ஹைலைட்ஸ்
கேரள மாநில சாதனைகளை விளக்கும் ‘கேரளீயம் 2023 ! | தனுஜா ஜெயராமன்
கேரள அரசு நடத்தும், கேரளீயம் 2023 நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் இன்று தொடங்கியது. முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைத்த விழாவில் கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவர்களின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் இதுவரை படைத்த சாதனைகளை விளக்கும் வகையில், ‘கேரளீயம் 2023’ என்ற பெயரில் ஒரு வார காலம் விழாவை கேரள அரசு நடத்தியுள்ளது. திருவனந்தபுரத்தில் துவங்கிய ” கேரளீயம்” விழாவின் நிகழ்வில் சில அழகிய காட்சிகள் […]
மாலத்தீவு நிபந்தனையால் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் அதிர்ச்சி..!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்த மாலத்தீவு கடற்படை, மீனவர்களின் படகை விடுவிக்க ரூ.2 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என நிபந்தனை விதித்ததால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் தருவகைகுளத்தை சேர்ந்த மைக்கேல் பாக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் 12 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். கடந்த 23 ஆம் தேதி மாலத்தீவு அருகே நடுக்கடலில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத […]
வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு ! | தனுஜா ஜெயராமன்
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் எண்ணெய் நிறுவனங்கள் (OMCs) இந்தியாவில் விற்கப்படும் 19 கிலோ வர்த்தக LPG சிலிண்டர்களின் விலையை சுமார் 100 ரூபாய் வரை உயர்த்தியுள்ளன. இந்த உலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் வணிகத்திற்காக பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை இரண்டு முறை உயர்த்தப்பட்டு உள்ளது. ஆனால் வீட்டில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ சிலிண்டர் விலை உயரவில்லை. நவம்பர் 1 ஆம் தேதி முதல் […]
யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் ! | தனுஜா ஜெயராமன்
யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2-வது முறையாக மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வாசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப் பட்டுள்ளதாகவும், அவரால் வாகனம் ஓட்ட முடியாது எனவும் கூறினார். 40 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், […]
இலங்கையை தொடர்ந்து மற்றொரு ஆசிய நாடு இந்தியர்களுக்கு விசா வேண்டியதில்லை என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது..!
இந்தியர்கள் இப்போது 30 நாட்களுக்கு விசா இல்லாமல் தாய்லாந்திற்குச் செல்ல முடியும், இந்த சேவை அடுத்த நவம்பர் 2023 முதல் மே 2024 வரை நீடிக்கும். சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக செப்டம்பரில், சீன சுற்றுலா பயணிகளுக்கான விசா தேவையை தாய்லாந்து ரத்து செய்தது. சீன சுற்றுலா பயணிகள் அதிக அளவில் தாய்லாந்து செல்கின்றனர். தற்போது தாய்லாந்தில் இந்தியர்களுக்கு விசா ஆன் அரைவல் வசதி உள்ளது. அரசாங்க புள்ளிவிபரங்களின்படி, ஜனவரி முதல் அக்டோபர் […]
காற்று மாசுபாடு அதிகரிப்பதால் டெல்லியில் டீசல் வாகனங்களுக்கு தடை..!
தலைநகர் டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசுபாட்டை தவிர்க்க, காற்று தர மேலாண்மை ஆணையம் பிஎஸ் III (BS III) மற்றும் பிஎஸ் IV (BS IV) வகை டீசல் பேருந்துகளை நாளை முதல் டெல்லி மாநகரில் இயக்க தடை விதித்துள்ளது. பிஎஸ் VI (BS VI) வகை சிஎன்ஜி (CNG இயற்கை எரிவாயு), மின்சாரம், மற்றும் டீசல் பேருந்துகள் மட்டும் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும். இந்த விதிமுறையின் மூலம் 60 […]
வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு விலை உயர்வு..!
வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.101.50 உயர்ந்துள்ளதால், வணிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. இதில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை தினந்தோறும் என்ற அடிப்படையிலும், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை மாதத்துக்கு 2 முறை என்ற அடிப்படையிலும் நிர்ணயிக்கப்படுகிறது. உக்ரைன் […]
அதிக சாலை விபத்துகள் நிகழ்ந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம்..!
நாட்டிலேயே அதிக சாலை விபத்துகள் நிகழ்ந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக, 2022-ம் ஆண்டு சாலை விபத்துகள் குறித்த அறிக்கையில் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. ‘இந்தியாவில் சாலை விபத்துகள்-2022’ என்ற ஆண்டறிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் துறைகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகள் மற்றும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, 2022-ம் ஆண்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 4,61,312 […]
சந்திரபாபு நாயுடுவுக்கு 4 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி ஐகோர்ட் உத்தரவு!
ஊழல் வழக்கில் சிக்கி தற்போது சிறையில் உள்ள ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஆந்திர முதல்வராக இருந்தபோது, திறன் மேம்பாட்டு நிதியில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதில், தனியார் நிறுவனங்களை அனுமதிப்பதற்காக ரூ.371 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதாக 2021ல் ஊழல் தடுப்பு வாரியம் சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக சந்திரபாபு […]
வரலாற்றில் இன்று (31.10.2023)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]