என்பதால், மக்கள் விழித்திரைகள் ஒவ்வொன்றாக மெல்ல விழிக்கத் தொடங்கியது. வேளையோடு எழுந்த குடும்பத்தலைவிகள் தங்களது வீட்டு வாசலை துடைத்துச் சுத்தம் செய்து, சாணத்தைத் தெளித்து, கோலமிட்டு அங்கங்கே காட்சியளித்தனர். ஏதோ ஒரு திசையில் சேவல் கூவும் […]Read More
திருச்சியின் பிள்ளையார் கோவில் தெரு. “கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்தியா ப்ரவர்த்ததே” என பக்திப் பாடல் ஒலிக்க, ஊதுபத்தி வாசனையும் சாம்பிராணி வாசனையும் காற்றில் மிதந்துவர, கற்பூரத்தை பயபக்தியுடன் சாமி படங்களுக்குக் காட்டி கொண்டிருந்தாள் தனலட்சுமி. காலை நேரப் பரபரப்புடன் ஆபீஸ் கிளம்பிக் கொண்டிருந்த வேதமூர்த்தி, “என்ன தனா… உன் பிள்ளை எழுந்தானா இல்லையா..? காலேஜ் போகலையா..?” என்றார் நக்கலுடன். “அவனை வம்புக்கிழுக்காட்டா உங்களுக்குத் தூக்கம் வராதே!.. இன்னைக்கு சனிக்கிழமை. கிரிக்கெட் கோச்சிங் போயிட்டு வந்து […]Read More
தொலைபேசியைப் பார்த்ததும் கை குறுகுறுத்தது சித்ராவிற்கு. யாருடனாவது பேசு பேசு என்றது. வழக்கமாக இருந்தால் ஷைலஜாவிற்கு போன் பண்ணியிருப்பாள், இருவரும் மணிக்கணக்கில் அறுத்திருப்பார்கள். மகாபலிபுரம் போய் வந்ததிலிருந்து இருவருமே அதிகம் பேசுவது குறைந்து போயிற்று. கலகலப்பாகப் பழகினது நின்று போயிற்று. இணை பிரியாமல் இருந்தது விலகிப் போயிற்று. கல்லூரியில் பார்த்தால்கூட ‘ஹாய்’ சொல்லிப் பிரிந்தார்கள். பேசப் பிடிக்காமல் நகர்ந்தார்கள். அவர்களது வகுப்பிலிருந்த அத்தனை பேரும் ஆச்சரியப்பட்டார்கள். என்ன விஷயம் என்பதைத் தெரிந்து கொள்கிற ஆர்வத்தில் நுழைந்து பார்க்க […]Read More
3 ஆடை “வணக்கம் மேம். நீங்க காலேஜ் புரொஃபஸர் இராணி கந்தசாமி தானே?” என்று கேட்டாள் அந்த இளம்பெண். பளீரென்ற தோற்றம். அழகான, பொருத்தமான ஆடை. இராணிக்கு அவளைக் கண்டதுமே பிடித்துப் போய்விட்டது. “வரும் ஆனா வராதுன்னு நீங்கள்ளாம் ஒரு ஜோக் சொல்வீங்களே, அந்த மாதிரி உன் கேள்விக்குப் பதில் – ஆமா ஆனா இல்லை!” என்றாள் இராணி கந்தசாமி புன்னகையுடன். அந்தப் பெண் விழித்தாள். “நான் காலேஜ் புரொபஸர்தான், ஆனா இப்போ ரிடையர் ஆகிட்டேன்” என்றாள் […]Read More
சிதம்பரம் லேசான பதட்டத்துடன், உள்ளே நுழைந்தார்! ஒன்பது மணியே ஆகியிருந்ததால் ஆஃபீசில் யாரும் வந்திருக்கவில்லை! தன் அறைக்கு வந்த சிதம்பரம், கம்ப்யூட்டரை இயக்கி, மேஜையைச் சுத்தம் செய்து, தன் வேலைகளை தொடங்கி விட்டார்! சிதம்பரம் அலுவலக ஆட்களை பெரும்பாலும் வீட்டுக்கு அழைப்பதில்லை! இங்கே முப்பது வருஷங்களாக வேலை பார்க்கிறார்! ஆரம்பம் முதலே குடும்பம் வேறு, ஆஃபீஸ் வேறு என தனித்தனியாகப் பிரித்து விட்டார்! ஆஃபீசில் நடக்கும் விழாக்களுக்கு கூட குடும்பத்தை அழைத்துப் போவதில்லை! நாலு குடும்பங்கள் ஒன்று […]Read More
-அமானுஷ்ய தொடர்- புராண, இதிகாசங்களில் நாகங்களைப் பற்றி ஆங்காங்கே சில செய்திகள் காணப்படுகின்றன. நாகங்களைப் பற்றி சில அரிய செய்திகள் நான்கு வேதங்களில் ஒன்றான அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது.அதர்வண வேதத்தில், நாகங்களினால் ஏற்படும் கெடுதல்களுக்கும், காயங்களுக்கும் தடுப்பு முறையாகப் பல அரிய மந்திர, ஔஷத(மருத்துவ) குறிப்புகள் காண கிடைக்கின்றன. இவ்வகையான மந்திரம் மற்றும் மருத்துவ முறைகளை தகுந்த நபரின் மூலம் நேரடியாக கற்றுக் கொண்ட பின்னரே செயல்படுத்திப் பார்க்க வேண்டும்.நாகத்தின் விஷமானது சேகரித்து சுத்திகரிக்கப்பட்ட பின்னர், தோல் […]Read More
