“டேய் நரம்பா!” கனத்த குரலில் தம்பியை அழைத்தான் டைரக்டர் ஐங்கரன். “என்னை அப்படி கூப்பிடாதேன்னு எத்னி தடவை சொல்றது?… சோடாப்புட்டி சோடாப்புட்டி… தமிழின் டாப்டென் நடிகர்களில் ஒருவன்நான். ‘தி கிரேட் லிங்கா’ ன்னு கூப்பிடு!” “சரி விட்ரா லிங்கா. நீயும் நானும் சேர்ந்து தமிழ் சினிமாவை எவ்வளவு கெடுத்திருக்கம்… இன்னும் எவ்வளவு கெடுக்கப் போரோம்னு நினைச்சா ரொம்ப பெருமையா இருக்குடா… “ஆமா அண்ணன்டா.” “என் அடுத்தப்படமான ‘நண்பனின் காதலி என் மனைவி’ க்கு நீதான் ஹீரோ. படத்துக்கு […]Read More
வரவேற்பறையில் அஜய்டிவியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஹரிஹரசுதன் தன் உதவியாளர் இருவருடன் அமர்ந்திருந்தார். உள்ளிருந்து “ஏய்! ஓய்! நாங்க தமிழன்டா… டாய்! டூய்! ஹௌஹேய்! ஆஹா! ஹிர் ஹிர்! நர நர! கிழிச்சிருவேன் தைச்சிருவேன்!” என உச்சஸ்தாயின் பல மாடுலேஷன்களில் ஒரு கீச்சுக்குரல் கத்திக் கொண்டிருந்தது. சப்த நாடியும் ஒடுங்கி போனார் ஹரிஹரசுதன். உள்ளிருந்து ஒரு சிறுவன் மூன்று டம்ளர்களில் நீராகாரம் கொண்டு வந்து வைத்தான். “பயப்படாதீங்க… உள்ள எங்க தலைவர் கீமான் பொதுக்கூட்டங்கள்ல பேச பயிற்சி எடுத்துக் […]Read More
தோழிகள் “எங்க நட்பை சாவுல கூட யாராலயும் பிரிக்க முடியாதுன்னு சொல்லாம சொல்லிட்டா எங்க அபி.” கிளம்பும் போது வினிதா ஆஸ்பத்திரி உயர படுக்கையிலிருந்து சொன்னது இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அரசு பஸ் இரைச்சலாக இருந்தது. கூட்டம் பிதுங்கியது. லாக்டவுன் இடையில் இரண்டுநாள் தளர்த்தி போக்குவரத்தை திறந்துவிட்டதால் சொந்த ஊருக்குச் செல்ல மக்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தை நிறைத்திருந்தார்கள். நிரந்தர வருமானமில்லாத அடித்தட்டு மக்களும் பேச்சுலர்களும்தான் அதிகம் இருந்தார்கள். அபிராமிக்கு ஆம்னி பஸ் கிடைக்கவில்லை. கூட்டத்தில் நுழைந்து […]Read More
(கண்)காட்சிப் பிழை! சாய்ரேணு 1.1 ஒரு முன்னுரை “ஹலோ, போலீஸ் கமிஷனர் பேசறேன். யாரு டிஎஸ்பியா பேசறது?” ‘டிஸ்பி மொபைல் ஃபோனில் டிஎஸ்பி தான் பேசுவார், எஸ்பிபியா பாடுவார்?” என்று மனதிற்குள் அலுத்துக் கொண்ட டிஎஸ்பி “எஸ் சார்” என்றார் பவ்யமாக. “ஒரு வாரத்திற்கு முன்னாடி நுங்கம்பாகத்திலே பெரிய திருட்டு நடந்ததில்லையா? அந்தத் திருடங்க இன்றைக்கு மாலை கண்காட்சி நடக்கற இடத்திற்கு வராங்களாம்! இன்ஃபர்மேஷன் கிடைச்சிருக்கு.” “அடடா! உங்களுக்கு யாரோ தப்பா இன்ஃபர்மேஷன் கொடுத்திருக்காங்க சார். அது […]Read More
காலை பத்து மணி. வாசலில் ஹாரன் சப்தம், காதை கிழித்தது. சுரேஷ், வீட்டினுள் இருந்து எட்டிப் பார்த்தான். ஹரி, பைக்கில் இருந்தவாறே கேட்டான், “என்னடா இன்னும் ரெடியாகலையா?” “இதோ ரெண்டே நிமிஷம்னா, வந்துடுறேன்!” சுரேஷ், பதில் சொல்லிக்கொண்டே வெளியே வந்து, வீட்டைப் பூட்டினான். சுரேஷ் வந்து பைக்கில் ஏறியதும், ஹரி ஆக்ஸிலேட்டரைத் முறுக்க, அந்தச் சின்ன கிராமத்தின் சந்துப் பொந்துகளில் எல்லாம் வண்டி சீறிப்பாய ஆரம்பித்தது. ஹரி, அந்த கிராமத்திற்கு அருகிலேயே, சில வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட […]Read More
பெரும் மழை விடாமல் பெய்து கொண்டே இருந்தது. “பேஞ்சா இப்பிடித்த பேஞ்சிட்டே இரிக்கும்.. இல்லேனே கெடந்து வெய்யில் கொளுத்தும்….” வானத்தை அண்ணாந்து பார்த்தபடி சலித்துக் கொண்டார் தள்ளு வண்டி காய்கறி வியாபாரியான முத்து ராவுத்தர். இன்னைக்கும் வியாபாரம் செய்ய முடியாதபடிக்கு காலையிலேயே வானம் இருட்டிக் கொண்டிருந்தது. கல்யாணமென்பது சந்தை வியாபாரமாகிவிட்டது! ஒரு பெண் என்றாலே முழி பிதுங்கும் இந்தக் காலத்தில் முத்து ராவுத்தருக்கு மூன்று பெண்கள். முதல் பெண்ணை எப்பாடுபட்டாவது தாட்டியாகணும் என்று தெரிந்தவர்கள் மூலம் நிறைய […]Read More
ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்ட கைதிக்கு உடனேயே விடுதலை கிடைத்து வெளிவிடப்பட்டடால் எப்படியிருக்குமோ அப்படியான மகிழ்ச்சியில் இப்போது தத்தளித்தனர் ராகவனும் லட்சுமியும். நீண்ட நாளைக்குப் பிறகு மனம்விட்டுச் சிரித்தார் ராகவன். “தீபா…?! தீபா… ?!” இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கமா எல்லாம் எடுத்து வச்சாச்சா நேரமாயிட்டே இருக்கு அப்புறம் கடைசி நிமிஷத்துல இத மறந்துட்டேன் அதை மறந்துட்டேன் சொல்லாத சரியா…? அலைபேசியில் ஓடிக் கொண்டிருந்த திரைப்படத்தை நிறுத்திவிட்டு, எல்லாம் ரெடிங்க வண்டி வந்தா கிளம்ப வேண்டியது தான். எட்டு […]Read More
கடிதம் சிரித்தது. கடிதத்தைக் கையில் பிடித்திருந்த ராகவன் சிலையாய்ச் சமைந்து நின்றார். ‘நர்மதாவா..? என் பெண் நர்மதாவா..?’ கேள்விகளும் குழப்பங்களும் அவரைச் சுற்றி அலையடிக்க, நெடுமரமாய் நின்றார். “என்னாச்சுங்க..?” என்றபடி நெருங்கி வந்தாள் லட்சுமி. “உன் பொண்ணு நம்ம தலைல கல்லப் போட்ருவா போலருக்கு லட்சுமி…” குழறி வந்தன வார்த்தைகள். “என்னது..? என்ன சொல்றீங்க..?” “நர்மதா யாரையோ காதலிக்கறா போலருக்கு..” “என்னது..? நம்ம நர்மதாவா..? சான்ஸே இல்லைங்க…” “கைல லெட்டரை வெச்சுக்கிட்டு பொய்யாடி சொல்றேன்..? படிக்கறேன், கேளு. […]Read More
மறக்குமா உந்தன் முகம் ஆலமரத்து கிளையில் கட்டியிருந்த கோயில் மணி காற்றில் அசைந்து இனிய ஓசையை எழுப்பியது புதுக்கோட்டை யிலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் இருந்தது பெருங்கலூர் என்றொரு கிராமம். அழகான அக்ரஹாரம் நேரே மங்களாம்பிகை குடி கொண்டிருக்கும் கோவில், சச்சதுரமாய் கோவிலை சுற்றி சின்ன தெருக்கள். கோவிலுக்கு பின்னாடி அழகிய பெரிய குளம். குளத்தங்கரையில் ஆலமரம் அதன் கீழ் பிள்ளையார் கோவில் அதன் மணி ஒலிக்கவே அகிலன் பழைய நினைவுகளில் மூழ்கினான் அவன் 6 ஆம் […]Read More
அவன் சொன்ன கீதை…! ஜே.செல்லம் ஜெரினா நிம்மதியுடன் நடக்க ஆரம்பித்தேன். அருகில் தேனம்மை கையை கோர்த்துக் கொண்டு, அழத்தயாரான விழிகளைச் சிமிட்டிக் கொண்டு, புன்னகையை வலுக்கட்டாயமாக இழுத்து வைத்தபடியே நடந்து வந்தாள். வரும் பொழுது இருந்ததை விட மனம் லேசாகியிருந்தது எனக்கு. என்னுடைய பயண லக்கேஜ் முன்பாகவே கோனார் வண்டியிலேறி போய்விட்டது. பெரிதாக ஏதுமில்லை. ஒரே ஒரு சூட்கேஸ்தான். முதுகில் பின்புறம் தொங்கும் பை அவ்வளவே. அருகில் தேனம்மை நடந்து வந்து கொண்டிருந்தாள். லீவு முடிந்து போகையில் […]Read More
- உலக மாற்றுத்திறனாளிகள் நாளின்று!
- உலகின் முதல் இதயமாற்று அறுவைசிகிச்சை
- புலிட்சர் விருது பெற்ற முதல் ஆப்பிரிக்க – அமெரிக்க பெண் கவிஞர் குவெண்ட்லின்
- மத்திய அமைச்சர்களுடன் ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ படத்தை பார்த்த பிரதமர் நரேந்திர மோடி..!
- ஜூனியர் ஆசிய கோப்பை – அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி!
- ‘சூது கவ்வும்’ படத்தின் 2ம் பாகத்தின் டிரைலர் வெளியானது..!
- தமிழ்நாடு மீனவர்கள் 20 பேர் விடுதலை – மூவருக்கு தண்டனை..!
- சென்னையில் தவெக தலைவர் விஜய் நிவாரண உதவி..!
- ரூ.2,000 கோடி நிதியை விடுவிக்க ஒன்றிய அரசிடம் முதலமைச்சர் கோரிக்கை..!
- ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் அறிவிப்பு..!