வரலாற்றில் இன்று – 04.08.2021 பாரக் ஒபாமா

 வரலாற்றில் இன்று – 04.08.2021 பாரக் ஒபாமா

அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா 1961ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி அமெரிக்காவிலுள்ள ஹவாயில் பிறந்தார்.

இவர் 2008ஆம் ஆண்டு அரசுத்தலைவர் தேர்தலில் மக்களாட்சி கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நவம்பர் 6, 2012ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் மீண்டும் அதிபர் ஆனார்.

அதிபராவதற்கு முன் இவர் அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் (செனட்) இலினொய் மாநிலத்தின் சார்பில் இளைய உறுப்பினராகப் பணியாற்றினார்.

இவர் 2009ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். அமெரிக்க வரலாற்றில் ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தைச் சேர்ந்த முதலாவது குடியரசுத் தலைவர் என்ற பெருமைக்குரியவர்.

முக்கிய நிகழ்வுகள்

1929ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி தமிழக மிருதங்க கலைஞர் வேலூர் ஜி.ராமபத்ரன் பிறந்தார்.

1935ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி தமிழக எழுத்தாளர் நா.தர்மராஜன் பிறந்தார்.

2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி நாசாவின் பீனிக்ஸ் (Phoenix) விண்கலம் செவ்வாய்க்கோளை நோக்கி ஏவப்பட்டது.

2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி உலகளவில் மொழியியல் துறையில் புகழ்பெற்ற தமிழறிஞர் ச.அகத்தியலிங்கம் மறைந்தார்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...