எஃப்.எம். வானொலி ஒலித்த நாள் (F.M. Radio Transmission Day) இப்போது சகலர் கையிலும் உள்ள செல்போனில் பாடல்கள், நகைச்சுவைத் துணுக்குகள், வானிலை அறிவிப்புகள், திரைநட்சத்திரங்களின் நேர் காணல்கள் என்று பல நிகழ்ச்சிகளை பண்பலை வானொலி மூலம் மார்னிங் தொடங்கி மிட் நைட் வரை கேட்பது வாடிக்கையாகி விட்டது. ஆனால், போன ஜெனரேஷன் – ஐ மீன் 25 வருஷத்துக்கு முந்திய ரேடியோ ரசிகர்களுக்கு இந்த ரசிப்பு சுகம் கிடைக்கலையாக்கும். அதிலும் அப்போதெல்லாம் இவ்வளவு வானொலி நிலையங்களும் கிடையாது. ஆல் இண்டிய வானொலி, இலங்கை, சிங்கப்பூர், பி.பி.சி., சீனத் தமிழ் வானொலிகளை இரைச்சலையும் பொருட்படுத்தாது காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டு கேட்டு ரசிப்பார்கள் அந்தக் கால வானொலி நேயர்கள். இத்தனைக்கும் ஏ.எம். அலைவரிசை, ஷார்ட்வேவ் (குறுகிய அலை) அலைவரிசை என இருவித ஒலி பரப்புகள் இருந்தாலும் இரண்டும் இரைச்சல் கலந்தே ஒலித்தன.அதாவது கல்லையும் அரிசியையும் கலந்து கடித்ததைப் போல இருந்தது அன்றைய ரசிகர்களின் நிலை. இதையடுத்துவானொலியின் இரைச்சலைப் பெரிய அளவு குறைக் கும் நோக்கில் எஃப்.எம். ஒலிபரப்பு அறிமுகமானது.அதனைக் கண்டுபிடித்தவர் எட்வின் ஆர்ம்ஸ்ட்ராங் (1890-1954). அமெரிக்காவில் பிறந் தவர். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்து அதிலேயே பேராசிரியராகவும் பணிபுரிந்தவர்.பின்னாடி 1933-ல் அவர் எஃப்.எம். ரேடியோவுக்கான காப் புரிமையைப் பெற்றார். 1935-ல் அதனை நியூஜெர்ஸி மாநிலத்தில் பொதுமக்களுக்காக ஒலிபரப்பிய நாள் இன்று. எஃப்.எம். அலைவரிசையைப் பயன்படுத்திப் பலனடைந்த பல தனியார் நிறுவனங்கள், எட்வின் ஆர்ம்ஸ்ட்ராங்குக்கான கண்டுபிடிப்புக் கட்டணத்தைத் தராமல், அவரை அலைக்கழித்தன. நீதிமன்ற வழக்குகளால் அவர் நிம்மதியிழந்தார். ஒருநாள் வீட்டின் மாடியிலிருந்து குதித்து அவர் தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணத்துக்குப் பிறகு, அவருக்குச் சாதகமாக வழக்குகள் முடிந்தன.நீதிமன்றங் களுக்கு ரேடியோ தொழில்நுட்பங்கள் புரியவில்லை எனக் காரணம் சொல்லப்பட்டது. ஆனாலும் வாழ்க்கையில் வலிகளை அனுபவித்த எட்வின் ஆர்ம்ஸ்ட்ராங், நமக்கு விட்டுச் சென்ற சொத்துதான் பண்பலை வானொலி என்றால் அது மிகையில்லை.
பேரரசர் அலெக்சாந்தர், மக்கெடோனிய மன்னர் காலமான தினம் அலெக்சாந்தர் சுமார் 13 ஆண்டுகள் ஆட்சி செய்தார், அதற்குள் கிரீஸ் முதல் இந்தியா வரை பரந்த ஒரு பேரரசை உருவாக்கினார். அவரது படையெடுப்புகள் ஹெலனிஸ்டிக் கலாச்சாரத்தின் பரவலுக்கு வழிவகுத்தன, இது கலை, அறிவியல், தத்துவம் மற்றும் மொழியில் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் உலகின் மிகச்சிறந்த இராணுவத் தலைவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். அலெக்சாண்டரின் வெற்றிகள், அவரது ஆளுமை மீதான கவர்ச்சி போன்றவை காரணமாக பண்டைய கிரேக்கர்கள் அவரை ஒரு சாதாரண மனிதராக அல்லாமல் ஒரு கடவுளாகக் கருதினர். தான் கடவுள் என்று அலெக்சாண்டரும் நம்பத்தொடங்கினார். பாரசீகத்தை கைப்பற்றிய பின்னர், அவரது ராணுவம் கிழக்கு நோக்கி நகர்ந்து இந்தியாவை அடைந்தது. இதற்குப் பிறகு அலெக்சாண்டர் மாசிடோனியாவுக்குத் திரும்பத் தொடங்கினார். ஆனால் அவர் தாயகம் திரும்பும் வாய்ப்பு அவருக்கு இருக்கவில்லை. கிமு 323 இல், தனது 32 வது வயதில், பாபிலோன் (இன்றைய இராக்) பகுதியை அவர் அடைந்தபோது, ஒரு மர்மமான நோய் அவரது திடீர் மரணத்திற்கு காரணமாக அமைந்தது. சில வரலாற்றாசிரியர்கள் அவரது மரணத்திற்கு காரணம் அவரது காயங்களில் ஏற்பட்ட தொற்று என்று கூறும் அதே நேரம் மலேரியா காரணமாக அவர் இறந்ததாக வேறு சிலர் நம்புகின்றனர். ஆக., அலெக்சாந்தரின் மரணத்திற்கான சரியான காரணம் இன்றும் விவாதத்திற்குரியதாக உள்ளது. பலவீனமான உடல்நிலை, நோய், அல்லது விஷம் (சதி) போன்ற பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
லெவ் வைகாட்ஸ்கி, பெலருசிய-உருசிய உளவியலாளர் காலமான நாள் லெவ் வைகாட்ஸ்கி 20 ஆம் நூற்றாண்டின் தொடக்ககால உளவியல் துறையில் ஒரு முக்கிய நபராக இருந்தார். அவர் குறிப்பாக சமூக-கலாச்சார கோட்பாடு (Socio-cultural theory) மற்றும் வளர்ச்சி மண்டலக் கோட்பாடு (Zone of Proximal Development – ZPD) ஆகியவற்றிற்காக அறியப்படுகிறார். குழந்தைகளின் அறிவாற்றல் வளர்ச்சி தனிப்பட்ட செயல்முறை மட்டுமல்லாமல், சமூக மற்றும் கலாச்சார சூழல்களுடன் அவர்கள் கொள்ளும் தொடர்புகளாலும் தீர்மானிக்கப்படுகிறது என்று அவர் வாதிட்டார். அவரது பணிகள் கல்வி உளவியல், வளர்ச்சிக் கோட்பாடு மற்றும் சமூக அறிவாற்றல் துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அவர் தனது 37வது வயதிலேயே காசநோயால் காலமானார், ஆனால் அவரது குறுகிய ஆயுட்காலத்திற்குள் அவர் ஆற்றிய பங்களிப்புகள் இன்றும் உளவியல் மற்றும் கல்வி ஆராய்ச்சியில் பெரும் தாக்கத்தை செலுத்தி வருகின்றன.