வரலாற்றில் இன்று – 29.09.2020 உலக இதய தினம்

இதயத்தைப் பாதுகாக்கவும், இதயநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் செப்டம்பர் 29ஆம் தேதி உலக இதய தினமாக அனுசரிக்கப்படுகிறது. உலகில் ஏற்படும் உயிரிழப்புகளில், இதய நோயால் ஏற்படும் இறப்புகள் தான் அதிகம் என்று உலக சுகாதார நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது. ஆண்டுதோறும் 1…

வரலாற்றில் இன்று – 25.09.2020 உடுமலை நாராயணகவி

பழம்பெரும் திரைப்பட பாடல் ஆசிரியரும், தனது எழுச்சிமிக்க பாடல்களால் மக்களிடம் தேசிய உணர்வை ஊட்டியவருமான உடுமலை நாராயணகவி 1899ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை அடுத்த பூவிளைவாடி என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் புரவியாட்டம், சிக்குமேளம், தப்பட்டம்,…

வரலாற்றில் இன்று – 24.09.2020 பிகாஜி ருஸ்தம் காமா

இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனையும், பெண் சுதந்திரம் மற்றும் வாக்குரிமைக்காக குரல் கொடுத்தவருமான பிகாஜி ருஸ்தம் காமா 1861ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி மும்பையில்; பிறந்தார். 1907ஆம் ஆண்டு ஜெர்மனியில் ஸ்டட்கார்ட் என்ற இடத்தில் நடைபெற்ற சர்வதேச சோசலிஸ்ட் மாநாட்டில்…

வரலாற்றில் இன்று – 22.09.2020 புற்றுநோய் ரோஜா தினம்

புற்றுநோய் ரோஜா தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வெளிநாட்டை சேர்ந்த 12 வயது மெலிண்டா ரோஸ் என்ற பெண் குழந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவர் தன்னை போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரோஜா பூக்களை கொடுத்து அவர்களுக்கு மனஉறுதியை…

வரலாற்றில் இன்று – 19.09.2020 சுனிதா வில்லியம்ஸ்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 1965ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி பிறந்தார். 1987ஆம் ஆண்டு அமெரிக்க கடற்படையில் இளநிலை அதிகாரியாக பணியில் சேர்ந்தார். இவர் 2 ஆண்டுகளில் கடற்படை விமானியானார். 2006ஆம் ஆண்டு டிசம்பர்…

வரலாற்றில் இன்று – 18.09.2020 உலக மூங்கில் தினம்

உலக மூங்கில் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 18ஆம் தேதி உலகளவில் கொண்டாடப்படுகிறது. மூங்கில் பச்சைத் தங்கம் என்றும், ஏழைகளின் மரம் என்றும், வனவாசிகளின் வாழ்வாதாரம் என்றும் அழைக்கப்படுகின்றது. மற்ற மரங்களைக் காட்டிலும் மூங்கில் மரம் அதிகளவு கரியமில வாயுவை (கார்பன்…

வரலாற்றில் இன்று – 17.09.2020 ஈ.வெ.இராமசாமி

பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் ஈ.வெ.ராமசாமி அவர்கள், 1879ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவர் காந்தியடிகளின் கொள்கைகளை பின்பற்றியது மட்டுமல்லாமல் பிறருக்கும் எடுத்துக்கூறினார். வெளிநாட்டு துணிகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல் போராட்டங்களையும் நடத்தினார்.…

வரலாற்றில் இன்று – 14.09.2020 சர்வதேச கலாச்சார ஒற்றுமை தினம்

உலகம் முழுவதும் செப்டம்பர் 14ஆம் தேதி அனைத்து நாடுகள் கலாச்சார ஒற்றுமை தினம் (அ) சர்வதேச கலாச்சார ஒற்றுமை தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு நாட்டினரும், பல்வேறு மொழி கலாச்சாரப் பண்புகளை கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். நமது பாரத…

வரலாற்றில் இன்று – 11.09.2020 வினோபா பாவே

சுதந்திரப் போராட்ட வீரரும், பூமிதான இயக்கத் தந்தையுமான ஆச்சார்ய வினோபா பாவே 1895ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலத்தில் பிறந்தார். இவர் ‘மகாராஷ்டிர தர்மா’ என்ற மாத இதழை 1923ஆம் ஆண்டு தொடங்கினார். கதர் ஆடை, கிராமத் தொழில்கள்,…

வரலாற்றில் இன்று – 10.09.2020 உலக தற்கொலை தடுப்பு தினம்

உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் செப்டம்பர் 10ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. ` தற்கொலையை தடுப்பதற்காக சர்வதேச அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் உலக சுகாதார அமைப்பு ஆகியன இணைந்து 2003ஆம் ஆண்டில் இந்த தினத்தை பிரகடனம் செய்தது.…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!