கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது . தென்காசி மாவட்டத்திலும் மழை பெய்து வருகிறது .
இந்த நிலையில் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது . வெள்ளப்பெருக்கு இல்லாதபோதிலும், மலைப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.