வேறொரு அறையிலிருந்து சி.சி.டி.வி.காமிரா மானிட்டரில் அதைப் பார்த்துக் கொண்டிருந்த கோவிந்தன் நிலை கொள்ளாமல் தவித்தான். “போச்சு…போச்சு…அங்க ரெண்டு உசுரு போகப் போகுது” சிவாவும், சுடலையும் அருகருகே வந்ததும், வேகம் குறைந்து ஒருவரையொருவர் முறைத்துப் பார்த்தபடி நின்றனர். இருவருக்குள்ளும் இரண்டு ஆன்மாக்களும் மாறி மாறி உச்சம் பெற்றுக் கொண்டிருந்ததால், திடீரென்று ஆக்ரோஷமாய்த் தாக்கிக் கொண்டும், திடீரென தாக்குதலை நிறுத்தி விட்டு, எதிரில் நிற்கும் தன் உருவத்தை வியப்பாய்ப் பார்ப்பதுமாய் இருந்தனர் அவர்களிருவரும். ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவர் குரல்வளையை […]Read More
தனது கோபத்தை எல்லாம் ஒரேடியாக ‘ஒரே அடியாக’த் தனஞ்செழியன், நல்லதம்பி மீது காட்டிவிட்டு வீடு வந்து சேர்ந்தார் சதாசிவம். கஸ்தூரியும், மூன்று பிள்ளைகளும் பாயில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். தனது கோபத்தினால் இரண்டு பேரை கொலை செய்து விட்டோமே என்ற உணர்ச்சி சோகம் சதாசிவம் மனதின் ஒரு ஓரத்தில் இருந்தாலும், தனது மனைவியைத் தவறாக நினைத்து விட்டோமே? என்ற குற்ற உணர்ச்சி உறங்கிக் கொண்டிருந்த கஸ்தூரியின் முகத்தைப் பார்த்துவுடன் விழிகளில் இரண்டிலும் தாரை தாரையாகக் கண்ணீர் பெருக்கெடுத்து […]Read More
“சந்தோஷமா இருக்க போல” என்ற வார்த்தை முகேஷின் மனதை நெருஞ்சி முள்ளாக நெருடியது. யாராயிருக்கும் என மனதைத் துளைத்தது கேள்விகள்.. தற்போது எல்லாம் தன்னை யாரோ தொடர்வது துரத்துவது போல் தோன்றுகிறதே! நிஜமாக இருக்குமா அல்லது மனப்பிரமையா? சுதாவிடம் எதையும் காட்டி கொள்ளாமல் இயல்பாக இருக்க முயன்றாலும் முகத்தில் கவலை ரேகைகள் ஓடியது. சுதா..ஆர்வமாக, “ஏங்க எனக்கொரு ஆசை..கல்யாணத்துக்கு முன்பே இருந்தது தான்…உங்ககிட்ட சொன்னா என்ன நினைப்பீங்களோன்னு…” என்றாள் தயங்கியவாறு. “நீ இதுவரையில் எதுவுமே ஆசைப்பட்டு கேட்டதில்லை […]Read More
30. விமானப்படிகளில் விபரீத செய்தி “தகையோன்-னா தகுதி உடையவன். தகுதி உடையவர்களால மட்டுமே ஏற முடிஞ்ச மலை..! இப்ப அந்த மலையோட பெயர் என்ன தெரியுமா..?” –குகன்மணி கேட்க, மயூரி ஆவலுடன் அவன் முகத்தைப் பார்த்தாள். மலேசியா ஏர்லைன்ஸ்ஸில் பணிபுரிவதால், மலேசியாவின் முக்கிய இடங்களைப் பற்றி அறிந்திருந்தாளே தவிர அதன் இயற்கை மர்மங்களைப் பற்றி இதுவரை ஒன்றும் அறிந்திருக்கவில்லை. “இப்ப அந்த மலைக்கு குனுங் தகான்-னு பெயர். குனுங்-னா மலை. மலேசியாவோட உயரமான மலை. மலை முழுக்க அடர்ந்த […]Read More
- புதுக்கோட்டையைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது..!
- ஸ்டார்லைனர் விண்கலம், பூமிக்குத் திரும்பியது..!
- பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தள, ஆடம்பரத் தேர்பவனி திருவிழா..!
- தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68 வது பொதுக்குழு கூட்டம் இன்றுகூடுகிறது..!
- வரலாற்றில் இன்று (08.09.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( செப்டம்பர் 08 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- “ஞான குருவே” – உதயம் ராம்
- பிள்ளையாரும் பிறை நிலாவும்!
- விநாயகர் பாடல் | பிள்ளையார் சுழி போட்டு | கவிஞர் முனைவர் ச.பொன்மணி |
- ‘கோட்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் வேட்டை..!