TNPSC குரூப் 4 தேர்வு: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!

தமிழக அரசில் இருக்கும் பல்வேறு பதவிகளில் குரூப் 4 தேர்வு அதிக பேர் எழுதும் தேர்வாக உள்ளது

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 3935 காலிப்பணியிடங்களை நிரப்ப குரூப் 4 தேர்வு அறிவிக்கப்பட்டது. தேர்வர்கள் 25.04.2025 முதல் 24.05.2025 வரை தேர்வாணைய இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கபட்டு இருந்தது.

தமிழக அரசில் இருக்கும் பல்வேறு பதவிகளில் குரூப் 4 தேர்வு அதிக பேர் எழுதும் தேர்வாக உள்ளது. ஒரே கட்ட தேர்வு, 10-ம் வகுப்பு தகுதி போதும் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் இத்தேர்வை லட்சக்கணக்கில் எழுதி வருகின்றனர்.கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபடியாக 42 வரை இருக்க வேண்டும். வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர், வனக் காவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபடியாக 37 வரை இருக்கலாம். இதர பதவிகளுக்கு 18 முதல் 34 வரை இருக்கலாம். வயது வரம்பில் தளர்வு உள்ளது. குரூப் 4 தேர்வு ஒரே கட்ட தேர்வாகும். கட் ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்படும். நேர்முகத்தேர்வு எதுவும் கிடையாது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கு https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வர்கள் இணையதளம் வழியாக பதிவு செய்து பின்னர் தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (24-ந் தேதி) கடைசி நாளாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!